பிராண்டின் உள்ளடக்கத்தை விளம்பரதாரருடன் இணைத்தல்

பிராண்டு விளம்பர உள்ளடக்கத் தொடரில் விளம்பரதாரருடன் நீங்கள் கூட்டு சேர்ந்திருந்தால், விளம்பரத் தொடரில் உள்ள உள்ளடக்கத்தைத் தங்கள் Google Ads கணக்கில் இணைப்பதற்கான கோரிக்கையை விளம்பரதாரர் தற்போது உங்களுக்கு அனுப்பலாம். அவரின் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், Google Adsஸில் உள்ளடக்கத்தின் செயல்திறன் அளவீடுகளை அவர் பார்க்கலாம். Google Ads பிளாட்ஃபார்ம்கள் மூலம் அனுமதிக்கப்பட்டவாறு உங்கள் YouTube வீடியோவைப் பார்ப்பவர்களுக்கு விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரரையும் (விளம்பரதாரரின் Google Ads கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தையும்) YouTube அனுமதிக்கும்.

பிராண்டின் உள்ளடக்கத்தை உங்கள் விளம்பரதாரருடன் இணைப்பது பின்வருபவற்றில் உங்களுக்கு உதவும்:

  • பிராண்டுகளுடன் கூட்டுசேர்வதை நிர்வகித்தல்
  • கட்டணமற்ற வீடியோ அளவீடுகளைப் பகிர்தல்
  • விளம்பரதாரர்கள் உங்கள் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரித்தல்

நீங்கள் ஏற்கெனவே இணைந்து பணியாற்றிய விளம்பரதாரர்களிடமிருந்து பெரும்பாலான இணைப்புக் கோரிக்கைகள் பெறப்படுகின்றன. ஆனால் இதுவரை நீங்கள் கூட்டு சேர்ந்திருக்காத பிராண்டுகளிடமிருந்து கோரிக்கைகளை நீங்கள் பெறக்கூடும். விளம்பரதாரரின் இணைப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதென்பது, அவருடன் நீங்கள் இணைந்து பணியாற்றியிருந்தாலும் இல்லாவிட்டாலும் முற்றிலும் உங்களைச் சார்ந்ததாகும். சேனலைச் சிறந்ததாக மாற்றுவதற்கான செயல்களையே எப்போதும் நீங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், விளம்பரதாரருக்குப் போதுமான உரிமைகளை நீங்கள் வழங்க வேண்டும். அதனால் விளம்பரதாரர் அவரின் விளம்பரப்படுத்தலில் உங்கள் வீடியோவைப் பயன்படுத்தலாம், அத்துடன் YouTube அந்த ஒப்பந்தத்தில் தலையிடாது. விளம்பரதாரருடன் கையொப்பமிடும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நீங்கள் புரிந்துகொண்டதை உறுதிசெய்துகொள்ளவும்.

இணைப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுதல்

விளம்பரதாரர் அவரின் Google Ads கணக்கில் உங்கள் உள்ளடக்கத்தை இணைக்க விரும்பியதும், YouTube மற்றும் YouTube Studioவில் மின்னஞ்சல் மற்றும் அறிவிப்புகள் மூலம் உங்களுக்கு அது குறித்துத் தெரிவிப்போம். YouTube Studio, YouTube Studio மொபைல் ஆப்ஸ், YouTube மொபைல் ஆப்ஸ் ஆகியவற்றில் கோரிக்கைகளை நீங்கள் பார்க்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம்.

உங்கள் மின்னஞ்சலில் உள்ள இணைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நேரடியாக “பிராண்டு இணைப்புக் கோரிக்கை” பக்கத்திற்குச் செல்வீர்கள், அங்கு உங்கள் வீடியோவை இணைக்கலாம் அல்லது கோரிக்கையை நிராகரிக்கலாம்.

YouTube Studioவில் உள்ள கோரிக்கைகளை நீங்கள் பார்க்கவும் பதிலளிக்கவும் செய்யலாம்:

  1. கம்ப்யூட்டரில், YouTube Studioவிற்குச் செல்லவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் "" என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தொடர்புடைய வீடியோவைக் கண்டறிந்து வீடியோவின் சிறுபடத்திற்கு அடுத்துள்ள, விவரங்கள் "" என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “பிராண்டு இணைப்பு” பிரிவில், விளம்பரதாரர் என்பதற்கு அடுத்துள்ள இணைப்புக் கோரிக்கையைப் பார்த்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் வீடியோவை இணைக்க வேண்டுமா அல்லது கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

உங்கள் உள்ளடக்கத்தின் இணைப்பை நீக்குதல்

இணைக்கப்பட்ட வீடியோவின் இணைப்பை நீங்களோ விளம்பரதாரரோ எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். விளம்பரதாரரின் வீடியோ இணைப்பை நீக்க, உங்கள் வீடியோவுக்கான “பிராண்டு இணைப்பு” பிரிவிற்குச் சென்று விளம்பரதாரர் என்பதற்கு அடுத்துள்ள இணைப்பை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பொதுவான கேள்விகள்

இணைப்புக் கோரிக்கைகள் எவ்வளவு நேரம் இருக்கும்?

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வீடியோ இணைப்புக் கோரிக்கைகள் காலாவதியாகாது என்றாலும், நிலுவையில் உள்ள இணைப்புக் கோரிக்கையை விளம்பரதாரர் ரத்துசெய்யலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வீடியோவின் இணைப்பையும் நீக்கலாம். உங்கள் உள்ளடக்கத்தின் இணைப்பை நீக்குவதென்பது விளம்பரதாரரின் பின்வருபவற்றை அகற்றும்:
  • உள்ளடக்கத்தின் செயல்திறன் அளவீடுகளுக்கான அணுகல்
  • இணைக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்கான திறன்
கூடுதலாக, கேட்கப்பட்ட வீடியோ நீக்கப்பட்டாலோ தனிப்பட்டது எனக் குறிக்கப்பட்டாலோ இணைப்புக் கோரிக்கை காலாவதியாகிவிடும்.

விளம்பரதாரர் ஏற்கெனவே அவரின் விளம்பரப்படுத்தலில் எனது வீடியோக்களைப் பயன்படுத்தியிருந்தால், எனது பிராண்டின் உள்ளடக்கத்தை அவரின் Google Ads கணக்கில் இணைக்க வேண்டுமா?

விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரர்கள் அவர்களின் கணக்கை உங்கள் உள்ளடக்கத்தில் இணைக்குமாறு கேட்க வேண்டியதில்லை. ஆனால் உங்கள் பிராண்டின் உள்ளடக்கத்தை அவர்களின் கணக்கில் இணைக்கும்படி  பரிந்துரைக்கிறோம். இணைப்பது என்பது பிராண்டு கூட்டாளர்களை மேலும் திறம்பட நிர்வகிக்கவும் வீடியோவின் இயல்பான வரவேற்பை விளம்பரதாரர் பார்க்கவும் உதவும். கூடுதலாக, தனிப்பட்ட வீடியோவை இணைப்பதால் மட்டும் உங்கள் சேனலின் உள்ளடக்கத்திற்கான அணுகலை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9122843695923535007
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false