அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் டிவி ஷோக்களையும் திரைப்படங்களையும் தேடுதல்

டிவி ஷோக்களையும் திரைப்படங்களையும் தேடும்போது, என்ன பார்க்கலாம் என நீங்கள் முடிவெடுக்க உதவும் வகையில் Googleளினால் பரிந்துரைகளை வழங்க முடியும்.

பார்க்க விரும்பும் டிவி ஷோ/திரைப்படத்தைக் கண்டறிதல்

  1. உங்கள் iPhone/iPadல் google.com தளத்திற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. பார்ப்பதற்கு உள்ளவையைத் தேடவும்.
    • உதவிக்குறிப்பு: ஸ்ட்ரீமிங் சேவை, தலைப்பு, வகை போன்றவற்றைக் கொண்டும் பார்ப்பதற்கு உள்ளவை பிரிவில் தேடலாம். எடுத்துக்காட்டாக, Hulu திரைப்படங்கள் அல்லது 90களில் வெளிவந்த நகைச்சுவையான காதல் திரைப்படங்கள் எனத் தேடவும்.
  3. திரைப்படம்/டிவி ஷோ அதன் பிறகு எல்லா விருப்பங்களும் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஸ்ட்ரீமிங் சேவைக்கு அடுத்துள்ள பிளே செய் என்பதைத் தட்டவும்.

பார்க்க விரும்பும் டிவி ஷோ/திரைப்படத்தைச் சேமித்தல்

பிறகு பார்க்க விரும்பும் டிவி ஷோக்களையும் திரைப்படங்களையும் 'பார்க்க விரும்புபவை' பட்டியலில் சேமிக்கலாம்.

‘பார்க்க விரும்புபவை’ பட்டியலில் சேமித்தல்
  1. உங்கள் iPhone/iPadல் google.com தளத்திற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. நீங்கள் சேமிக்க விரும்பும் ஷோ/திரைப்படத்தை பார்ப்பதற்கு உள்ளவை பிரிவில் தேடவும். 
    • ஸ்ட்ரீமிங் சேவை, தலைப்பு, வகை போன்றவற்றைக் கொண்டும் பார்ப்பதற்கு உள்ளவை பிரிவில் தேடலாம். எடுத்துக்காட்டாக, நகைச்சுவையான டிவி ஷோக்கள் எனத் தேடவும். பிறகு திரைப்படம்/டிவி ஷோவைத் தேர்ந்தெடுக்கவும். 
  3. திரைப்படம்/டிவி ஷோ அதன் பிறகு பார்க்க விரும்புபவை Add to என்பதைத் தட்டவும்.
‘பார்க்க விரும்புபவை’ பட்டியலைக் கண்டறிதல்
  1. உங்கள் iPhone/iPadல் google.com தளத்திற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும். 
  2. எனது பார்க்க விரும்புபவை பட்டியலைத் தேடவும்.

சேகரிப்புகள் என்பதில் சென்றும் 'பார்க்க விரும்புபவை' பட்டியலைப் பார்க்கலாம்.

ஸ்ட்ரீமிங் & டிவி சந்தாக்களைச் சேர்த்தல் 

சந்தா பெற்றுள்ள டிவி & ஸ்ட்ரீமிங் சேவைகளைச் சேர்க்கலாம், இதன்மூலம் நீங்கள் பார்க்கக்கூடிய ஷோக்கள்/திரைப்படங்களுக்கான முடிவுகளை மட்டுமே பெறுவீர்கள்.

  1. உங்கள் iPhone/iPadல் google.com தளத்திற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. பார்ப்பதற்கு உள்ளவையைத் தேடவும். எடுத்துக்காட்டாக, உண்மையான குற்றங்கள் பற்றிய ஷோக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தேடவும்.
  3. "பார்ப்பதற்கு உள்ளவை" என்பதற்கு அடுத்துள்ள வழங்குநர்கள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் சந்தாக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: சந்தாக்கள் இல்லாமலும் பார்ப்பதற்கு உள்ளவை பிரிவில் தேடலாம்.

நீங்கள் பார்த்தவற்றை ரேட்டிங் செய்தல் 

நீங்கள் பார்ப்பதை ரேட்டிங் செய்து எதிர்காலத்தில் சிறந்த பரிந்துரைகளைப் பெறலாம், எதைப் பார்ப்பது என்பது குறித்து முடிவெடுக்க மற்றவர்களுக்கும் உதவலாம்.

  1. உங்கள் iPhone/iPadல் google.com தளத்திற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. திரைப்படம்/டிவி ஷோவின் தலைப்பைத் தேடவும்.
  3. Google பயனர்களின் ரேட்டிங்கிற்கு அடுத்துள்ள விருப்பம் Like அல்லது விருப்பமில்லை Dislike என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் ரேட்டிங் செய்த டிவி ஷோக்களையும் திரைப்படங்களையும் கண்டறிய, google.com/search/contributions/reviews என்பதற்குச் செல்லவும்.

அமைப்புகளை மாற்றுதல்

டிவி ஷோக்கள் & திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளை முடக்குதல்
உங்களுக்குப் பிடித்த டிவி ஷோக்களைப் பற்றிய அறிவிப்புகளைப் பெறலாம் (எடுத்துக்காட்டாக, புதிய எபிசோடு வெளியிடப்படும்போது அல்லது நீங்கள் விரும்பும் திரைப்படத்தை நாங்கள் கண்டறியும்போது).

அறிவிப்புகளை முடக்க:

  1. iPhoneனிலோ iPadடிலோ Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், உங்கள் சுயவிவரப் படம் அல்லது பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. திரைப்படங்கள் & டிவி ஷோக்கள் என்பதை முடக்கவும்.
பிரத்தியேகமான பரிந்துரைகளை முடக்குதல்

பிரத்தியேகமான பரிந்துரைகளைப் பெற விரும்பவில்லை எனில் தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை முடக்கலாம்.

பரிந்துரைகள் எவ்வாறு வேலை செய்கின்றன

Google தயாரிப்புகளில் பிரபலமானவை/பிரபலமடைபவை, இணையத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவை, ஸ்ட்ரீமிங் சேவைகளின் புதிய அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் திரைப்படம் & டிவி ஷோ குறித்த பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

Google கணக்கில் உள்நுழைந்து தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை இயக்கியிருந்தால் Google தயாரிப்புகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளின் அடிப்படையிலும் Google பரிந்துரைகளை வழங்கும். அவற்றில் அடங்குபவை:

  • முந்தைய தேடல்கள் & உலாவல் விவரங்கள்.
  • நீங்கள் ரேட்டிங் வழங்கிய டிவி ஷோக்கள்/திரைப்படங்கள்.
  • YouTubeல் நீங்கள் பார்த்த டிரெய்லர்கள்.

உங்கள் கணக்கின் மூலம் மேற்கொள்ளும் செயல்பாட்டை எப்படிப் பார்ப்பது & கட்டுப்படுத்துவது என அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7484390530041115883
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false