அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் மருத்துவத் தகவல்கள்

மருத்துவர்கள் சரிபார்த்த மருத்துவத் தகவல்களை நீங்கள் Googleளில் தேடலாம். பின்வருபவற்றைக் குறித்து மேலும் அறியலாம்:
  • அறிகுறிகள்
  • சிகிச்சைகள்
  • மருத்துவ நிலைமைகள்
  • தடுப்பு மற்றும் பாதுகாப்பு
  • பிரச்சினைகள்

உதவிக்குறிப்பு: நோய் அறிகுறிகள், சிகிச்சைகள் ஆகியவை தொடர்பான மருத்துவத் தகவல்கள் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அடிக்கடித் தேடப்படும் தலைப்புகள் தொடர்பான மருத்துவத் தகவல்களை வழங்குகிறோம். தகவல்களுக்காக மட்டுமே படங்கள் வழங்கப்படுகின்றன.

மருத்துவத் தகவல்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன?

Googleளில் உள்ள மருத்துவத் தகவல்கள் உயர்தரத் தகவல்களை வழங்குகின்ற இணையதளங்கள், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், தேடல் முடிவுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகின்றன.
  1. இணையம் முழுவதிலுமுள்ள, உயர்தரத் தகவல்களை வழங்குகின்ற தளங்களில் இருந்து உடல்நலம் சார்ந்த தகவல்களைக் கண்டறிந்து அவற்றை ஆராய்வோம்.
  2. மருத்துவக் குழுவினர் மூலம் இந்தத் தகவல்கள் கவனமாகச் சரிபார்க்கப்பட்டு துல்லியமான தகவல்கள் பிரித்தெடுக்கப்படும். 
  3. மருத்துவம் சார்ந்த விளக்கப்படங்களை உருவாக்க உரிமம் பெற்றவர்கள், இந்தத் தகவல்களைச் சித்தரிக்கும் காட்சிகளை உருவாக்குவார்கள்.
ஒரு நோய் அறிகுறியைப் பற்றித் தேடினால் "இந்தத் தேடலுடன் தொடர்புடைய உடல் நிலைகள்" என்ற பிரிவு காட்டப்படலாம். தேடல் முடிவுகளில் இருந்தும் எங்கள் அதிவிவர கிராஃபில் இருந்தும் இந்தப் பிரிவு காட்டப்படுகிறது. இந்த முடிவுகள் தொடர்புடையவையா எனச் சரிபார்ப்போம்.
மருத்துவத் தகவல்கள் வழங்குநர்கள்

அரசு ஏஜென்சிகள்

  • Bundesministerium für Gesundheit (BMG - ஜெர்மன் மத்திய சுகாதார அமைச்சகம்)
  • நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC - Centers for Disease Control and Prevention)
    • ‘CDC’ என்பது அமெரிக்க சுகாதார மற்றும் மனிதச் சேவைகள் துறைக்குச் சொந்தமானது (HHS - Health and Human Services), அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது. இந்த லோகோவைப் பயன்படுத்துவது எந்தவொரு குறிப்பிட்ட தயாரிப்பு, சேவை, நிறுவனம் போன்றவற்றின் HHS அல்லது CDC ஒப்புதல் அல்ல.
  • ClinicalTrials.gov
  • உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA - Food and Drug Administration)
  • நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் (NCI - National Cancer Institute)
  • நேஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்த் (NIH - National Institutes of Health)
  • நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (NLM - National Library of Medicine)
  • யுனைடெட் ஸ்டேட்ஸ் சர்ஜன் ஜெனரல்
  • உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization)

பார்ட்னர்ஷிப்கள் (பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும்)

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை, பிரேசில்
  • அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், இந்தியா
  • கிளீவ்லாண்ட் கிளினிக், அமெரிக்கா
  • காலேஜ் ஆஃப் மெடிசின், யுனிவெர்சிட்டி ஆஃப் இபாடன், நைஜீரியா
  • கொலம்பியா ஏசியா ஹாஸ்பிடல்ஸ், இந்தியா
  • ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் (HMS - Harvard Medical School), அமெரிக்கா
  • மேயோ கிளினிக், அமெரிக்கா
  • மெடிக்கல் நோட், ஜப்பான்
  • மித்ரா கேளுவார்கா ஹாஸ்பிடல்ஸ், இந்தோனேசியா
  • நேஷனல் ஹெல்த் சர்வீஸ்
  • பவர் டு டிசைட்
  • பார்ட்னர்ஷிப் ஃபார் டிரக்-ஃப்ரீ கிட்ஸ்
  • தி டிசீஸ் ஆண்டாலஜி டேட்டாபேஸ்
  • ட்ரூவென் ஹெல்த் அனாலிடிக்ஸ்
  • வாக்ஸ்ஹெல்த்

மருத்துவம் சார்ந்த விளக்கப்படங்களை உருவாக்குபவர்கள்

  • ஆலிசன் ஈ. பெர்க்
  • காஸ்சியோ லைனிம்
  • கேத்ரீன் டெல்ஃபியா
  • கிறிஸ்டி கிரேம்ஸ்
  • ஜெனிபர் ஈ. ஃபேர்மன்
  • லாரீ ஓ'கீஃப்
  • மிச்செல் கிரஹாம்
  • மோல்லி போர்மன்-புல்லென்
  • சுமன் கஸ்தூரியா
  • டோட் பக்

மருத்துவ நிபுணரின் ஆலோசனையை எப்போது பெற வேண்டும்?

Googleளில் காட்டப்படும் மருத்துவத் தகவல்கள் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. அத்துடன் அது மருத்துவ ஆலோசனையும் அல்ல. உங்களுக்கு ஏதேனும் மருத்துவப் பிரச்சினை இருந்தால் மருத்துவச் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். அவசர மருத்துவ உதவி தேவையெனில் உங்கள் மருத்துவரையோ உள்ளூர் அவசர உதவி எண்ணையோ உடனடியாகத் தொடர்புகொள்ளவும்.

தவறான தகவல்கள் குறித்துப் புகாரளித்தல்

Googleளில் உள்ள மருத்துவத் தகவல்களில் ஏதேனும் பிழைகளைக் கண்டறிந்தால் அதுகுறித்துப் புகாரளிக்க இவற்றைச் செய்யலாம்:

  1. மருத்துவத் தகவலின் கீழே இருக்கும் கருத்து என்பதைத் தேர்ந்தெடுப்பது.
  2. எந்தெந்தத் தகவல்கள் தவறாக உள்ளன என்பதைத் தெரிவிக்க, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  3. கருத்தைச் சமர்ப்பிக்கவும்.

எதிர்காலத்தில் இன்னும் துல்லியமான முடிவுகளை வழங்க உங்கள் கருத்தைப் பயன்படுத்துவோம்.

மருத்துவம் தொடர்பான உங்கள் தேடல்கள் குறித்து Google சேமிக்கும் தகவல்கள்

உங்கள் தேடல்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு, எனது செயல்பாடு என்பதற்குச் செல்லவும்.

உங்கள் கணக்கில் செயல்பாட்டைக் கண்டறிந்து, கட்டுப்படுத்துவது எப்படி என அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16239865510716639405
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false