அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

இணைப்புகள், படங்கள் போன்ற பலவற்றைச் சேமித்தல்

இணைப்புகள், படங்கள், இடங்கள் ஆகியவற்றை நீங்கள் சேமிக்கலாம்.

முக்கியம்: இந்த அம்சம் சில நாடுகள்/பிராந்தியங்களிலும் சில மொழிகளிலும் கிடைக்காமல் இருக்கக்கூடும். உங்கள் சேகரிப்புகளைப் பார்க்க Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்.

சேகரிப்பை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. “சேமித்தவை” பிரிவுக்குக் கீழ், உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இவற்றில் ஒன்றைத் தட்டவும்:
    • இணைப்பிலிருந்து உருவாக்கு: இணைப்பைச் சேர்த்து ஒரு சேகரிப்பை உருவாக்கலாம்.
    • 'சேமித்தவை எல்லாம்' பிரிவிலிருந்து உருவாக்கு: சேமித்தவற்றில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு சேகரிப்பை உருவாக்கலாம்.
    • வெற்று டெம்ப்ளேட்டிலிருந்து உருவாக்கு: ஒரு காலியான சேகரிப்பை உருவாக்கலாம்.
  4. சேகரிப்பிற்குப் பெயரிடவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சேர்க்க வேண்டியவற்றைத் தேடிக் கண்டறியவும்.

சேமித்தவையில் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும். 
  2. “சேமித்தவை” பிரிவுக்குக் கீழ், சேமித்தவை எல்லாம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, சேர் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு இணைப்பைச் சேருங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

சேகரிப்பில் சேர்த்தல்

முக்கியம்: சேமித்தவையில் சேர்க்க, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

படங்கள், ரெசிபிகள், ஷோக்கள், திரைப்படங்கள், இடங்கள் ஆகியவற்றை நீங்கள் சேகரிப்பில் சேமிக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google தளத்தில் தேடவும்.
  2. விரும்பும் முடிவைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள, மூன்று புள்ளி மெனுவை More கிளிக் செய்து அதன் பிறகு சேமி Add to என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சேமி Add to என்ற விருப்பம் காட்டப்படவில்லை எனில் அது காட்டப்பட நீங்கள் மீண்டும் உள்நுழைய வேண்டும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் சேர்க்கும் முடிவு உங்களின் மிகச் சமீபத்திய சேகரிப்பில் சேமிக்கப்படும். வேறொரு சேகரிப்பைத் தேர்வுசெய்ய மாற்று என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ஒரு சேகரிப்பைத் தேர்வுசெய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12730311472458137702
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false