YouTubeல் உள்ள பள்ளிக் கணக்குகளில் வரவிருக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளுதல்

Google Workspace for Education கணக்கு என்பது உங்கள் பள்ளியால் உங்களுக்கு வழங்கப்படும் மின்னஞ்சல் முகவரியாகும். இந்த வகைக் கணக்கில் YouTube போன்ற Google தயாரிப்புகளுக்கான அணுகலை உங்கள் பள்ளி நிர்வாகி நிர்வகிப்பார்.

செப்டம்பர் 1, 2021 முதல், உங்கள் பள்ளி நிர்வாகி உங்களை 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர் என்று குறிப்பிட்டால் உங்களது மாணவர்களுக்கான பள்ளி YouTube கணக்கு, வரம்பிற்குட்பட்ட புதிய YouTube பதிப்பிற்கு மாற்றப்படும். இனி உங்கள் YouTube சேனல் உங்களது பள்ளிக் கணக்குடன் இணைக்கப்படாது. அத்துடன் புதிய வீடியோக்களை அந்தச் சேனலில் நீங்கள் பதிவேற்றவும் முடியாது. உங்கள் Google Workspace for Education பள்ளிக் கணக்கின் மூலம் உள்நுழைந்து YouTubeஐப் பயன்படுத்தும்போது மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். தனிப்பட்ட கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது பொருந்தாது.

18 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கான கணக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

நீங்கள் ஆரம்பப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர் என்பதுடன் உங்கள் நிர்வாகி நீங்கள் 18 வயதிற்குட்பட்டவர் எனக் குறிப்பிட்டிருந்தால், உங்கள் Google Workspace for Education கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது YouTubeல் உள்ள உள்ளடக்கங்களையும் அம்சங்களையும் அணுக உங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.

உங்கள் பள்ளி நிர்வாகி உங்களை 18 வயதிற்குட்பட்டவர் எனக் குறிப்பிட்டிருந்தால் இந்த அம்சங்கள் உங்களுக்குக் கிடைக்காது:

பார்த்தல்

  • லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்கள்

ஈடுபடுதல்

  • அறிவிப்புகள் (செயல்பாட்டின் சிறப்பம்சங்களுடன் கூடிய பிரத்தியேக அறிவிப்புகளைத் தவிர)
  • கருத்துகள்
  • நேரலை அரட்டை
  • உருவாக்குதல்
  • சேனல்
  • லைவ் ஸ்ட்ரீம்
  • இடுகைகள்
  • பொதுவான மற்றும் பட்டியலிடப்படாத பிளேலிஸ்ட்
  • கதைகள்
  • Shorts
  • வீடியோ பதிவேற்றங்கள்

வாங்குதல்

  • சேனல் மெம்பர்ஷிப்கள்
  • கிரியேட்டர் விற்பனைப் பொருட்கள்
  • YouTube நன்கொடை
  • திரைப்படங்கள் & டிவி ஷோக்கள்
  • Super Chat & Super Stickers

YouTube ஆப்ஸ்

  • YouTube Music
  • YouTube Studio
  • YouTube TV
  • YouTube VR

மற்றவை

  • டிவியில் அலைபரப்புதல்
  • இணைக்கப்பட்ட கேமிங் கணக்குகள்
  • மறைநிலை
  • பிரத்தியேக விளம்பரங்கள்
  • கட்டுப்பாட்டுப் பயன்முறை

உள்ளடக்கத்தைப் பதிவிறக்கிச் சேமித்தல்

நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனில்:

உங்கள் பள்ளி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்:

  • உங்கள் கணக்கை 18 வயதிற்கு மேற்பட்டவருடையது எனக் குறிக்குமாறு உங்கள் பள்ளி நிர்வாகியிடம் கேட்கவும்.

நிர்வாகி உங்கள் அமைப்புகளை மாற்றியபிறகு:

  • YouTubeல் உள்நுழையவும்.
  • சேனலை உருவாக்கு என்பதற்குச் சென்று செயல்முறையை நிறைவுசெய்யவும். உங்கள் கணக்கு இப்போது காட்டப்படும். உங்கள் பள்ளிக் கணக்கின் YouTube சேனலில் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றலாம்.

நீங்கள் 18 வயதிற்குட்பட்டவர் எனில்:

  • நீங்கள் YouTubeல் உருவாக்கிய வீடியோக்கள், மற்றும் கருத்துகள், இதுவரை தேடியவை போன்ற பிற தரவைப் பதிவிறக்கவும் சேமிக்கவும் Google Takeoutடைப் பயன்படுத்தவும். உங்கள் கணக்கு செப்டம்பர் 2021க்குப் பிறகு உருவாக்கப்பட்டிருந்தால் உங்கள் பள்ளி நிர்வாகி உங்களை 18 வயதிற்குட்பட்டவர் எனக் குறித்ததில் இருந்து 60 நாட்களுக்குள் உங்கள் தரவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.
கவனத்திற்கு: பள்ளி நிர்வாகி உங்கள் கணக்கிற்கு Google Takeoutடை இயக்கினால் மட்டுமே நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15823437124361476058
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false