அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

”Ok Google” அம்சத்தில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல்

Android ஃபோன் & டேப்லெட்களில் பிழையறிந்து திருத்துதல்

Android சாதனத்தில் “Ok Google” எனக் கூறும்போது உங்கள் Google Assistant வேலை செய்யவில்லை என்றாலோ பதிலளிக்கவில்லை என்றாலோ Google Assistant, Ok Google, Voice Match ஆகியவை இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்:

  1. Android ஃபோன்/டேப்லெட்டில், Google Assistant ஆப்ஸை Assistant திறந்து “Assistant அமைப்புகள்” எனக் கூறவும்.
  2. "பிரபலமான அமைப்புகள்" என்பதற்குக் கீழ் உள்ள Voice Match என்பதைத் தட்டவும்.
  3. Ok Google என்பதை இயக்கிய பின்னர் Voice Match அம்சத்தை அமைக்கவும்.

மேலும் உதவி பெறுவதற்கும் iPhone/iPadகளில் உள்ள சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துவதற்கும் ஃபோன்/டேப்லெட்டில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்வது எப்படி என அறியவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் சாதனத்தில் Google Workspace for Education கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது "Ok Google" எனக் கூறி Assistantடைப் பயன்படுத்த முடியவில்லை எனில் "Ok Google" செயல்படத் தேவையான அமைப்புகளை உங்கள் நிர்வாகி முடக்கியிருக்கலாம். உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளவும்.

ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள், ஸ்மார்ட் கிளாக்குகள் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஸ்பீக்கர், ஸ்மார்ட் டிஸ்ப்ளே அல்லது ஸ்மார்ட் கிளாக்கைச் சரிபார்க்கவும்.

  1. சாதனங்கள் பிளக் இன் செய்யப்பட்டு ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. அது இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுடன் உங்கள் மொபைல் சாதனம் இணைக்கப்பட்டிருக்கும் அதே வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
  3. மைக்ரோஃபோன் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்:
    • ஸ்பீக்கர்கள் (Google Home தவிர), ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள், அல்லது ஸ்மார்ட் கிளாக்குகள்: உங்கள் சாதனத்தின் பின்புறத்தில் உள்ள மைக்ரோஃபோன் ஸ்விட்ச் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். மைக்ரோஃபோன் இயக்கத்தில் இல்லையெனில் இந்த ஸ்விட்ச் பெரும்பாலும் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.
    • Google Home: ஸ்பீக்கரின் பின்புறத்தில் உள்ள மைக்ரோஃபோனை ஒலியடக்கும் பட்டனை அழுத்தி மைக்ரோஃபோனை இயக்கவும் முடக்கவும் முடியும். மைக்ரோஃபோன் இயக்கத்தில் உள்ளதா அல்லது ஒலியடக்கப்பட்டுள்ளதா என்பதை Assistant தெரிவிக்கும்.

ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள், ஸ்மார்ட் கிளாக்குகள் தொடர்பான கூடுதல் உதவிக்கு ஸ்பீக்கர், ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் கிளாக் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எப்படித் தீர்ப்பது என அறியவும் அல்லது “Ok Google” எனக் கூறினால் Google Assistant எவ்வளவு விரைவாகப் பதிலளிக்க வேண்டும் என்பதை எப்படிச் சரிசெய்வது என அறியவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15618334275725382733
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false