YouTube Premiumமின் கட்டணமற்ற உபயோகங்கள் மற்றும் சலுகைகள் குறித்து அறிந்துகொள்ளுதல்

பிரத்தியேக அம்சங்கள், படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான விஷயங்கள் போன்ற பலவற்றுடன் உங்கள் வீடியோ மற்றும் இசை அனுபவத்தை YouTube Premium மேம்படுத்துகிறது. YouTube Premium அல்லது YouTube Music Premiumமைப் புதிதாகப் பயன்படுத்துகிறீர்கள் எனில், கட்டணமற்ற உபயோக மெம்பர்ஷிப்பிற்குப் பதிவு செய்ய நீங்கள் தகுதிபெறக்கூடும். பின்வரும் தகவல்களைப் படித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

கட்டணமற்ற உபயோகங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

  • கட்டணமற்ற உபயோகத்திற்கு நீங்கள் பதிவு செய்தால், YouTube Premium அல்லது YouTube Music Premium உறுப்பினர்கள் பெறும் அதே மெம்பர்ஷிப் பலன்களையே பெறுவீர்கள்.
  • பதிவு செய்யும்போது எங்கள் பதிவுகளுக்காக உங்களின் பேமெண்ட் முறையை உள்ளிடும்படி கேட்கப்படும். உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் அங்கீகரிப்புக் கட்டணம் விதிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். உங்களின் பேமெண்ட் முறை சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்த இது எங்களுக்கு உதவுகிறது. இந்த அங்கீகரிப்புக் கட்டணம் செயலாக்கப்படாது என்பதால் 1 முதல் 14 நாட்களில் இது மறைந்துவிடும்.
  • கட்டணமற்ற உபயோகக் காலம் முடிவடைந்ததும், ஃபைலில் உள்ள பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி உங்கள் மெம்பர்ஷிப் தானாகப் புதுப்பிக்கப்படும். கட்டணமற்ற உபயோகக் காலம் முடிவடைவதற்கு முன்பு நீங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்தால் தவிர, தற்போதைய மெம்பர்ஷிப் கட்டணம் மாதாந்திர அடிப்படையில் உங்களுக்குத் தொடர்ச்சியாக விதிக்கப்படும்.
  • கட்டணமற்ற உபயோகக் காலத்தின்போது நீங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்தால், அந்தக் காலம் முடிந்தவுடன் Premium பலன்களுக்கான அணுகலை இழந்துவிடுவீர்கள்.
கவனத்திற்கு: கீழுள்ள தகுதிநிலை நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்யாவிட்டால் கட்டணமற்ற உபயோகத்திற்கான உங்கள் கோரிக்கை செயலாக்கப்படாது.

கட்டணமற்ற உபயோகத்தைப் பெறுவதற்கான தகுதிநிலை குறித்த விவரங்கள்

கவனத்திற்கு: 1 மாதக் கட்டணமற்ற உபயோகங்கள் அல்லது கூடுதல் மாதங்களுக்கான கட்டணமற்ற உபயோகங்களைப் பொறுத்தவரை, ஒரு பேமெண்ட் முறைக்கு ஒரு கட்டணமற்ற உபயோகத்திற்கு மட்டுமே நீங்கள் பதிவுசெய்ய முடியும்.

Workspace கணக்குகளை உடைய பயனர்களுக்கு:

  • Workspace கணக்கை (Workspace Individual பதிப்புக் கணக்கைத் தவிர) பயன்படுத்தி YouTube Premium தனிநபர் அல்லது குடும்ப மெம்பர்ஷிப்பில் பதிவுசெய்ய முடியாது.
  • எந்தவொரு Workspace கணக்கையும் பயன்படுத்தி YouTube Premium மாணவர் மெம்பர்ஷிப்புக்கு நீங்கள் பதிவுசெய்யலாம்.
  • கட்டணமற்ற உபயோகக் காலத்திற்குத் தகுதிபெற்றிருந்து அதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்குக் காட்டப்படவில்லை என்றால் உங்களின் தனிப்பட்ட கணக்கிற்கு மாறி youtube.com/premium பக்கத்தில் பதிவு செய்யவும்.

YouTube Premium, Music Premium ஆகியவற்றுக்கான 1 மாதக் கட்டணமற்ற உபயோகங்கள்:

  • 1 மாதக் கட்டணமற்ற உபயோகங்கள் இவர்களுக்குக் கிடைக்கும்:
    • முதல்முறையாகப் பயன்படுத்தும் உறுப்பினர்கள்
    • குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பு YouTube Premium, Music Premium அல்லது Google Play மெம்பர்ஷிப்பை ரத்துசெய்த பயனர்கள்
  • 12 மாதக் காலகட்டத்தில் 1 கட்டணமற்ற உபயோகம் மட்டுமே அனுமதிக்கப்படும்

YouTube Premium & Music Premiumமின் நீட்டிக்கப்பட்ட கட்டணமற்ற உபயோகக் காலம்: சில சமயங்களில் 1 மாதத்திற்கும் மேலாகக் கட்டணமற்ற உபயோகக் காலத்தை நீட்டிப்போம்.

  • முதல்முறை பயன்படுத்தும் உறுப்பினர்களுக்கோ முந்தைய மெம்பர்ஷிப்பை ரத்துசெய்து 3 ஆண்டுகள் கழித்தோ கட்டணமற்ற உபயோகத்தின் நீட்டிப்புக் காலம் கிடைக்கும்.
  • 3 ஆண்டு காலத்தில் 1 நீட்டிக்கப்பட்ட கட்டணமற்ற உபயோகம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
கவனத்திற்கு: தகுதிநிலை நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்யாவிட்டால் கட்டணமற்ற உபயோகத்திற்கான உங்கள் கோரிக்கை செயலாக்கப்படாது.

கட்டணமற்ற உபயோகத்திற்கான உங்கள் தகுதிநிலையைப் பார்த்தல்

கட்டணமற்ற உபயோகத்தைப் பெறுவதற்கான உங்கள் தகுதிநிலையைக் கம்ப்யூட்டரில் பார்க்க:

  1. உங்கள் YouTube கணக்கில் உள்நுழையவும்.
  2. youtube.com/paid_memberships பக்கத்திற்குச் செல்லவும்.
  3. YouTube வழங்கும் ஆஃபர்கள் என்பதற்குக் கீழே, கட்டணமற்ற உபயோகத்திற்குத் தகுதிபெறும் ஆஃபர்களைப் பட்டியலிடுவோம்.
  4. அந்த ஆஃபர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை ரிடீம் செய்வதற்கான படிகளைப் பின்பற்றவும்.
கவனத்திற்கு: தகுதிநிலை நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்யாவிட்டால் கட்டணமற்ற உபயோகத்திற்கான உங்கள் கோரிக்கை செயலாக்கப்படாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5656927167276042062
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false