YouTubeல் உள்ள உரையாடல் AI கருவி குறித்து அறிந்துகொள்ளுதல்

இந்தக் கருவி அமெரிக்காவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட YouTube Premium உறுப்பினர்களுக்குத் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்தக் கருவியை Android சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். பரிசோதனைக்கான அணுகல் உங்களிடம் இருந்தால், குறிப்பிட்ட ஆங்கில வீடியோக்களில் இந்தக் கருவி காட்டப்படும். இதன் கிடைக்கும்நிலை எதிர்காலத்தில் மாறக்கூடும்.

நீங்கள் YouTubeல் ஒரு வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அது குறித்து மேலும் அறிந்துகொள்ள உரையாடல் AI கருவி மூலம் AI உடன் உரையாடலாம். எ.கா. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ பற்றிய கேள்விகளைக் கேட்கலாம், “தொடர்புடைய வீடியோவைப் பரிந்துரை” போன்ற பரிந்துரைக்கப்படும் ப்ராம்ப்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். 

தொடங்குவதற்கு: 

  1. Ask  என்பதைத் தட்டவும்.
  2. பரிந்துரைக்கப்படும் ப்ராம்ப்ட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்கள் சொந்தக் கேள்வியை டைப் செய்யவும்.
குறிப்பு: AI ஜெனரேட்டட் பதில்கள் பரிசோதனை அடிப்படையிலானவை. அவை YouTubeன் கருத்துகளைப் பிரதிபலிக்காமல் போகலாம். தரமும் துல்லியமும் மாறுபடக்கூடும். நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறோம், இந்த அம்சத்தை மேம்படுத்த விரும்புகிறோம். எனவே, ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தால் அதுகுறித்த கருத்தைச் சமர்ப்பியுங்கள்.

 பொதுவான கேள்விகள்

YouTubeல் உள்ள இந்த உரையாடல் AI கருவியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

உரையாடல் AI கருவி அமெரிக்காவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட YouTube Premium உறுப்பினர்களுக்குத் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்தக் கருவியை Android சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். 

பரிசோதனைக்கான அணுகல் உங்களிடம் இருந்தால், குறிப்பிட்ட ஆங்கில வீடியோக்களின் முகப்புப் பக்கத்தில் இந்தக் கருவி காட்டப்படும்.

YouTubeல் உள்ள உரையாடல் AI கருவி எப்படிச் செயல்படுகிறது?

நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான மொழித்திறன் மாடல்கள் (LLMs - Large Language Models) மூலம் பதில்கள் உருவாக்கப்படுகின்றன. LLMகள் YouTube மற்றும் இணையத்தில் இருந்து தகவல்களைப் பெறுகின்றன. LLMகள் மற்றும் ஜெனரேட்டிவ் AI குறித்து மேலும் அறிக.

ஜெனரேட்டிவ் AI, பரிசோதனைக் கட்டத்தில் உள்ள ஒரு தொழில்நுட்பம். தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. AI ஜெனரேட்டட் வழங்கும் பதில்களை மருத்துவ, சட்ட, நிதி சார்ந்த அல்லது பிற தொழில்முறை ஆலோசனையாக நம்ப வேண்டாம்.

என்னென்ன தரவு சேகரிக்கப்படுகின்றன? அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

இந்தக் கருவியை நீங்கள் பயன்படுத்தும்போது, அதன் பயன்பாடு தொடர்பான தரவு, நீங்கள் சமர்ப்பிக்கும் வினவல்கள் மற்றும் கருத்துகளை நாங்கள் சேகரிப்போம். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உருவாக்குவதற்கும் இந்தத் தரவு உதவுகின்றது. உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்ட உரையாடல்கள் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். 

இந்தக் கருவியை இயக்கும் ஜெனரேட்டிவ் மெஷின் லேர்னிங் மாடல்கள் போன்ற எங்கள் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தவும் மேம்படுத்தவும் மதிப்பாய்வாளர்கள் இந்தக் கருவியுடனான உங்கள் உரையாடல்களைப் படித்து, கருத்துக்களை வழங்கி, செயலாக்குவார்கள். இந்தச் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மதிப்பாய்வாளர்கள் பார்ப்பதற்கு முன்போ குறிப்பு எடுப்பதற்கு முன்போ உங்கள் உரையாடல்களை Google கணக்கிலிருந்து இணைப்பு நீக்குவதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை அகற்ற, தானியங்குக் கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். 

மதிப்பாய்வாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அல்லது விவரிக்கப்பட்ட உரையாடல்கள் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே அகற்றப்படாது. இந்த உரையாடல்கள் தனியாக வைக்கப்படும். உங்கள் Google கணக்கில் இணைக்கப்படாது. அதற்குப் பதிலாக, 3 வருடங்கள் வரை அவை வைக்கப்படும்.

உரையாடல்களில் ரகசியத் தகவல்களையோ மதிப்பாய்வாளர் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் கருதும் தகவல்களையோ வழங்காதீர்கள். எங்கள் தயாரிப்புகள், சேவைகள், மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மேம்படுத்த, நீங்கள் வழங்கும் தகவல்கள் பயன்படுத்தப்படலாம்.
குறிப்பு: கருவியைப் பரிசோதனை செய்வதற்குப் பதிவுசெய்த Premium உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் பரிசோதனையில் இருந்து வெளியேறலாம்.

 

கருவி குறித்த எனது கருத்தை நான் எப்படிச் சமர்ப்பிப்பது?
உதவிகரமாக இல்லாதது, பாதுகாப்பற்றது, துல்லியமற்றது அல்லது பிற காரணங்களுக்காகத் தவறானது என நீங்கள் நினைக்கும் AI ஜெனரேட்டட் பதிலைப் பெற்றால், அதுகுறித்த கருத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். இந்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கு உங்கள் கருத்து உதவும்.

கருவி குறித்த கருத்தைச் சமர்ப்பித்தல்

கருத்தைச் சமர்ப்பிக்க:

  1. வீடியோவின் கீழ், Ask  என்பதைத் தட்டவும்
  2. பதிலைப் பெற, பரிந்துரைக்கப்படும் ப்ராம்ப்ட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்கள் சொந்தக் கேள்வியை டைப் செய்யவும்.
  3. பதிலில், தம்ஸ்-அப் அல்லது தம்ஸ் டவுன் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
தம்ஸ் டவுன் ஐகானைத் தேர்ந்தெடுத்தால், விரும்பும்பட்சத்தில் உங்கள் ரேட்டிங்கிற்கான காரண விளக்கத்தைப் பகிரலாம்.

சட்டச் சிக்கலைப் புகாரளித்தல்

சட்டப்பூர்வக் காரணங்களுக்காக ஒரு பதிலைப் புகாரளிக்க:

  1. பதிலில், தம்ஸ் டவுன் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. சட்டச் சிக்கல்களைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  3. சட்டச் சிக்கல்களைப் புகாரளிக்க ப்ராம்ப்ட்டுகளைப் பின்பற்றவும். 

கருத்துகள்:

  • சிறப்புப் பயிற்சி பெற்ற குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்படும். கருத்துகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாத்தியமான பிரச்சனைகளை (பொருந்தும் சட்டங்களின் கீழ் தேவைப்படுவது உட்பட) அடையாளம் காணவும், சரிசெய்யவும், புகாரளிக்கவும் நிபுணர் மதிப்பாய்வு அவசியமாகும்.
  • எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கப் பயன்படுத்தப்படும். எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி YouTube தயாரிப்புகள், சேவைகள், மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வழங்கவும் மேம்படுத்தவும் உருவாக்கவும் YouTube இந்தத் தரவைப் பயன்படுத்துகிறது.

இந்தக் கருவி மூலம் YouTube உதவிக் குழுவிடம் உரையாட முடியுமா?

இல்லை. இந்தக் கருவி YouTube உதவிக் குழுவுடன் உங்களை இணைக்காது. மேலும் இது YouTube தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கான உதவிச் சேவையாகச் செயல்படுவதற்கு உருவாக்கப்படவில்லை.

எனக்கு விளம்பரங்களைக் காட்ட எனது உரையாடல்களை YouTube பயன்படுத்துமா?

இல்லை. உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட உங்கள் உரையாடல்கள் பயன்படுத்தப்படாது. இது மாற்றப்பட்டால், அந்த மாற்றம் குறித்து தெளிவாக உங்களுக்குத் தெரிவிப்போம். 

பயனர்களின் தரவை நாங்கள் எப்படித் தனிப்பட்டதாகவும், பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ள எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளைப் படியுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14278845583392643781
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false