நீங்கள் பார்க்கும் வீடியோக்களில் விளம்பரங்களை அனுமதித்தல்

YouTubeல் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குப் பிடித்த கிரியேட்டர்களை ஆதரிக்க உதவுவதோடு, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களை ஸ்ட்ரீமிங் சேவையைப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றன. நீங்கள் YouTube விளம்பரங்களைத் தடுக்கும்போது, YouTubeன் சேவை விதிமுறைகளை மீறுகிறீர்கள். நீங்கள் விளம்பரத் தடுப்பான்களைப் பயன்படுத்தினால், YouTubeல் விளம்பரங்களை அனுமதிக்கும்படியோ YouTube Premiumமுக்குப் பதிவுசெய்யும்படியோ உங்களிடம் கேட்போம். நீங்கள் விளம்பரத் தடுப்பான்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால், வீடியோவின் இயக்கத்தை நாங்கள் தடுக்கக்கூடும். இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, YouTubeல் விளம்பரங்களை அனுமதியுங்கள் அல்லது YouTube Premium சந்தாவிற்குப் பதிவுசெய்யுங்கள்.

கவனத்திற்கு: விளம்பரங்களைத் தடுக்கும் உங்கள் உலாவி நீட்டிப்புகள் வீடியோவின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடும்.

YouTubeல் எப்படி விளம்பரங்களை அனுமதிப்பது?

விளம்பரத் தடுப்பான் நீட்டிப்புக்கான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

AdBlock

AdBlock நீட்டிப்புக்கான ஏற்புப் பட்டியலில் YouTubeஐச் சேர்க்க:
  1. உங்கள் உலாவி நீட்டிப்பின் மேல் வலதுபுற மூலையில் உள்ள AdBlock என்பதைக் கிளிக் செய்யவும். சிலநேரம் எண்களால் AdBlock மறைக்கப்பட்டிருக்கக்கூடும்.
  2. இந்த வலைதளத்தில் உள்ள பக்கத்தில் இயக்க வேண்டாம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “இதில் AdBlockகை இயக்க வேண்டாம்” உரையாடலில், விலக்கு என்பதைக் கிளிக் செய்யவும். AdBlock ஐகான் அனுமதிக்கப்பட்டது என மாறும்.
  4. YouTubeஐ ரெஃப்ரெஷ் செய்யவும்.
     

Adblock Plus

Adblock Plus நீட்டிப்புக்கான ஏற்புப் பட்டியலில் YouTubeஐச் சேர்க்க:
  1. உங்கள் உலாவி நீட்டிப்பின் மேல் வலதுபுற மூலையில் உள்ள Adblock Plus என்பதைக் கிளிக் செய்யவும். சில நேரம் எண்களால் Adblock Plus மறைக்கப்பட்டிருக்கக்கூடும்.
  2. பவர் Power button icon பட்டனைக் கிளிக் செய்தால் அது இடதுபுறத்திற்கு நகரும்.
  3. YouTubeஐ ரெஃப்ரெஷ் செய்ய, புதுப்பி என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

uBlock Origin

uBlock Origin நீட்டிப்புக்கான ஏற்புப் பட்டியலில் YouTubeஐச் சேர்க்க:
  1. உங்கள் உலாவி நீட்டிப்பின் மேல் வலதுபுற மூலையில் உள்ள uBlock Origin என்பதைக் கிளிக் செய்யவும். சிலநேரம் எண்களால் uBlock Origin மறைக்கப்பட்டிருக்கக்கூடும்.
  2. பவர் பட்டனைக் கிளிக் செய்யவும். YouTubeல் விளம்பரங்கள் இப்போது தடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் ஐகான் சாம்பல் நிறமாக மாறும்.
  3. YouTubeஐ ரெஃப்ரெஷ் செய்ய, புதுப்பி Refresh icon என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

பிற விளம்பரத் தடுப்பான்கள்

பிற விளம்பரத் தடுப்பான் நீட்டிப்புகளுக்கான ஏற்புப் பட்டியலில் YouTubeஐச் சேர்க்க:
  1. உங்கள் உலாவிக்கான விளம்பரத் தடுப்பான் நீட்டிப்பின் ஐகானைக் கிளிக் செய்யவும். பொதுவாக, இது உங்கள் உலாவியில் மேல் வலதுபுற மூலையில் இருக்கும்.
    1. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விளம்பரத் தடுப்பான்களை நிறுவியிருக்கக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
  2. YouTubeக்கான விளம்பரத் தடுப்பானை முடக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். நீங்கள் ஒரு மெனு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கலாம் அல்லது ஒரு பட்டனைக் கிளிக் செய்ய வேண்டியிருக்கலாம்.
  3. வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ உங்கள் உலாவியின் "புதுப்பி" அல்லது "ரெஃப்ரெஷ் செய்" எனும் பட்டனைக் கிளிக் செய்வதன் மூலமோ YouTubeஐ ரெஃப்ரெஷ் செய்யவும்.
     

சிக்கலைப் புகாரளிப்பது எப்படி? 

உங்களிடம் விளம்பரத் தடுப்பான் ஏதும் இல்லாதபோதோ அது ஏற்கெனவே முடக்கப்பட்டிருக்கும்போதோ அதை முடக்குமாறு உங்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டால் எங்களிடம் கூறுங்கள். சிக்கலைப் புகாரளிக்க, மெசேஜின் கீழ் இடதுபுற மூலையில் உள்ள சிக்கலைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

YouTubeல் காட்டப்படும் விளம்பரங்களை நிர்வகிப்பது எப்படி? 

நீங்கள் பார்க்கும் YouTube வீடியோக்களிலோ Shortsஸிலோ தோன்றும் விளம்பரங்கள் உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் காட்டப்படுகின்றன. நீங்கள் பார்க்கும் வீடியோக்களில் விளம்பரங்கள் காட்டப்படுவது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த கிரியேட்டர்களை ஆதரிக்கும் அதே வேளையில் விளம்பரமில்லா YouTube அனுபவத்தைப் பெற விரும்பினால், YouTube Premium மெம்பர்ஷிப்பின் பலன்களையும் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
326352154202400749
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false