YouTube கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் குறித்த தகவல்கள்

கிரியேட்டர் & கலைஞருக்கான கருத்துக்கணிப்பில் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கிரியேட்டர்களின் YouTube சேனல்கள் பங்கேற்பது அவர்களின் தன்னார்வத்தைப் பொறுத்தது.

YouTube Studio அமைப்புகள் பிரிவிலுள்ள கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் அம்சத்தில் கருத்துக்கணிப்பைப் பார்க்கலாம். அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சேனல் உரிமையாளர்கள் மட்டுமே இந்த அமைப்பைத் தற்போது பயன்படுத்த முடியும்.

YouTube Studio மொபைல் ஆப்ஸில் உள்ள அமைப்புகள் பிரிவிலும் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸைப் பார்க்கலாம்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸில் YouTube கலைஞர்களும் கிரியேட்டர்களும் பகிரும் தரவு அவர்களை நன்றாகப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் சேகரிக்கும் குறிப்பிட்ட தகவல்கள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் கிரியேட்டர்கள் தற்போது டெமோகிராஃபிக்ஸ் மற்றும் அடையாளத் தகவல்களை YouTube உடன் பகிரத் தேர்வுசெய்யலாம்.

எங்கள் சிஸ்டங்கள் தவறுதலாகப் பாகுபாடு காட்டாமல் இருப்பதை உறுதிசெய்ய, YouTube சேனல்கள் குறித்த இந்தத் தகவல்கள் எங்களுக்கு உதவும்.

YouTube அனைவருக்கும் ஏற்றதாகவும் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களிடம் தற்போது YouTube சேனல்கள் பற்றிய அடையாளத் தகவல்கள் இல்லாததால் எங்கள் சிஸ்டங்களின் மதிப்பாய்வுச் செயல்முறை குறைவாக உள்ளது. குறிப்பிட்ட டெமோகிராஃபிக்ஸ் அல்லது அடையாளம் சார்ந்த கிரியேட்டர் மற்றும் கலைஞர் சமூகங்களின் சேனல்களுக்கு எங்கள் தயாரிப்புகளும் கொள்கைகளும் எப்படிப் பொருந்துகின்றன என்பதை மதிப்பிடுவதற்கான எந்த அளவீடும் எங்களிடம் இல்லை.

குறிப்பு: அடையாளம் தனிப்பட்டது என்பதை அறிவோம்; இந்தத் தகவல்களைப் பகிர்வது விருப்பத்திற்குரியது. இந்த அமைப்பு எங்களுக்கு அடையாளத் தரவை வழங்குகிறது, இல்லையெனில் YouTubeல் கிரியேட்டர்கள் மற்றும் கலைஞர்களின் சேனல்கள் குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள முடியாது. கருத்துக்கணிப்பில் நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்கள் YouTube சேனலில் சேமிக்கப்படும். அவை பிற Google தயாரிப்புகளால் பயன்படுத்தப்படாது. நீங்கள் வழங்கும் தகவல்கள் YouTubeன் சிஸ்டங்களில் தனிப்பட்ட வீடியோ/சேனல் பெறும் வரவேற்பில் பாதிப்பை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படாது.

யுனைடெட் கிங்டம் கிரியேட்டர்கள் அனைவரையும் அழைக்கிறோம்: கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் Studio அமைப்பு

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் தரவை நாங்கள் பயன்படுத்தும் விதம்

சேகரித்த தரவை வெவ்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரியேட்டர்கள் மற்றும் கலைஞர்களின் சேனல்களுக்கு YouTube செயல்படும் விதத்தை மதிப்பிடப் பயன்படுத்துவோம். நீங்கள் பகிரும் தரவை இவற்றுக்காகப் பயன்படுத்துவோம்:

  • வெவ்வேறு சமூகங்களின் உள்ளடக்கத்தை எங்கள் அல்காரிதங்களும் சிஸ்டங்களும் எப்படிக் கையாளுகின்றன என்பதைப் பரிசோதித்தல்
  • YouTubeல் வெவ்வேறு சமூகங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்
  • உபத்திரவம், வெறுப்பு உட்பட தவறான பயன்பாட்டின் சாத்தியக்கூறுகளை அடையாளம் காணுதல்
  • எங்களின் தற்போதைய திட்டங்கள், விளம்பரங்கள், பலன்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல்

குறிப்பிட்ட சமூகங்களைப் பாதிக்கும் சிக்கல்களை எங்கள் சிஸ்டங்களில் கண்டறிந்தால் அவற்றைச் சரிசெய்யக் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் இந்தத் தொடர் முயற்சிகளின் முன்னேற்றத்தை உங்களிடம் தொடர்ந்து பகிர்வோம்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸில் உங்கள் தகவல்களைப் பகிரத் தேர்வுசெய்தால் Google தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க உங்கள் தகவல்களை Google LLC வைத்திருக்கும். நீங்கள் பகிரும் தகவல்கள் உங்கள் YouTube சேனலில் சேமிக்கப்படும். அவை பிற Google தயாரிப்புகளால் பயன்படுத்தப்படாது. உங்கள் ஒப்புதலின்றி அவை பொதுவில் காட்டப்படாது அல்லது விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது.

நீங்கள் பகிரும் தகவல்களை எப்படிப் பயன்படுத்துவோம் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் இதோ:

வெவ்வேறு சமூகங்களின் உள்ளடக்கத்தை எங்கள் அல்காரிதங்களும் சிஸ்டங்களும் எப்படிக் கையாளுகின்றன என்பதைப் பரிசோதித்தல்

வெவ்வேறு சமூகங்கள் பதிவேற்றும் உள்ளடக்கத்தை எங்கள் சிஸ்டங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்ள இந்தத் தரவு உதவும்.
எங்கள் தானியங்கு சிஸ்டங்களிலுள்ள சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிவதே எங்கள் இலக்காகும். சிஸ்டங்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் இருப்பதை உறுதிசெய்ய உதவுவதற்கு, நாங்கள் கண்டறியும் பிழைகளையும் சரிசெய்ய விரும்புகிறோம்.

YouTubeல் வெவ்வேறு சமூகங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்

YouTubeல் வெவ்வேறு கிரியேட்டர் சமூகங்கள் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவும் இந்தத் தரவு பயன்படுத்தப்படும்.

YouTubeல் வெவ்வேறு சமூகங்கள் எப்படி வருமானம் ஈட்டுகின்றன என்று பரிசோதிப்பது கிரியேட்டர் சமூகங்களின் வளர்ச்சியை எப்படி மதிப்பிடுவோம் என்பதற்கான உதாரணமாகும். வருமானம் ஈட்டுதல் தொடர்பான எங்கள் சிஸ்டங்கள் எதிர்பார்த்த அளவிற்குச் செயல்படாத சூழல்கள் குறித்து கிரியேட்டர்களும் கலைஞர்களும் எங்களிடம் கருத்து தெரிவித்துள்ளனர். எங்கள் சிஸ்டங்களும் கொள்கைகளும் அனைத்துக் கிரியேட்டர்களுக்கும் உள்ளடக்க வகைகளுக்கும் ஏற்ற வகையில் செயல்படுவதை உறுதிசெய்யப் பணியாற்றி வருகிறோம்.

உபத்திரவம், வெறுப்பு உட்பட தீங்கிழைக்கும் நடவடிக்கைகளின் சாத்தியக்கூறுகளை அடையாளம் காணுதல்

வெறுப்பு மற்றும் உபத்திரவம் தொடர்பான எங்கள் கொள்கைகளை உள்ளடக்கம் மீறினால் அதை அகற்றுவோம். ஆனாலும், வெறுக்கத்தக்க மற்றும் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் உள்ளடக்கம் மற்றும் கருத்துகளால் பல கிரியேட்டர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரிந்தது. இந்த வகையான நடவடிக்கையால் பல்வேறு கிரியேட்டர் சமூகங்கள் எப்படிப் பாதிக்கப்படக்கூடும் என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்ள இந்தத் தரவு எங்களுக்கு உதவும். காலப்போக்கில் இது எங்கள் தானியங்கு சிஸ்டங்களையும் மேம்படுத்தும்.

எங்களின் தற்போதைய திட்டங்கள், விளம்பரங்கள், பலன்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல்

திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான அழைப்புகளை உங்களுக்கு அனுப்பும் பொருட்டு உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்த கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸில் நீங்கள் ஒப்புதலளிக்கலாம். எங்களின் தற்போதைய திட்டங்கள், விளம்பரங்கள், பலன்கள் ஆகியவற்றை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள இந்தத் தகவல்கள் உதவக்கூடும். வளர்ந்து வரும் கிரியேட்டர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்கள், கிரியேட்டர் நிகழ்வுகள் போன்றவை இந்தப் பலன்களில் அடங்கும். அத்துடன், கிரியேட்டர்களுடனான ஆய்வுகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். இந்த ஆய்வுகளில் கவனக் குழுக்கள், நேரில் கருத்து கேட்கும் அமர்வுகள், கருத்துக்கணிப்புகள் மற்றும் பிற வகையான ஆய்வுகள் அடங்கும். இதன் மூலம் எங்கள் தயாரிப்பு மேம்பாட்டுக் குழுக்களால் கிரியேட்டர்களின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ள முடியும். YouTubeல் சமூகங்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் பல கிரியேட்டர்களுக்கு ஆய்வு அழைப்புகளை அனுப்ப, கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸில் உள்ள தகவல்கள் எங்களுக்கு உதவும்.

உங்கள் பதில்களை மாற்றுதல்/நீக்குதல்

உங்கள் பதில்களை எப்படி நீக்குவது என்பதற்கான வழிமுறைகளை அறிய கீழே உள்ளவற்றைப் படியுங்கள். நீங்கள் பகிர்ந்த தகவல்களை 45 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம் (ஒருமுறை மட்டும்). தகவல்களை அடுத்து எந்தத் தேதியில் மீண்டும் அனுப்பலாம் என்ற தகவல் Studioவில் காட்டப்படும். உங்கள் பதில்களை முற்றிலுமாக எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும்.

கவனத்திற்கு: இந்தத் தகவல்களை நீங்கள் மாற்றுவதோ நீக்குவதோ YouTubeல் உங்கள் உள்ளடக்கத்தின் வரவேற்பைப் பாதிக்காது.

YouTube Studioவில் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களை மாற்றுதல்:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுறத்தில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கருத்துக்கணிப்புப் பதில்களை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் பதில்களை மாற்றவும்.
  6. சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

YouTube Studio ஆப்ஸில் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களை மாற்றுதல்:

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. மெனுவில் அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  4. சேனல் என்பதன் கீழ் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸைத் தட்டவும்.
  5. கருத்துக்கணிப்புப் பதில்களை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் பதில்களை மாற்றவும்.
  7. சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

YouTube Studioவில் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களை நீக்குதல்:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுறத்தில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. தரவை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உறுதிப்படுத்துதல் பாப்-அப் காட்டப்படும்போது நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

YouTube Studio ஆப்ஸில் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களை நீக்குதல்:

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. மெனுவில் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. சேனல் என்பதன் கீழ் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸைத் தட்டவும்.
  5. தரவை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உறுதிப்படுத்துதல் பாப்-அப் காட்டப்படும்போது நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களைப் பதிவிறக்குதல்:

உங்கள் 'கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ்' தரவைப் பதிவிறக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் YouTube சேனல் அல்லது சேனல்களுக்கான தரவைப் பதிவிறக்க விரும்பினால், பிராண்டு கணக்கின் மூலம் அல்லாமல் உங்கள் தனிப்பட்ட Google கணக்குடன் உள்நுழைய வேண்டும்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் குறித்து மேலும் அறிந்துகொள்ளுதல்

இந்த அமைப்பை நான் எப்போது பயன்படுத்தலாம்?

அமெரிக்காவில் உள்ள கலைஞர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் 2021ல் கிரியேட்டர் மற்றும் கலைஞர் டெமோகிராஃபிக்ஸ் கருத்துக்கணிப்பை வெளியிட்டோம். ஜூலை 2023ல் அதை யுனைடெட் கிங்டமிலும், செப்டம்பர் 2023ல் பிரேசிலில் உள்ளவர்களுக்கும் வெளியிட்டோம். இப்போது இந்தியாவில் உள்ளவர்களுக்கு வெளியிடுகிறோம். இந்தக் கேள்விகளைக் கம்ப்யூட்டரில் YouTube Studio அமைப்புகள் பிரிவிலுள்ள கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் என்பதில் பார்க்கலாம்.

இந்த அமைப்பைப் பெற நீங்கள் சேனல் உரிமையாளராக இருக்க வேண்டும். பிராண்டு கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் நீங்கள் அதன் முதன்மை உரிமையாளராக இருக்க வேண்டும். YouTube சேனல் அனுமதிகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் நீங்கள் அதன் உரிமையாளராக இருக்க வேண்டும்.

இந்த அமைப்பை எப்போது பிற நாடுகள்/பிராந்தியங்களுக்கும் கூடுதல் அடையாளங்களுக்கும் விரிவுபடுத்துவீர்கள்?

2023ல் இந்தியாவிற்கு விரிவுபடுத்துகிறோம். அத்துடன் விரைவில் பல நாடுகள்/பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதுமுள்ள கிரியேட்டர்கள் தங்கள் அடையாளங்களை வரையறுப்பதற்குத் தேவையான அனைத்து வகைகளும் விருப்பங்களும் கருத்துக்கணிப்பில் வழங்கப்படவில்லை என்பதை அறிவோம். எதிர்காலத்தில் இந்த வகைகளையும் விருப்பங்களையும் விரிவுபடுத்துவோம்.

கிரியேட்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்குமான அனுபவத்தை மேம்படுத்த, ஏற்கெனவே மேற்கொள்ளப்படும் பிற நடவடிக்கைகளுடன் கூடுதலாக இந்த அமைப்பும் இருக்கும். உதாரணமாக, YouTubeஐ அணுகுவதை எளிதாக்கவும் அனைவருக்கும் ஏற்ற வகையில் அது இருப்பதை உறுதிசெய்ய உதவவும் மாற்றுத்திறனாளிக் கிரியேட்டர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் YouTube தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸில் உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க வேண்டுமா?

இல்லை. நீங்கள் கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸை நிரப்புவதாக இருந்தால் அதிலுள்ள ஒவ்வொரு கேள்வியும் விருப்பத்திற்குரியதே. சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்காமல் இருக்கலாம் அல்லது “பதிலளிக்க விருப்பமில்லை” என்பதைத் தேர்வுசெய்யலாம்.

இந்த அமைப்பு எனது சேனலுக்குக் கிடைக்கும் வரவேற்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நீங்கள் பகிரும் தகவல்கள் YouTubeன் சிஸ்டங்களில் தனிப்பட்ட உள்ளடக்கத்தின் செயல்திறனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படாது.

எங்கள் சிஸ்டங்கள் தவறுதலாகப் பாகுபாடு காட்டாமல் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். YouTubeன் பகுதிகளை (எங்களின் தேடல், கண்டறிதல், வருமானம் ஈட்டுதல் சிஸ்டங்கள் போன்றவை) மதிப்பிட கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸில் உள்ள தரவு பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட சமூகங்களைப் பாதிக்கும் பிழைகளை நாங்கள் கண்டறிந்தால், எங்கள் சிஸ்டங்களுக்கான பயிற்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி அவற்றை மேலும் துல்லியமானதாகவும் அனைவருக்கும் ஏற்றதாகவும் மாற்றுவோம்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் வினாப்பட்டியலை எப்படி உருவாக்கினீர்கள்?

சிவில் மற்றும் மனித உரிமைகள் நிபுணர்கள், வெவ்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரியேட்டர்கள் ஆகியோருடன் இணைந்து நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

எனது பதில்கள் YouTube தவிர வேறு எங்கேனும் பகிரப்படுமா?

கிரியேட்டர் & கலைஞருக்கான கருத்துக்கணிப்பிலோ கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் அமைப்பிலோ நீங்கள் பகிரும் தகவல்கள் உங்கள் YouTube சேனலில் சேமிக்கப்படும். அவை பிற Google தயாரிப்புகளால் பயன்படுத்தப்படாது. உங்கள் கூடுதல் ஒப்புதலின்றி அவை பொதுவில் வெளிப்படுத்தப்படாது, விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது. இந்தத் தகவல்களை விளம்பரதாரர்களுக்குப் பகிர மாட்டோம், இலக்கமைத்து விளம்பரப்படுத்தலுக்குப் பயன்படுத்த மாட்டோம்.

திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான அழைப்புகளை உங்களுக்கு அனுப்பும் பொருட்டு உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதற்கு ஒப்புதலளிப்பதா வேண்டாமா என நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சேனலையோ உள்ளடக்கத்தையோ ஹைலைட் செய்து காட்டுதல், பயிலரங்குகள், பயனர் பற்றிய ஆய்வு, பிற விளம்பரங்கள் ஆகியவை இதிலடங்கலாம்.

எனது தகவல்களைச் சமர்ப்பித்த பிறகு அவற்றை மாற்ற/திருத்த முடியுமா?

45 நாட்களுக்குள் உங்கள் 'கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ்' பதில்களை மாற்ற முடியும் (ஒருமுறை மட்டும்). தகவல்களை அடுத்து எந்தத் தேதியில் மீண்டும் அனுப்பலாம் என்ற விவரம் Studioவில் காட்டப்படும். உங்கள் பதில்களை எப்போது வேண்டுமானாலும் முற்றிலுமாக நீக்க முடியும்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களை மாற்றுதல்:

  1. கம்ப்யூட்டரிலோ YouTube Studio ஆப்ஸிலோ உங்களின் சேனல் உரிமையாளர் கணக்கைப் பயன்படுத்தி YouTubeல் உள்நுழையவும்.
  2. YouTube Studio அமைப்புகளுக்குச் சென்று கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • YouTube Studio ஆப்ஸில், உங்கள் சுயவிவரப் படம் சுயவிவரம் மற்றும் அமைப்புகள் என்பதைத் தட்டி கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் என்பதைக் கண்டறியவும்.
  3. கருத்துக்கணிப்புப் பதில்களை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் பதில்களை மாற்றவும்.
  5. சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களை நீக்குதல்:

  1. கம்ப்யூட்டரிலோ YouTube Studio ஆப்ஸிலோ உங்களின் சேனல் உரிமையாளர் கணக்கைப் பயன்படுத்தி YouTubeல் உள்நுழையவும்.
  2. YouTube Studio அமைப்புகளுக்குச் சென்று கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • YouTube Studio ஆப்ஸில், உங்கள் சுயவிவரப் படம் சுயவிவரம் மற்றும் அமைப்புகள் என்பதைத் தட்டி கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் என்பதைக் கண்டறியவும்.
  3. தரவை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உறுதிப்படுத்துதல் பாப்-அப் காட்டப்படும்போது நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் பதில்களைப் பதிவிறக்குதல்:

உங்கள் 'கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ்' தரவைப் பதிவிறக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் YouTube சேனல் அல்லது சேனல்களுக்கான தரவைப் பதிவிறக்க விரும்பினால், பிராண்டு கணக்கின் மூலம் அல்லாமல் உங்கள் தனிப்பட்ட Google கணக்குடன் உள்நுழைய வேண்டும்.

இதனால் எனது Google கணக்கு குறித்த தகவல்கள் எதுவும் மாறுமா?

கிரியேட்டர் & கலைஞருக்கான கருத்துக்கணிப்பிலோ கிரியேட்டர் டெமோகிராஃபிக்ஸ் அமைப்பிலோ நீங்கள் பகிரும் தகவல்கள் உங்கள் YouTube சேனலில் சேமிக்கப்படும். அவை பிற Google தயாரிப்புகளால் பயன்படுத்தப்படாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5667566248303770236
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false