Content ID எவ்வாறு செயல்படுகிறது?

சில பதிப்புரிமையாளர்கள் YouTubeல் தங்கள் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை எளிதாக அடையாளங்கண்டு நிர்வகிக்க Content IDயை (YouTubeன் தானியங்கு உள்ளடக்க அடையாளங்காணும் அமைப்பு) பயன்படுத்துகின்றனர்.

Content ID என்ன செய்யும்?

பதிப்புரிமையாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆடியோ மற்றும் விஷுவல் ஃபைல்களின் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் பொருத்தங்களை Content ID அடையாளம் காணும். YouTubeல் வீடியோ பதிவேற்றப்படும்போது தானாகவே அது Content ID மூலம் ஸ்கேன் செய்யப்படும்.

Content ID ஏதேனும் பொருத்தத்தைக் கண்டறிந்தால் பொருந்துகின்ற வீடியோ Content ID உரிமைகோரலைப் பெறும். பதிப்புரிமையாளரின் Content ID அமைப்புகளைப் பொறுத்து, Content ID உரிமைகோரலின் காரணமாகப் பின்வரும் நடவடிக்கைகளில் ஒன்று மேற்கொள்ளப்படும்:

  • தடைசெய்தல்: பார்க்க முடியாதபடி ஒரு வீடியோவைத் தடைசெய்யலாம்
  • வருமானம் ஈட்டுதல்: வீடியோவில் விளம்பரங்களை இயக்கி அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். சில சமயங்களில், அந்த வீடியோவைப் பதிவேற்றியவருடன் இந்த வருமானத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்
  • கண்காணித்தல்: அந்த வீடியோவின் பார்வையாளர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கலாம்

இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து வேறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, பொருந்துகின்ற ஒரு வீடியோ மூலம் ஒரு நாடு/பிராந்தியத்தில் வருமானம் ஈட்டலாம். அதே வீடியோ வேறொரு நாடு/பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது கண்காணிக்கப்படலாம்.

Content IDயை யாரெல்லாம் பயன்படுத்துவார்கள்?

குறிப்பிட்ட நிபந்தனையைப் பூர்த்திசெய்யும் பதிப்புரிமையாளர்களுக்கு Content ID கிடைக்கும். தகுதிபெற, YouTubeல் அடிக்கடி பதிவேற்றப்படும் அசல் உள்ளடக்கத்தின் கணிசமான பகுதிக்கான பிரத்தியேக உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

Content IDயை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான வெளிப்படையான வழிகாட்டுதல்களையும் YouTube அமைத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, Content ID உபயோகத்தையும் அதுதொடர்பான புகார்களையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

தொடர்ந்து தவறான Content ID உரிமைகோரல்களை மேற்கொள்ளும் பதிப்புரிமையாளர்களின் Content ID அணுகல் முடக்கப்படலாம். அத்துடன் YouTube உடன் அவர்கள் வைத்துள்ள பார்ட்னர்ஷிப்பும் நிறுத்தப்படலாம்.

நீங்கள் பதிப்புரிமையாளராக இருந்து உங்கள் உள்ளடக்கம் Content IDக்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதாகக் கருதினால், இந்தப் படிவத்தை நிரப்பி உங்கள் பதிப்புரிமை நிர்வாகத் தேவைகள் குறித்து எங்களுக்கு மேலும் தெரியப்படுத்தலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2217125037224081656
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false