Xbox Series X|Sஸில் YouTubeஐப் பார்த்தல்

இப்போது Xbox Series X|Sஸில் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம். YouTube ஆப்ஸில் நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனல்களைப் பார்க்கலாம், வீடியோக்களைத் தேடலாம், உங்கள் மொபைல் சாதனத்தை ரிமோட்டாகப் பயன்படுத்தலாம்.

Xbox One S, Xbox One X, Xbox Series S, Xbox Series X ஆகிய மாடல்களில் YouTube 4Kயில் கிடைக்கிறது. Xbox One கன்சோலின் அதிகபட்சத் தெளிவுத்திறன் 1080p. Xbox One S, Xbox One X, Xbox Series S, Xbox Series X ஆகிய மாடல்களில் HDR வீடியோ இயக்கம் ஆதரிக்கப்படுகிறது.

 YouTube ஆப்ஸைப் பதிவிறக்குதல்

 YouTubeல் உள்நுழைதல் அல்லது வெளியேறுதல்

YouTube ஆப்ஸை முதல் முறையாகத் திறக்கும்போது உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம். உள்நுழைந்தவுடன் உங்கள் பிளேலிஸ்ட்கள், சந்தாக்கள் போன்ற பல YouTube அம்சங்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். உள்நுழைவதற்கு இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

உங்கள் Xbox Series X|Sஸில்:

  1. உள்நுழைதல் & அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்
  2. உள்நுழை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செயல்படுத்தல் குறியீடு காட்டப்படும்.

உங்கள் கம்ப்யூட்டரில்:

  1. www.youtube.com/activate என்ற பக்கத்திற்குச் சென்று Xbox Series S அல்லது Xஸில் காட்டப்படும் செயல்படுத்தல் குறியீட்டை உள்ளிடவும்.
  2. அணுகலை அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும், இது உள்நுழைவுச் செயல்முறையை நிறைவுசெய்யும்.

Xbox Series X|Sஸில் இருந்து உங்கள் கணக்கின் இணைப்பை நீக்குவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வீடியோ மற்றும் குரல் கட்டுப்பாடுகள்

பிளே செய்வதற்கு ஒரு வீடியோவைத் தேர்ந்தெடுத்தவுடன் பிளேயர் கட்டுப்பாடுகள் பட்டி தோன்றும், அதில் பின்வரும் செயல்களைச் செய்யலாம்:

  • பின்செல் - பின்செல்வதற்கான வேகத்தை அதிகரிக்க A என்பதை அழுத்தவும்.
  • இடைநிறுத்து/தொடங்கு - வீடியோவை இடைநிறுத்தலாம் அல்லது மீண்டும் தொடங்கலாம்.
  • வேகமாக முன்செல் - வேகமாக முன்செல்ல A என்பதை அழுத்தவும்.
  • வசனங்கள் - வீடியோவிற்கு வசனங்கள் இருந்தால் அவற்றைப் பார்க்க இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

வீடியோக்களை உலாவுவதற்கான பக்கத்திற்குத் திரும்ப B பட்டனைப் பயன்படுத்தவும்.

கவனத்திற்கு: வீடியோக்களை வினாடிக்கு 60 ஃபிரேம்களில் 4K தெளிவுத்திறன் வரை பிளே செய்யலாம்.

உங்கள் குரலைப் பயன்படுத்தியும் YouTube ஆப்ஸைக் கட்டுப்படுத்தலாம். குரல் கட்டுப்பாட்டை இயக்க "Xbox Select" எனக் கூறவும். திரையில் ஹைலைட் செய்யப்படும் சொல்லையோ சொற்றொடரையோ கூறி அதைத் திறக்கலாம்.

உங்கள் மொபைல் சாதனத்தை இணைத்தல்
உங்கள் மொபைல் சாதனத்தை ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்தலாம். m.youtube.com, Android ஆப்ஸுக்கான YouTube அல்லது YouTube iOS ஆப்ஸ் மூலம் Xbox Series X|Sஸை இணைப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.

Xbox பிழைச் செய்தி

“YouTube தற்போது கிடைக்கவில்லை” எனும் பிழைச் செய்தி காட்டப்பட்டால் உங்கள் இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருக்கக்கூடும்.

சிக்கலைச் சரிசெய்ய, பிழையறிந்து திருத்துதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13331867778847368949
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false