அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Searchசில் தயாரிப்பின் விலைகளைக் கண்காணித்தல்

முக்கியம்: விலைக் கண்காணிப்பு அம்சம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மட்டுமே கிடைக்கிறது.

Google Searchசில் 'விலையைக் கண்காணி' பட்டன் காட்டப்பட்டால் தயாரிப்பின் விலையை நீங்கள் கண்காணிக்கலாம். இணையதளத்திலோ Google ஆப்ஸிலோ உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து 'விலைக் கண்காணிப்பு' அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

உதவிக்குறிப்புகள்:

  • குறிப்பிடத்தக்க அளவு விலை குறையும்போது Google ஆப்ஸில் இருந்து உங்கள் ஃபோனுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
  • அத்துடன், கண்காணிக்கப்படும் தயாரிப்புகளின் சமீபத்திய விலைக் குறைப்புகளைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்கும் மின்னஞ்சலையும் பெறுவீர்கள்.
  • விலைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை.
  • தயாரிப்புக் கார்டுகளின் மூலம் மட்டுமே விலைகளைக் கண்காணிக்க முடியும்.
  • நீங்கள் தேடும் தயாரிப்புக்கு 'தயாரிப்புக் கார்டுகள்' இல்லாமல் போகலாம்.

தயாரிப்பின் விலையைக் கண்காணித்தல்

  1. Google ஆப்ஸையோ மொபைல் உலாவியையோ திறக்கவும்.
  2. "Google Pixel 7 Pro" போன்ற குறிப்பிட்ட தயாரிப்பையோ "மொபைல்கள்" போன்ற தயாரிப்பு வகையையோ தேடவும்.
  3. தயாரிப்புக் கார்டு இருந்தால் அதைப் பார்க்க அல்லது திறக்க கீழே நகர்த்தவும்.
  4. விலையைக் கண்காணிப்பதற்கான ஐகானை தட்டவும்.
  5. “விலைக் குறைப்புகள் மற்றும் தொடர்புடைய உள்ளடக்கம் குறித்த புஷ் அறிவிப்புகளையும் மின்னஞ்சல்களையும் பெறுவீர்கள்” என்ற உறுதிப்படுத்தல் மெசேஜ் காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: கணக்கில் உள்நுழைந்து அறிவிப்புகளை இயக்கியுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

விலைக் கண்காணிப்பை முடக்குதல்

  1. மொபைல் ஆப்ஸில், சேமித்தவை பிரிவிற்குச் செல்லவும்.
  2. சேமித்தவை எல்லாம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அகற்ற விரும்புபவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேல் வலதுபுறத்தில் உள்ள அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

அறிவிப்புகள் மற்றும் மின்னஞ்சல் அமைப்புகள்

மொபைல் அறிவிப்புகளை முடக்குதல்

Android சாதனத்தில் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்புகளை முடக்க இவற்றைச் செய்யவும்:

  1. Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டவும்.
  3. அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. “ஷாப்பிங்” என்பதை முடக்கவும்.

iPhone அல்லது iPadல் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்புகளை முடக்க:

  1. Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டவும்.
  3. அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. “ஷாப்பிங்” என்பதை முடக்கவும்.

விலைக் கண்காணிப்பு தொடர்பான மின்னஞ்சல்களை முடக்குதல்

  1. “Google மூலம் ஷாப்பிங் செய்தல்” என்பதிலிருந்து பெற்ற ஏதேனும் ஒரு விலை கண்காணிப்பு மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. மின்னஞ்சலின் கீழ்ப்புறத்தில் உள்ள குழுவிலகு என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.

செயல்பாட்டின் அடிப்படையிலான அறிவிப்புகள்

நீங்கள் ஆர்வம் காட்டிய தயாரிப்புகளின் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்புகளை உங்கள் Google செயல்பாட்டின் அடிப்படையில் நீங்கள் பெறக்கூடும். இந்த அறிவிப்புகளை முடக்க "அறிவிப்பு மற்றும் மின்னஞ்சல் அமைப்புகள்" பிரிவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15382823050551516855
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false