அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

தேடல் முடிவுகளில் உள்ள இடத்திற்குத் திருத்தங்களைப் பரிந்துரைத்தல்

Google தேடல் முடிவுகளில் இடங்களைப் பற்றிய தவறான தகவல்களைக் கண்டறிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். நீங்கள் ஒரு வணிக உரிமையாளராக இருந்தால் உங்கள் வணிகம் பற்றிய தகவலை நிர்வகிப்பதற்கான வழிமுறையை அறிந்துகொள்ளுங்கள்.

முக்கியம்: இந்த அம்சம் சில நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்காது.

திருத்தங்களைச் செய்வதற்கு நீங்கள் பரிந்துரைக்கக்கூடிய விவரங்கள்

இடத்தைப் பற்றிய பின்வருபவை போன்ற தகவல்களைச் சேர்க்கலாம் அல்லது மாற்றலாம்:

  • பெயர்
  • முகவரி
  • அடையாளங்காட்டி இருப்பிடம்
  • வணிக நேரம் அல்லது பிற விவரங்கள்

பின்வருபவை போன்ற பயனுள்ள தகவல்களைக் கொண்டும் வணிகப் பண்புக்கூறுகளைச் சேர்க்கலாம்/திருத்தலாம்:

  • டெலிவரி விருப்பங்கள்
  • சக்கர நாற்காலியில் செல்லும் வசதி
  • வெளியரங்க இருக்கை

திருத்தத்தைப் பரிந்துரைத்தல்

  1. கம்ப்யூட்டரில் google.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
  2. ஓர் இடத்தைத் தேடவும். தேடல் முடிவுகளின் மேற்புறத்தில் அந்த இடத்தைப் பற்றிய சுருக்கம் இருக்கும்.
  3. சுருக்கத்தின் கீழ் உள்ள திருத்தத்தைப் பரிந்துரை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

வணிகப் பண்புக்கூறுகளை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் google.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு வணிகத்தைத் தேடவும். தேடல் முடிவுகளின் வலதுபுறத்தில் அந்த வணிகத்தின் சுயவிவரம் இருக்கும்.
  3. வணிக விவரங்களின் கீழ் உள்ள சமீபத்திய தகவலைப் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

இடத்தை அகற்றுதல்

இவ்வாறு இருக்கும் இடத்தையும் நீங்கள் கொடியிடலாம்:

  • நிரந்தரமாக மூடப்பட்டது
  • புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது
  • இல்லாதது (தற்போது இல்லாத அல்லது ஒருபோதும் இருந்திராத இடம்)
  • தனிப்பட்ட இடம்/வீடு (காட்டக்கூடாத இடம், எடுத்துக்காட்டாக ஒருவரின் வீடு)
  • ஸ்பேம், போலி/மனதைப் புண்படுத்துவது (போலி வணிகம் அல்லது மனதைப் புண்படுத்தும் காட்டக்கூடாத உள்ளடக்கத்தைக் கொண்ட இடம்)
  • நகல் (மற்றொரு Google Maps இடத்தின் நகல் இடம்)
உதவிக்குறிப்பு: சட்டப்பூர்வமான காரணங்களுக்காக ஏதேனும் அகற்றப்பட வேண்டும் என நினைத்தால் சட்டக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

திருத்தங்களை வெளியிடுவதற்கு எவ்வளவு நேரமாகும்?

அனைத்துத் திருத்தங்களையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வதால் தேடல் முடிவுகளைப் புதுப்பிக்க சிறிது நேரம் ஆகலாம்.

நல்ல திருத்திற்கு வழிவகுப்பவை

பெயர்

ஓர் இடத்தின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்தவும், அதாவது முகப்பு அல்லது இணையதளத்தில் பயன்படுத்தப்படும் பெயர். பெயருக்கான புலத்தில் எந்தவொரு கூடுதல் கருத்தையும் சேர்க்க வேண்டாம்.

முகவரி

தெரிந்த முகவரியை உள்ளிடவும். முழுமையற்ற முகவரியை Maps பரிந்துரைத்தால் அந்த முகவரியில் கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும்.

அடையாளங்காட்டி

அடையாளங்காட்டியை நகர்த்தும்போது வரைபடத்தைப் போதிய அளவுக்குப் பெரிதாக்கி இருப்பதையும் சாட்டிலைட் காட்சிக்கு மாறியிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளவும். இதனால் கட்டடங்களைப் பார்த்து, வணிக இடம் இருக்கின்ற கட்டடத்தின் மீது அடையாளங்காட்டியை நகர்த்த முடியும்.

வகை

ஓர் இடத்தை விவரிக்கும்போது குறிப்பிட்ட வகைகளைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, "கடை" என்பதற்குப் பதிலாக "துணிக்கடை" என்பதைப் பயன்படுத்தவும்.

வணிக நேரம்

இடம் திறந்திருக்கும் நேரத்தை உள்ளிடவும். வாரத்தின் வெவ்வேறு நாட்களுக்கு வெவ்வேறு வணிக நேரங்களைச் சேர்க்கலாம்.

ஃபோன் எண்

முதன்மை ஃபோன் எண்ணைப் பயன்படுத்தவும். நீங்கள் பரிந்துரைக்கும் எண் சரியானதா என்பதை முதலில் சரிபார்க்கவும். 

இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தவும். சமூக வலைத்தளங்கள், மதிப்பாய்வுத் தொகுப்புத்தளங்கள் அல்லது இதையொத்த பிற இணையதளங்களுக்கான இணைப்புகளைச் சேர்க்க வேண்டாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10713946303462312467
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false