பிராண்டு கணக்கிற்கான பயனர் அணுகலில் இருந்து சேனல் அனுமதிகளுக்கு மாறுதல்

பிராண்டு கணக்கு என்பது பிசினஸ் அல்லது பிராண்டிற்கான Google கணக்கு ஆகும், இது சில Google சேவைகளுக்குக் கிடைக்கும். பிராண்டு கணக்குடன் உங்கள் YouTube சேனல் இணைக்கப்பட்டிருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் Google கணக்குகளிலிருந்து அதை நிர்வகிக்கலாம். 

குறிப்பிட்ட பொறுப்புகள் மூலம் உங்கள் சேனலுக்கான அணுகலை மற்ற பயனர்களுக்கு நீங்கள் வழங்குவதற்கான வாய்ப்பைச் சேனல் அனுமதிகள் வழங்குகின்றன. பொறுப்புகள் நியமிக்கப்படுவது அணுகலுக்கான சரியான நிலையைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது. பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளை (கடவுச்சொல்லைப் பகிர்வது போன்றவை) தடுப்பதற்கும் பிற தனியுரிமைச் சிக்கல்களைக் குறைப்பதற்கும் சேனல் அனுமதிகளுக்கு மாறுங்கள்.

பிராண்டு கணக்கின் மூலம் YouTube Studioவில் சேனல் அனுமதிகளைப் பயன்படுத்துதல்

 சேனல் அனுமதிகளைப் பெறுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

சேனல் அனுமதிகளுக்கு ஒப்புதல் அளித்தல்

பிராண்டு கணக்கின் முதன்மை உரிமையாளர் YouTube Studioவிலோ நேரடியாக YouTube சேனலிலோ அனுமதிகளைப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கலாம்.

தொடர்வதற்கு முன்பு, உங்களிடம் ஒரு பிராண்டு கணக்கு இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

  1. studio.youtube.com தளத்திற்குச் செல்லவும். அனுமதிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான விருப்பத்தைப் பெற, பிராண்டு கணக்கின் முதன்மை உரிமையாளராக நீங்கள் உள்நுழைய வேண்டும்.
  2. இடதுபுறத்தில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அனுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அனுமதிகளை நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் பிராண்டு கணக்குடன் தொடர்புடைய ஒவ்வொரு பயனருக்கும் ஒரு பொறுப்பைத் தேர்வுசெய்யவும்.
  6. பொறுப்புதுறப்பை ஏற்று, அழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. அழைக்கப்பட்ட ஒவ்வொரு பயனரும் அழைப்பை ஏற்பதற்கான மின்னஞ்சலைப் பெறுவார்கள்.
  8. அழைப்பை ஏற்கும் ஒவ்வொரு புதிய பயனரும் Studio அனுமதிகளில் காட்டப்படுவார்கள்.

சேனல் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்குதல்

சேனல் மாற்றத்தை நிறைவுசெய்ய வேண்டியிருந்தால், சேனல் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்குங்கள்.

ஒப்புதல் நீக்க, “YouTube Studioவில் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். YouTube Studioவின் அமைப்புகள் அதன் பிறகு அனுமதிகள் என்பதில் இதைத் தேர்வுசெய்யலாம்.

குறிப்பு: OACக்கான பிரதிநிதி அணுகலைச் சேனல் உரிமையாளர் ரத்துசெய்தால், அணுகல் மாற்றங்கள் தொடர்பாக ஒரு மின்னஞ்சல் விழிப்பூட்டலைப் பெறுவீர்கள்.

ஆதரிக்கப்படும் அம்சங்கள்

பிராண்டு கணக்கின் பொறுப்புகளைப் போல அல்லாமல், சேனல் அனுமதிகள் பலவகை அணுகல் நிலைகளை வழங்குகின்றன.

வகை அணுகல் நிலை / பொதுச் செயல்கள் பிராண்டு கணக்குகள் சேனல் அனுமதிகள்
கம்ப்யூட்டரில் YT Studio YT Studio ஆப்ஸ் YouTube
பலவகை அனுமதிக் கட்டுப்பாடு நிர்வாகி பொறுப்பு ஆம்    
எடிட்டர் பொறுப்பு இல்லை      
எடிட்டர் (வரையறுக்கப்பட்ட அணுகல்) பொறுப்பு இல்லை         
'பார்வையாளர் மட்டும்' பொறுப்பு இல்லை      
பார்வையாளர் (வரையறுக்கப்பட்ட அணுகல்) பொறுப்பு இல்லை
சப்டைட்டில் எடிட்டர் பொறுப்பு இல்லை
வீடியோக்களை நிர்வகித்தல் வீடியோக்கள் / Shorts வீடியோக்களைப் பதிவேற்றுதல் ஆம்    
Shorts வீடியோக்களை உருவாக்குதல் ஆம்   
YouTube பகுப்பாய்வுகளிலோ கலைஞர் பகுப்பாய்விலோ வீடியோவின் வரவேற்பைப் புரிந்துகொள்ளுதல் (கலைஞர்கள் பட்டியலில் பார்த்தல் உட்பட) ஆம்            
வீடியோக்களை நிர்வகித்தல் (தரவுத்தகவல், வருமானம் ஈட்டுதல், தெரிவுநிலை) ஆம்
பிளேலிஸ்ட்டை உருவாக்குதல் ஆம்  
ஏற்கெனவே உள்ள பொதுப் பிளேலிஸ்ட்டில் வீடியோவைச் சேர்த்தல் ஆம்      
பிளேலிஸ்ட்களை நிர்வகித்தல் ஆம்   
சேனலாக லைவ் ஸ்ட்ரீம் செய்தல் ஆம்
வசனங்கள், தனிப்பட்ட வீடியோவைப் பகிர்தல் ஆம்
மொபைல் பதிவேற்றங்கள் ஆம்    
சேனல் நிர்வாகம் சேனலின் முகப்புப்பக்கத்தைப் பிரத்தியேகமாக்குதல் / நிர்வகித்தல் ஆம்         
சமூக ஈடுபாடு இடுகையை உருவாக்குதல் ஆம்
சமூக இடுகைகளை நிர்வகித்தல் ஆம்  
சமூக இடுகைகளை நீக்குதல் ஆம் [நிர்வாகி மட்டும்] [Manager only]
YouTube Studioவில் இருந்து சேனலாகக் கருத்துகளுக்குப் பதிலளித்தல் ஆம்
மற்றொரு சேனலின் வீடியோக்களுக்குச் சேனலாகக் கருத்து தெரிவித்தல் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளித்தல் ஆம்
நேரலைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலை அரட்டையைச் சேனலாகப் பயன்படுத்துதல் ஆம்
கலைஞர்கள் சார்ந்தது கலைஞரின் அதிகாரப்பூர்வச் சேனல் அம்சங்கள் (உதாரணத்திற்கு, இசை நிகழ்ச்சிகள்) ஆம்

சேனல் அனுமதிகளிலும் பிராண்டு கணக்கிலும் பொறுப்பை ஒப்படைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள்

சேனல் அனுமதிகளுக்கான கட்டுப்பாடுகள்

உரிமையாளர்

  • கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. சேனலை நீக்குவது, லைவ் ஸ்ட்ரீம்களையும் நேரலை அரட்டையையும் நிர்வகிப்பது போன்ற செயல்களைச் செய்யலாம்
  • உரிமையைப் பிற பயனர்களுக்கு மாற்ற முடியாது

நிர்வாகி

  • சேனலை நீக்க முடியாது, ஆனால் வரைவு வீடியோக்களை நீக்கலாம்

எடிட்டர்

  • திட்டமிடப்பட்ட/நேரலை/நிறைவடைந்த ஸ்ட்ரீம்களை நீக்க முடியாது

எடிட்டர் (வரையறுக்கப்பட்ட அணுகல்)

  • எடிட்டருக்கு வழங்கப்படும் அதே அனுமதிகள் இருக்கும், வருவாய்த் தரவை அணுகுவதைத் தவிர (அரட்டை வருவாய், பார்வையாளர் செயல்பாட்டுப் பிரிவு ஆகியவை உட்பட)

பார்வையாளர்

  • ஸ்ட்ரீம் குறியீட்டை அணுக முடியாது
  • ஸ்ட்ரீம் அமைப்புகள்/தரவுத்தகவல்களை மாற்ற முடியாது
  • நேரலைக்குச் செல்லவோ ஸ்ட்ரீம்களை நிறைவுசெய்யவோ முடியாது
  • திட்டமிடப்பட்ட/நேரலை/நிறைவடைந்த ஸ்ட்ரீம்களை நீக்க முடியாது
  • நேரலைக் கட்டுப்பாட்டு அறையில், அரட்டையில் பங்கேற்கவோ அதைக் கண்காணிக்கவோ முடியாது

பார்வையாளர் (வரையறுக்கப்பட்ட அணுகல்)

  • பார்வையாளருக்கு வழங்கப்படும் அதே அனுமதிகள் இருக்கும், வருவாய்த் தரவை அணுக முடியாது (அரட்டை வருவாய், பார்வையாளர் செயல்பாட்டுப் பிரிவு ஆகியவை உட்பட)

 பிராண்டு கணக்கின் கட்டுப்பாடுகள்

முதன்மை உரிமையாளர்

  • கட்டுப்பாடுகள் எதுவுமில்லை
உரிமையாளர்
  • கட்டுப்பாடுகள் எதுவுமில்லை

நிர்வாகி

  • MCNனில் சேரவோ அதிலிருந்து வெளியேறவோ முடியாது
  • மற்ற பயனர்களை அழைக்க முடியாது
  • சேனலை மாற்ற முடியாது அல்லது அவர்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாது (முதன்மை உரிமையாளரால் செய்யப்படுவதைத் தவிர)
  • சேனலை நீக்க முடியாது
  • பர்ச்சேஸ் செய்ய முடியாது
தகவல்தொடர்புகளின் நிர்வாகி
  • YouTubeல் எந்தச் செயலையும் செய்ய முடியாது

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11799684250838102851
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false