அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

உங்கள் Discover அமைப்புகளை மாற்றுதல்

Discoverரில் உங்கள் மொழி, வீடியோ, விளம்பர அமைப்புகள் ஆகியவற்றை மாற்றவும் Googleளுடன் எந்தச் செயல்பாட்டைப் பகிர்வது என்பது குறித்து முடிவெடுக்கவும் முடியும்.

வேறு மொழியில் உள்ள கதைகளைக் காட்டுதல்/மறைத்தல்

வேறு மொழியில் கதைகளைப் பெறுவதை நிறுத்துதல்
  1. Android சாதனத்தில் Google  ஆப்ஸைத் திறக்கவும் அல்லது உலாவியில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கார்டின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் More என்பதைத் தட்டவும்.
  3. [language] மொழியில் செய்திகளைக் காட்டாதே என்பதைத் தட்டவும்.
கவனத்திற்கு: இந்த அம்சம் அனைத்துக் கார்டுகளுக்கும் கிடைக்காமல் போகக்கூடும்.
வேறு மொழியில் கதைகளைப் பார்த்தல்

Google ஆப்ஸில்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு ஆர்வங்கள் அதன் பிறகு மறைக்கப்பட்டுள்ளவை என்பதைத் தட்டவும்.
  3. "தகவல் வகைகள்" என்பதன் கீழ், நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பும் மொழியின் மறைநிலையை நீக்கவும்.

உலாவியில்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் உள்ள உலாவியில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு Menu அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "Discover" என்பதற்குக் கீழே உள்ள ஆர்வங்களை நிர்வகியுங்கள்அதன் பிறகு மறைக்கப்பட்டுள்ளவை என்பதைத் தட்டவும்.
  4. "தகவல் வகைகள்" என்பதன் கீழ், நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பும் மொழியின் மறைநிலையை நீக்கவும்.

வானிலை அமைப்புகளை மாற்றுதல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google ஆப்ஸைத் திறக்கவும் .
  2. Discoverரில் வானிலை கார்டைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்திலுள்ள மேலும் என்பதைத் தட்டி மேலும் அதன் பிறகு ஃபாரன்ஹீட்/செல்சியஸ் என்பதைத் தேர்வுசெய்யவும்.

தானியங்கி வீடியோ மாதிரிக்காட்சிகளை கட்டுப்படுத்துதல்

Discoverரில் உள்ள வீடியோக்கள் ஒலியில்லாமல் தானாகவே இயங்கக்கூடும். இந்த வீடியோ மாதிரிக்காட்சிகளை இயக்கலாம்/முடக்கலாம், அவை எப்போது பிளே ஆக வேண்டும் என்பதை மாற்றலாம்.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு பொது என்பதைத் தட்டவும்.
  3. தானியங்கு வீடியோ மாதிரிக்காட்சிகள் என்பதைத் தட்டவும்.
  4. எப்போதும் வேண்டாம் , வைஃபையில் மட்டும் , வைஃபை & மொபைல் டேட்டாவில் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

Discover அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள் Google ஆப்ஸ் அமைப்புகளை மாற்றலாம், உ.ம். Discover அறிவிப்புகளை மாற்றலாம், Google ஆப்ஸ் அறிவிப்புகளை இயக்கலாம்/முடக்கலாம். உங்களுக்கான Google அறிவிப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பதை அறிக.

நீங்கள் பெறும் விளம்பரங்களை மாற்றுதல்

Discoverரைப் பயன்படுத்தும்போது கண்டிப்பாக விளம்பரங்கள் காட்டப்படும். இருப்பினும் எந்தெந்த விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். Ad என்ற வார்த்தையின்படி இந்தக் கார்டுகளைக் கண்டறியலாம். குறிப்பிட்ட விளம்பரதாரரின் விளம்பரங்களைத் தடுக்க:
  1. விளம்பரத்தின் மேல் வலதுபுறத்தில், மேலும் மேலும்அதன் பிறகு இந்த விளம்பரம் எனக்கு ஏன் காட்டப்படுகிறது? என்பதைத் தட்டவும்
  2. [விளம்பரதாரர்] இடமிருந்து விளம்பரங்களைக் காட்டு என்பதை முடக்கவும்.
நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை மாற்றுவதற்கு விளம்பர அமைப்புகள் என்பதற்குச் செல்லவும். உங்களின் சில Google அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை Discover பிரத்தியேகமானதாக்கும். உங்கள் Google கணக்கில் சேமித்த முந்தைய செயல்பாட்டைப் பார்ப்பதற்கும் திருத்துவதற்கும் எனது செயல்பாடு என்பதற்குச் செல்லவும்.

உங்கள் Discover செயல்பாட்டைக் கண்டறிலும் நீக்குதலும்

Discover செயல்பாடு தனிப்பட்டதாகும், Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் உங்கள் செயல்பாட்டை மட்டும் பார்க்க முடியும்.
  1. எனது செயல்பாடு பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் Google கணக்கில் உள்நுழையும்படி கூறப்படலாம்.
  2. இந்தப் பக்கத்தில் Google ஆப்ஸ் உங்கள் சாதனத்திற்கு அனுப்பிய கார்டுகளின் தினசரி விவரத்தை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு கார்டையும் பார்த்தீர்களா, பிரத்தியேகமானதாக மாற்றினீர்களா மறைத்தீர்களா என்பதைப் பார்க்கலாம்.
  3. உங்கள் செயல்பாட்டை நீக்குவதற்கு எனது செயல்பாட்டை நீக்கு என்பதற்குச் செல்லுங்கள்.

Discoverரில் சேமிக்கப்படும் செயல்பாடு

Discoverரைப் பயன்படுத்தும்போது உங்கள் செயல்பாட்டின் பின்வரும் தகவல்களை Google சேகரித்து, பயன்படுத்துகிறது:

  • Discoverரில் காட்டப்படும் கார்டுகள் மற்றும் முடிவுகள்
  • நீங்கள் பார்க்கும் அல்லது பிரத்தியேகமானதாக்கும் கார்டுகள்
  • "ஆர்வமில்லை" என நீங்கள் குறித்து வைக்கும் தலைப்புகள்
  • Discoverரை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் சாதனங்கள்
  • விளம்பரங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14850676922033625698
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false