தளத்தின் வலைநிர்வாகியைத் தொடர்பு கொள்ளுதல்

ஒரு இணையதளத்தின் உள்ளடக்கத்தை அகற்ற, வழக்கமாக அந்த இணையதளத்தின் உரிமையாளராக உள்ள வலைநிர்வாகியை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். Googleளைப் பயன்படுத்தி அந்த உள்ளடக்கத்தை நீங்கள் கண்டறிந்திருந்தாலும் தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை Google கட்டுப்படுத்துவதில்லை.

வலைநிர்வாகியை ஏன் தொடர்புகொள்ள வேண்டும்?

எங்கள் தேடல் முடிவுகளில் இருந்து தளத்தையோ படத்தையோ Google நீக்கினாலும்கூட பக்கமானது தொடர்ந்து தளத்திலே இருக்கும். அதாவது அந்தத் தளத்தின் URL, சமூக வலைதளப் பகிர்வு அல்லது பிற தேடல் இன்ஜின்களில் அதைக் காணமுடியும்.

வலைநிர்வாகியைத் தொடர்புகொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால் அவரால் பக்கத்தை முழுமையாக அகற்ற முடியும்.

கவனத்திற்கு: Google தேடல் முடிவுகளில் படமோ தகவலோ காட்டப்பட்டால் அது இணையத்தில் உள்ளது என்று அர்த்தமே தவிர Google அதை ஆதரிக்கிறது என்று அர்த்தமாகாது.

வலைநிர்வாகியைத் தொடர்பு கொள்வதற்கான வழிமுறை

ஒரு தளத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன:

  1. எங்களைத் தொடர்புகொள்க இணைப்பு: "எங்களைத் தொடர்புகொள்க" இணைப்பையோ வலைநிர்வாகிக்கான மின்னஞ்சல் முகவரியையோ கண்டறியவும். இந்தத் தகவல் பெரும்பாலும் தளத்தின் முகப்புப்பக்கத்தில் காணப்படும்.
  2. Whois தேடலைப் பயன்படுத்தி தொடர்புத் தகவலைக் கண்டறிதல்: Googleளைப் பயன்படுத்தி தளத்தின் உரிமையாளரைக் கண்டறிய Whois (who is?) தேடலை மேற்கொள்ளலாம். google.com தளத்திற்குச் சென்று whois www.example.com எனத் தேடவும். பொதுவாக வலைநிர்வாகியைத் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி "பதிவு செய்தவரின் மின்னஞ்சல்"/"நிர்வாகத் தொடர்பு" என்பதன் கீழ் இருக்கும்.
  3. தளத்தின் ஹோஸ்டிங் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுதல்:பொதுவாக Whois தேடல் முடிவில் இணையதளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனம் குறித்த தகவல்களும் இருக்கும். வலைநிர்வாகியைத் தொடர்புகொள்ள முடியவில்லையெனில், தளத்தின் ஹோஸ்டிங் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயலவும்.

எங்கள் தேடல் முடிவுகளில் தோன்றும் ஒரு தளத்தில் வலைநிர்வாகி நீங்கள் கோரிய மாற்றங்களை ஏற்கெனவே செய்திருந்தால், இணையப் பக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கையை அனுப்பி காலாவதியான தகவல்களை அகற்றும்படி எங்களிடம் கோரலாம்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
100334
false