பதிப்புரிமை பற்றிய பொதுவான கேள்விகள்

இந்த வீடியோவில் பதிப்புரிமை பற்றிய பொதுவான சில கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளோம்:

Copyright Permissions - Copyright on YouTube

பதிப்புரிமை தொடர்பான பொதுவான கேள்விகள்

நியாயமான உபயோகம் என்றால் என்ன?

நியாயமான உபயோகம் என்பது சில சூழ்நிலைகளில் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பதிப்புரிமையாளரின் அனுமதியின்றி நீங்கள் மீண்டும் உபயோகிக்கலாம் எனத் தெரிவிக்கும் சட்டக் கோட்பாடு ஆகும்.

அமெரிக்காவில் நியாயமான உபயோகத்தின் கீழ் எவை தகுதி பெறுகின்றன என்பதை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

ஒவ்வொரு வீடியோவையும் தனித்தனியாக ஆராய்ந்து நியாயமான உபயோகமா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் பின்வரும் நான்கு காரணிகளைச் சார்ந்துள்ளன:

  • உபயோகத்தின் நோக்கமும் தன்மையும்
  • பதிப்புரிமை பெற்ற படைப்பின் தன்மை
  • பதிப்புரிமை பெற்ற படைப்பின் உபயோகிக்கப்பட்ட பகுதியின் அளவு மற்றும் முக்கியத் தன்மை
  • பதிப்புரிமை பெற்ற படைப்பிற்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு அல்லது அதன் மதிப்பில் ஏற்படும் மாற்றம்

எங்கள் நியாயமான உபயோகம் தொடர்பான பொதுவான கேள்விகளில்மேலும் அறிக.

பொதுக் களம் என்றால் என்ன?

படைப்புகள் படிப்படியாக அவற்றின் பதிப்புரிமைப் பாதுகாப்பை இழந்து “பொதுக் களம்” என்பதன் கீழ் வருகின்றன. இதன் மூலம் அனைவரும் அவற்றை விலை இல்லாமல் பயன்படுத்தலாம். பொதுவாகப் படைப்புகள் பொதுக் களத்தின் கீழ் வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.

பதிப்புரிமைப் பாதுகாப்பின் கால அளவு இந்தக் காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும்:

  • படைப்பு எங்கு, எப்போது வெளியிடப்பட்டது?
  • படைப்பு ஊதியம் கொடுத்து உருவாக்கப்பட்டதா?

அமெரிக்க ஃபெடரல் அரசாங்க ஏஜென்சிகளால் உருவாக்கப்படும் குறிப்பிட்ட சில படைப்புகள் வெளியிடப்பட்டதும் உடனடியாகப் பொதுக் களத்தில் சேர்ந்து விடும். பொதுக் களத்திற்கான விதிகள் நாட்டிற்கு நாடு மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

YouTubeல் ஒரு படைப்பை நீங்கள் பதிவேற்றுவதற்கு முன்பு அது பொதுக் களத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவது உங்கள் பொறுப்பாகும். பொதுக் களத்தில் உள்ள படைப்புகளுக்கான அதிகாரப்பூர்வப் பட்டியல் என்று எதுவுமில்லை. எனினும் உங்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள உதவி ஆவணங்கள் ஆன்லைனில் உள்ளன. உதாரணமாக, பொதுக் களத்தின் கீழ் வரக்கூடிய படைப்புகளுக்கான வழிகாட்டியைக் கார்னல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. YouTube உள்ளிட்ட எந்தவொரு தரப்பும், தொடர்புடைய அனைத்துப் படைப்புகளும் பதிப்புரிமைப் பாதுகாப்பு அற்றவை என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வருவிக்கப்பெற்ற படைப்பு என்றால் என்ன?

பதிப்புரிமையாளரின் சொந்த உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்க அவரின் அனுமதியை நீங்கள் பெற வேண்டும். வருவிக்கப்பெற்ற படைப்புகளில் ரசிகர்களின் கற்பனைக் கதை, தொடர்ச்சிகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் மற்றும் பல அடங்கக்கூடும். பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் கதாபாத்திரங்கள், கதைக் கருக்கள் மற்றும் பிறவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு முன்பு நிபுணரிடமிருந்து சட்ட ஆலோசனையைப் பெற முயலுங்கள்.

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பதிப்புரிமை பற்றிய கூடுதல் விவரங்களை நான் எங்கே கண்டறியலாம்?

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்/பிராந்தியங்களில் பதிப்புரிமை தொடர்பான சில உதவிகரமான தகவல்கள் மற்றும் இணைப்புகள் Your Europe இணையதளத்தில் உள்ளன.

உங்கள் நாட்டிற்குப் பொருந்தும் பதிப்புரிமைச் சட்டங்கள் குறித்த தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ளக்கூடிய சர்வதேச அறிவுசார் உடைமை மற்றும் பதிப்புரிமை அலுவலகங்களின் பட்டியல் உலக அறிவுசார் உடைமை அமைப்பிடம் (WIPO - World Intellectual Property Organization) உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட தளங்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன. மேலும் அவற்றை YouTube அங்கீகரிக்கவில்லை.

YouTubeல் பதிவேற்றுவது தொடர்பான கேள்விகள்

மற்றொருவரின் உள்ளடக்கத்தை எனது வீடியோவில் பயன்படுத்த நான் எப்படி அனுமதி பெறுவது?

உங்கள் வீடியோவில் பதிப்புரிமை பெற்ற` உள்ளடக்கத்தைச் சேர்க்கத் திட்டமிட்டால் பொதுவாக அவ்வாறு செய்வதற்கு முதலில் நீங்கள் அனுமதி பெற வேண்டும். YouTube இந்த உரிமைகளை வழங்க முடியாது. மேலும் அவற்றை வழங்கக்கூடிய தரப்பினரை நீங்கள் கண்டறிவதற்கும் எங்களால் உதவ முடியாது. இந்தச் செயல்முறையை நீங்களே சொந்தமாக அல்லது ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் ஆய்வு செய்து கையாள வேண்டும்.

உதாரணத்திற்கு, YouTubeல் ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை YouTube வழங்க முடியாது. வேறொருவரின் YouTube வீடியோவைப் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம். தங்களை எப்படித் தொடர்புகொள்ளலாம் என்பதைச் சில கிரியேட்டர்கள் அவர்களின் சேனலில் குறிப்பிட்டிருப்பார்கள்.

உங்கள் YouTube வீடியோக்களுக்கான பின்னணி இசையையோ சவுண்டு எஃபெக்ட்டுகளையோ YouTube ஆடியோ லைப்ரரியில் எளிதில் கண்டறியலாம். நீங்கள் பயன்படுத்துவதற்கு விலை இல்லாமல் கிடைக்கும் இசையைத் தேடலாம்.

உங்கள் வீடியோவில் வேறொருவரின் இசையைப் பயன்படுத்த நினைத்தால், இசையைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு இருக்கும் வழிகள் குறித்து மேலும் அறிக:

Options for using music in your videos

மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு நான் எவ்வாறு உரிமம் பெறுவது?

YouTubeல் வீடியோவைப் பதிவேற்றுவதற்கு முன்பு உங்கள் வீடியோவின் அனைத்து உறுப்புகளுக்குமான உரிமைகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். இசை (பின்னணியில் இயங்கினாலும் கூட), வீடியோ கிளிப்புகள், படங்கள் போன்றவை இந்த உறுப்புகளில் அடங்கும்.

முதலில் நேரடியாக உரிமைதாரர்களையோ பதிப்புரிமையாளர்களையோ தொடர்புகொண்டு உங்கள் உபயோகத்துக்குப் பொருத்தமான உரிமங்கள் குறித்து உரையாடுங்கள்.

பின்பு, உரிமத்தைச் சரிபாருங்கள். உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான வெளிப்படையான அனுமதியை உரிமங்கள் கொண்டிருக்கும். மேலும் உள்ளடக்கம் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பான வரம்புகளையும் உரிமங்கள் அவ்வப்போது கொண்டிருக்கும். எந்தவொரு உரிம ஒப்பந்தத்திலும் எந்தெந்த உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன, எவை உரிமையாளரிடம் உள்ளன என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்வதற்குச் சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்.

YouTube லைப்ரரியில் உள்ள விலை இல்லாமல் கிடைக்கும் இசை மற்றும் சவுண்டு எஃபெக்ட்டுகளைக் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப வீடியோக்களில் நீங்கள் பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: நீங்கள் கவர் பாடலை உருவாக்கினால் பதிப்புரிமையாளர்களிடம் இருந்து அனுமதி பெற்றிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் (எ.கா. பாடலாசிரியர் அல்லது இசை வெளியீட்டாளர்). அசல் சவுண்ட் ரெக்கார்டிங்கை மறுஉருவாக்கம் செய்யவோ, பாடல் வரிகளைக் காட்டவோ, வீடியோவில் அந்தப் பாடலைப் பயன்படுத்தவோ கூடுதல் உரிமங்களை நீங்கள் பெற வேண்டியிருக்கும்.

பயன்படுத்துவதற்கு நான் அனுமதி பெற்ற உள்ளடக்கம் ஏன் அகற்றப்பட்டது அல்லது தடைசெய்யப்பட்டது?

உங்கள் வீடியோவில் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கு இருந்தால் உங்கள் வீடியோவின் தலைப்பு மற்றும் URLலை அசல் பதிப்புரிமையாளருக்குக் கொடுங்கள். இந்தச் செயல் தவறுதலாக அகற்றப்படுவதையோ தடைசெய்யப்படுவதையோ தவிர்க்க உங்களுக்கு உதவும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக உங்கள் வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டால் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

உங்கள் வீடியோவை Content ID உரிமைகோரல் தவறுதலாகத் தடைசெய்திருப்பதாக நீங்கள் நினைத்தால்:

எனினும் உரிமைகோரலை மறுப்பதற்கு அல்லது எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக உங்களிடம் நீங்களே சில கேள்விகளைக் கேளுங்கள்:

  1. உங்கள் வீடியோவில் உள்ள உள்ளடக்கத்தின் பதிப்புரிமையாளர் நீங்களா?
  2. உங்கள் வீடியோவிலுள்ள அனைத்து மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கும் தகுந்த பதிப்புரிமையாளரிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளீர்களா?
  3. உங்கள் வீடியோ தகுந்த பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் நியாயமான உபயோகம், நியாயமாகக் கையாளுதல் அல்லது இதே மாதிரியான வேறு விதிவிலக்கின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதா?

மேலேயுள்ள நிபந்தனைகளில் ஒன்று உங்கள் வீடியோவிற்குப் பொருந்தினால், நீங்கள் உரிமைகோரலை மறுப்பதற்கான தகுந்த செயல்முறையை ஆய்வு செய்யலாம் அல்லது வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறலாம். இல்லையெனில், நீங்கள் பதிப்புரிமைச் சட்டங்களை மீறியிருக்கலாம்.

நான் பதிவுசெய்த அல்லது வாங்கிய உள்ளடக்கம் ஏன் அகற்றப்பட்டது?

உள்ளடக்கத்தை நீங்கள் வாங்கியதால் அதை YouTubeல் பதிவேற்றுவதற்கான உரிமைகள் உங்களிடம் உள்ளது என அர்த்தமாகாது. பதிப்புரிமையாளருக்கு நீங்கள் நன்றி தெரிவித்தாலும் கூட, நீங்கள் வாங்கிய உள்ளடக்கம் அடங்கிய வீடியோக்களைப் பதிவிடுவது இன்னும் பதிப்புரிமைச் சட்டத்தை மீறக்கூடும்.

மேலும் நீங்களே எதையேனும் ரெக்கார்டு செய்துள்ளீர்கள் என்பதால் அதை YouTubeல் பதிவேற்றுவதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறீர்கள் என எப்போதும் அர்த்தம் ஆகாது. உங்கள் ரெக்கார்டிங்கில் வேறு ஒருவருடைய பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கம் காணப்பட்டால் நீங்கள் தகுந்த உரிமையாளர்களிடம் இருந்து அனுமதியைப் பெற வேண்டும் (எ.கா. பின்னணியில் பதிப்புரிமை பெற்ற இசை ஒலிப்பது).

எனது வீடியோவைத் தவறான உரிமைகோருபவர் அகற்றுவதற்கு YouTube ஏன் அனுமதித்தது?
எங்களின் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் செயல்முறைகளில் தவறான உபயோகம், துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பான புகார்கள் மீது YouTube நடவடிக்கை எடுக்கிறது. குறிப்பிட்ட புகார்கள் அல்லது எங்கள் செயல்முறைகள் குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாத போதும், எங்கள் பதிப்புரிமைக் கருவிகள் மற்றும் செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம். தவறாகப் பயன்படுத்துபவர் என நாங்கள் கருதும் உரிமைகோருபவர்களை முற்றிலும் அனுமதிக்காத கொள்கையையும் நாங்கள் கொண்டுள்ளோம். பதிப்புரிமைச் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவது கணக்கு முடக்கத்திற்கு வழிவகுக்கும் (அகற்றுதல் கோரிக்கைகள் மற்றும் எதிர் அறிவிப்புகள் ஆகிய இரண்டிற்கும்).
பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல் சட்ட ஆலோசனை இல்லை. தகவலளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இவை வழங்கப்பட்டுள்ளன. சட்ட ஆலோசனையைப் பெற விரும்பினால், நீங்கள் ஒரு வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16795502280556796705
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false