அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google தேடல் முடிவுகளில் இருந்து இடம் குறித்த தகவலை மொபைலுக்கு அனுப்புதல்

 Googleளில் இடத்தைத் தேடும்போது அதுகுறித்த தகவலைப் பயணத்தின்போது பயன்படுத்த மொபைலுக்கோ டேப்லெட்டிற்கோ அனுப்பலாம்.

முக்கியம்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்நுழைந்திருக்கும் அதே Google கணக்கின் மூலம் மொபைல்/டேப்லெட்டிலும் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.

  1. உங்கள் கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் ஒரே Google கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. கம்ப்யூட்டரில் Googleளில் ஓர் இடத்தைத் தேடவும்.
  3. தோன்றும் தகவல் பேனலில் "எனது மொபைலுக்கு அனுப்பு" என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள். அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து பிறகு தகவலை எங்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்.
  4. உங்கள் மொபைல் சாதனத்தில் அறிவிப்பைப் பெறுவீர்கள். Google Maps ஆப்ஸில் இடத்தைத் திறப்பதற்கு அறிவிப்பைத் தொடவும்.

கவனத்திற்கு: இடம் குறித்த தகவலை மொபைலுக்கு அனுப்ப Google Mapsஸையும் பயன்படுத்தலாம்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

சாதனம் காட்டப்படமால் இருத்தல்

"அனுப்பு" என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் மொபைல்/டேப்லெட் காட்டப்படவில்லை எனில் சாதனத்தை உங்கள் Google கணக்குடன் இணைக்க வேண்டியிருக்கும்.

  1. சமீபத்திய Google Maps ஆப்ஸ் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. கம்ப்யூட்டரிலும் மொபைல் சாதனத்திலும் ஒரே Google கணக்கில் உள்நுழையவும்.
    • கம்ப்யூட்டரில் உள்நுழைதல்: Googleளுக்குச் செல்லவும். மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழைக என்பதையோ உங்கள் கணக்கின் சுயவிவரத்தையோ தேர்ந்தெடுக்கவும்.
    • மொபைலிலோ டேப்லெட்டிலோ உள்நுழைதல்: Google Maps ஆப்ஸைத் Maps திறக்கவும். மேல் வலதுபுறத்தில் உங்கள் Google கணக்கின் சுயவிவரப் படம் இருக்கும். கம்ப்யூட்டரில் நீங்கள் பயன்படுத்திய அதே கணக்கு காட்டப்படவில்லை எனில் சுயவிவரப் படம் அதன் பிறகு மற்றொரு கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் சாதனத்தில் அறிவிப்புகளை இயக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
  4. சில நிமிடங்கள் கழித்து கம்ப்யூட்டரில் மீண்டும் தேடவும்.

அறிவிப்புகளைப் பெறாமல் இருத்தல்

அறிவிப்புகளைப் பெறவில்லை எனில் நெட்வொர்க்குடன் உங்கள் மொபைல்/டேப்லெட் இணைக்கப்படாமல் இருக்கக்கூடும். டேட்டா/வைஃபை இயக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிவிப்புகளை இயக்கியுள்ளீர்களா என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.

Android

Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Discoverரை இயக்க:

  1. Google ஆப்ஸின் சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. Google ஆப்ஸைத் Google ஆப்ஸ் திறக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு பொது என்பதைத் தட்டவும்.
  4. Discoverரை இயக்கவும்.

Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ அறிவிப்புகளை இயக்க:

  1. Google ஆப்ஸின் சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. Google ஆப்ஸைத் Google ஆப்ஸ் திறக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. Google அறிவிப்புகள் அனைத்தும் என்பதை இயக்கவும்.

iPhone & iPad

உங்கள் iPhoneனிலோ iPadலோ அறிவிப்புகளை இயக்க:

அமைப்புகள் ஆப்ஸில் அறிவிப்புகளை இயக்கவும்

  1. அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. ஸ்க்ரோல் செய்து Google Maps என்பதைத் தட்டவும்.
  4. அறிவிப்புகளை அனுமதி என்பதை இயக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16292737356162618861
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false