அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

செக்யூரிட்டிகளைப் பின்தொடர்தல் & ஒப்பிடுதல்

Google Finance மூலம் செக்யூரிட்டிகளின் நிகழ்நேரப் பங்கு விலைகள், விளக்கப்படங்கள், நிதிசார்ந்த செய்திகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் செக்யூரிட்டிகளின் பங்குகள், நாணயங்கள், எதிர்கால நிலைமை ஆகியவை குறித்த தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் தேர்வுசெய்யும் பங்குகளையும் பிற செக்யூரிட்டிகளையும் கண்காணிக்க, உங்களுக்கென 'கண்காணிப்பவை' பட்டியல்களையும் உருவாக்கலாம்.

செக்யூரிட்டியைப் பின்தொடர்தல்

  1. கம்ப்யூட்டரில் google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு செக்யூரிட்டியைத் தேடவும், எடுத்துக்காட்டாக "டௌ ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ்" (Dow Jones Industrial Average). அதன்பிறகு நீங்கள் கண்காணிக்க விரும்பும் செக்யூரிட்டியைக் கிளிக் செய்யவும். 
  3. செக்யூரிட்டியின் பெயருக்கு வலதுபுறம் உள்ள பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இயல்பான 'கண்காணிப்பவை' பட்டியலில் இந்த செக்யூரிட்டி சேர்க்கப்படும். பிரத்தியேகமான 'கண்காணிப்பவை' பட்டியலில் சேர்க்க, கண்காணிப்பவை பட்டியலில் சேர்க்கப்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும். 
  5. செக்யூரிட்டியைச் சேர்க்க விரும்பும் 'கண்காணிப்பவை' பட்டியல்களைக் கிளிக் செய்யவும்.

செக்யூரிட்டிகளை ஒப்பிடுதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு செக்யூரிட்டியைத் தேடவும், எடுத்துக்காட்டாக "டௌ ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ்" (Dow Jones Industrial Average). அதன்பிறகு செக்யூரிட்டியின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  3. விளக்கப்படத்தின் கீழ், பரிந்துரைக்கப்படும் செக்யூரிட்டிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். வேறொரு செக்யூரிட்டியைத் தேட, ஒப்பிடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  4. ஒப்பிடுவதில் இருந்து செக்யூரிட்டியை அகற்ற Remove ஐகானைக் கிளிக் செய்யவும்.

செக்யூரிட்டியைப் பின்தொடர்வதை நிறுத்துதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு செக்யூரிட்டியைத் தேடவும், எடுத்துக்காட்டாக "டௌ ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ்" (Dow Jones Industrial Average).
  3. செக்யூரிட்டியின் பெயருக்கு அடுத்துள்ள பின்தொடர்கிறீர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • “பின்தொடர்கிறீர்கள்” என்பது காட்டப்படவில்லை எனில் ✓ குறியீட்டைக் கிளிக் செய்யவும்.
  4. செக்யூரிட்டியை அகற்ற வேண்டிய 'கண்காணிப்பவை' பட்டியல்களைத் தேர்வுநீக்க, நீலநிற ✓ குறியீட்டைக் கிளிக் செய்யவும்.

சந்தைகளை ஒப்பிடுதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. குறிப்பிட்ட நேரத்திற்கான சந்தை செயல்திறன் குறித்த விளக்கப்படத்தைப் பார்க்க, திரையின் மேலே உள்ள சந்தைகளை ஒப்பிடு என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. ஒரு சந்தையைத் தேர்வுசெய்யவும். உதாரணத்திற்கு, “ஐரோப்பா” அல்லது “நாணயங்கள்.”

'கண்காணிப்பவை' பட்டியல்களை உருவாக்குதல் & ஒப்பிடுதல்

பிரத்தியேகமான 'கண்காணிப்பவை' பட்டியல்கள் மூலம் நீங்கள் பின்தொடரும் செக்யூரிட்டிகளை ஒழுங்குபடுத்தலாம்.

பிரத்தியேகமான 'கண்காணிப்பவை' பட்டியலை உருவாக்குதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. ”நான் கண்காணிப்பவை” என்பதற்குக் கீழே உள்ள புதிதாகக் கண்காணிப்பவை என்பதைத் தட்டவும். 
    • “புதிதாகக் கண்காணிப்பவை” பட்டியல் காட்டப்படவில்லை எனில் வலதுபுறம் செல்லவும்.
  3. 'கண்காணிப்பவை' பட்டியலுக்குப் பெயரிடவும். உதாரணத்திற்கு, “எனக்குப் பிடித்த பங்குகள்.”
  4. 'கண்காணிப்பவை' பட்டியலில் சந்தை/நிறுவனங்களைச் சேர்க்க, முதலீடுகளைச் சேர் என்பதைத் தட்டவும்.

'கண்காணிப்பவை' பட்டியலில் உள்ள செக்யூரிட்டி தொடர்பான செய்திகளைப் பார்த்தல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. "நான் கண்காணிப்பவை” என்பதன் கீழே இருக்கும் ஒரு கண்காணிப்பவை பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இது தொடர்பான செய்திகளைப் பார்க்க "நான் கண்காணிப்பவை தொடர்பான செய்திகள்" என்பதற்குக் கீழே உள்ள பட்டியலுக்கு ஸ்க்ரோல் செய்து செல்லவும்.

பிரத்தியேகமான 'கண்காணிப்பவை' பட்டியலின் பெயரை மாற்றுதல் அல்லது பட்டியலை நீக்குதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. "நான் கண்காணிப்பவை" என்பதற்குக் கீழ், பெயரை மாற்ற விரும்பும் அல்லது நீக்க விரும்பும் 'கண்காணிப்பவை' பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும். 
    • உதவிக்குறிப்பு: இயல்பான 'கண்காணிப்பவை' பட்டியலைப் (“கண்காணிப்பவை” என்று அழைக்கப்படுவது) பெயர் மாற்றம் செய்யவோ நீக்கவோ முடியாது. பிரத்தியேகமான 'கண்காணிப்பவை' பட்டியல்களை மட்டுமே பெயர் மாற்றம் செய்யவும் நீக்கவும் முடியும்.
  3. மேலே வலதுபுறத்தில் உள்ள More ஐகானைத் தட்டவும்.
  4. பெயர் மாற்று அல்லது நீக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12571554783126380827
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false