அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

செய்தி வெளியீட்டாளர் குறித்து அறிதல்

செய்தி வெளியீட்டாளரைத் தேடும்போது தகவல் பலகத்தில் அவர்களது உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையையும் தரத்தையும் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் தகவல்கள் காட்டப்படும்.

என்ன தகவல் காட்டப்படும்?

வெளியீட்டாளர்கள் குறித்த தகவல்களைக் காட்ட அல்காரிதத்தை Google பயன்படுத்துகிறது. கிடைக்கக்கூடிய தகவல்களின் அளவையும் தரத்தையும் பொறுத்து இந்தத் தாவல்கள் உங்களுக்குக் காட்டப்படக்கூடும்:

  • ஒன்றைப் பற்றி எழுதுவது: வெளியீட்டாளர் மூலம் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் தலைப்புகள்.
  • விருதுகள்: வெளியீட்டாளர் பெற்ற குறிப்பிடத்தக்க விருதுகள்.
  • மதிப்பாய்வு செய்யப்பட்ட கூற்றுகள்: அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பாளர் மூலம் கணிசமான அளவில் வெளியீட்டாளரின் சமீபத்திய உள்ளடக்கம் மதிப்பாய்வு செய்யப்படும்போது இது காட்டப்படும்.

கவனத்திற்கு: வெளியீட்டாளருக்கான தகவல் பலகம் தோன்றுவதால் Google தேடல் முடிவுகளில் அவரது பக்கங்களின் தரவரிசையில் பாதிப்பு ஏற்படாது. தகவல் பலகத்தைப் பெறுவதிலிருந்து வெளியீட்டாளர்கள் விலக முடியாது.

தகவல் பலகம் குறித்த கருத்தை அனுப்புதல்

தகவல் பலகம் குறித்த கருத்தை அனுப்ப, அதற்குக் கீழ் உள்ள கருத்து? என்பதைத் தட்டவும்/கிளிக் செய்யவும்.

FAQகள்

தகவல் பலகத்தில் வெளியீட்டாளர் எப்படித் தகவல்களைச் சேர்ப்பது?

தகவல் பலகத்தில் என்ன காட்டப்படும் என்பதில் தேடல் முடிவுகள் போன்ற பல காரணிகள் அடங்கும். புதிய, செய்தி தொடர்பான ஆன்லைன் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து உருவாக்குவதன் மூலம் தகவல் பலகத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வெளியீட்டாளர்களுக்கு அதிகரிக்கும்.

Searchசில் உள்ள வெளியீட்டாளரின் தரவரிசையில் தகவல் பலகங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.

தாங்கள் ஏற்காத மதிப்பாய்வு செய்யப்பட்ட கூற்றுகளை வெளியீட்டாளர்கள் எப்படிச் சரிசெய்வது?

உண்மைச் சரிபார்ப்பு மார்க் அப்பைப் பயன்படுத்தி பிற வெளியீட்டாளர்களுக்கு உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்வதன் மூலமாகவும் அதிகாரப்பூர்வமானது என்பதைத் தீர்மானிக்க அல்காரிதம் அடிப்படையில் தீர்மானிப்பதன் மூலமாகவும் வெளியீட்டாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட கூற்றுகள் உருவாக்கப்படுகின்றன. வெளியீட்டாளர் மதிப்பாய்வு செய்யப்பட்ட கூற்று தவறானது என நம்பினால் மதிப்பாய்வை எழுதிய உண்மைச் சரிபார்ப்பாளரைத் தொடர்புகொள்ளுமாறு Google பரிந்துரைக்கிறது. துல்லியமற்றதாக உள்ளது என நினைக்கும் கூற்றுகள் குறித்து புகாரளிக்க, தகவல் பலகத்தில் உள்ள கருத்தை வழங்குவதற்கான இணைப்பையும் வெளியீட்டாளர் பயன்படுத்தலாம்.

துல்லியத்தன்மையில் சிக்கல்களைக் கொண்ட வெளியீட்டாளர்களுக்கு மட்டும் மதிப்பாய்வு செய்யப்பட்ட கூற்றுகள் என்ற தாவலைக் காட்டுகிறீர்களா?

இல்லை, மூன்றாம் தரப்பு உண்மைச் சரிபார்ப்பின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தலைப்புகள் குறித்து வெளியீட்டாளர் எழுதுகிறார் என்பதைத் தாவல் குறிக்கிறது. துல்லியத்தன்மைக்காகவும் தகவல் பலகத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்ட கூற்றுகளுக்கான தாவல் காட்டப்படுவதற்காகவும் மூன்றாம் தரப்பினர் மூலம் வெளியீட்டாளர்கள் தொடர்ந்து உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7120352869833597352
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false