அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

தேடல் முடிவுகளில் உண்மை சரிபார்ப்புகளைப் பார்த்தல்

உண்மை சரிபார்ப்பு எப்படி இருக்கும்?

Google Searchசில்

உங்கள் தேடலுக்குத் தொடர்புடைய கூற்றில் ஒரு தளம் உண்மை சரிபார்ப்பை மேற்கொண்டிருந்தால் உங்கள் பின்வருபவற்றைத் தெரிவிக்கும் ஒரு பெட்டியைக் கொண்ட தேடல் முடிவைப் பெறுவீர்கள்:

  • சரிபார்க்கப்படும் கூற்று
  • கூற்றை உருவாக்கியவர்
  • உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்ளும் வெளியீட்டாளரின் பெயர்
  • வெளியீட்டாளர் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பின் சுருக்க விவரம்

Google Imagesஸில்

உண்மை சரிபார்க்கப்பட்ட தொடர்புடைய உள்ளடக்கத்தைக் கொண்ட பக்கத்தில் உள்ள படம் எனில், இவற்றைக் காணலாம்:

தேடல் முடிவுகளில்:

  • சிறு படத்தின் மீது "உண்மை சரிபார்ப்பு" லேபிள்
  • உண்மை சரிபார்ப்பை மேற்கொள்ளும் டொமைனின் பெயர்

தேடல் முடிவுகளில் இருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு:

  • கூற்று
  • உண்மை சரிபார்ப்பை மேற்கொண்ட வெளியீட்டாளரின் பெயர்
  • வெளியீட்டாளர் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பின் சுருக்க விவரம்

Google Newsஸில்

செய்தி வெளியீட்டாளர்களால் உண்மை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்ட செய்திக் கட்டுரைகளை Google Newsஸில் சில இடங்களில் கண்டறியலாம்:

  • முக்கியச் செய்திகள்: இந்தச் செய்திக் கட்டுரைகளில் “உண்மை சரிபார்ப்பு” லேபிள் இருக்கும்.
  • முழு கவரேஜ் முழு கவரேஜ்: இதில் பிரத்தியேக "உண்மை சரிபார்ப்புப்" பிரிவு இருக்கும்.
  • கம்ப்யூட்டரில்: சில நாடுகளுக்கு Google Newsஸில் “உண்மை சரிபார்ப்பு” கார்டு இருக்கும்.

உண்மை சரிபார்ப்பை மறுத்தல்

உண்மை சரிபார்ப்புகளை Google உருவாக்குவதில்லை. உண்மை சரிபார்ப்பை மறுக்கிறீர்கள் எனில் அதை வெளியிட்ட இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்ளவும்.

ஸ்பேம் அல்லது தவறான பயன்பாடு குறித்துப் புகாரளித்தல்

தகாத உள்ளடக்கம் அல்லது கட்டண இணைப்புகள் போன்று ஸ்பேம் என நீங்கள் கருதும் தகவல்களைத் தேடல் முடிவுகளில் பெற்றால், அது குறித்து எங்களுக்குக் கருத்தை அனுப்பலாம். கருத்தை அனுப்புவதால் சிக்கலைச் சரிசெய்ய எங்களுக்கு உதவலாம், ஆனால் அதற்கு நேரடியாகப் பதிலளிக்க மாட்டோம்.

Google Searchசில்

  1. உண்மை சரிபார்ப்பிற்குக் கீழ் உள்ள கருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. சிக்கலைக் குறிப்பிட்டதும் அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Google Newsஸில்

ஆப்ஸில்

  1. மொபைலில் Google News ஆப்ஸை Google News திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. கீழே ஸ்க்ரோல் செய்து உதவி & கருத்து அதன் பிறகுகருத்தை அனுப்பு என்பதைத் தட்டவும்.
  4. சிக்கலைக் குறிப்பிட்டதும், அனுப்பு அனுப்பு என்பதைத் தட்டவும்.

டெஸ்க்டாப்பில்

  1. Google News ஆப்ஸிற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று கருத்தை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சிக்கலைக் குறிப்பிட்டதும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உண்மை சரிபார்ப்பை Google தீர்மானிக்கும் விதம்

வெளியீட்டாளர் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பு குறிப்பிட்ட தேவைகளுடன் இணங்கினால் அதன் சுருக்க விவரத்தை Google தானாகவே காட்டும். அந்தத் தேவைகளின் சுருக்கத் தொகுப்பு:

  • உண்மை சரிபார்ப்பை மேற்கொண்ட வெளியீட்டாளர் நம்பகமான தகவல் மூலமாக இருக்க வேண்டும் (அல்காரிதம் மூலம் தீர்மானிக்கப்படும்)
  • உள்ளடக்கம் இவற்றைத் தெளிவாகக் கூற வேண்டும்:
    • எந்தெந்த கூற்றுகள் சரிபார்க்கப்படுகின்றன
    • கூற்றுகள் குறித்த முடிவுகள்
    • முடிவுகள் எடுக்கப்பட்ட விதம்
    • தகவலின் மேற்கோள்கள் மற்றும் முதன்மை மூலங்கள்

இந்த உண்மை சரிபார்ப்புகளில் எதையும் Google ஆதரிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

வெளியீட்டாளராக இருப்பின் உண்மைச் சரிபார்ப்பு உள்ளடக்கத்தை Google எவ்வாறு தீர்மானிக்கிறது என்பது குறித்து அறிக. டெவெலப்பர் எனில் உங்கள் பக்கத்தில் கட்டமைந்த தரவை எவ்வாறு சேர்ப்பது என்பதை அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17496389583876114467
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false