‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போது Googleளில் தேடினால், இதுவரை தேடியவை போன்ற செயல்பாட்டை உங்கள் Google கணக்கில் Google சேமிக்கும். உங்கள் அனுபவத்தை மிகவும் பிரத்தியேகமாக்க, Google சேவைகள் முழுவதிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த தரவை (இருப்பிடங்கள் போன்ற தொடர்புடையை தகவல் உட்பட) இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அம்சம் உங்கள் கணக்கில் சேமிக்கும். மேலும் பிரத்தியேக அனுபவங்களை வழங்க (எ.கா. ஆப்ஸ் மற்றும் உள்ளடக்கப் பரிந்துரைகள்) நீங்கள் சேமித்த செயல்பாடுகளை நாங்கள் பயன்படுத்துவோம்.
எனது செயல்பாடு பக்கத்தில் இவற்றைச் செய்யலாம்:
- Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நீக்கலாம்.
- எந்தெந்தச் செயல்பாடுகளை Google சேமிக்கிறது, ‘இதுவரை தேடியவை’ விவரங்களை Google எப்போது தானாக நீக்குகிறது ஆகியவற்றுக்கான Search அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
Google கணக்கிலிருந்து வெளியேறியிருக்கும்போது Google ஆப்ஸைப் பயன்படுத்துவது போன்ற சமயங்களில் தேடல் விவரங்கள் உங்கள் சாதனத்திலும் சேமிக்கப்படலாம். சாதனத்திலுள்ள தேடல் விவரங்களை எப்படி நிர்வகிப்பது என அறிக.
Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நிர்வகித்தல்
தேடல் விவரங்களை நீக்குதல்
முக்கியம்: Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நீக்கினால் அவற்றை மீட்டெடுக்க முடியாது.
குறிப்பிட்ட செயல்பாட்டை நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட நாள், குறிப்பிடும் தேதி வரம்பு, எல்லா நேரமும் போன்றவற்றைத் தேர்வுசெய்து உங்கள் தேடல் விவரங்களை நீக்கலாம்.
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து தேடல் விவரங்கள் என்பதைத் தட்டவும்.
- நீக்க விரும்பும் தேடல் விவரங்களைத் தேர்வுசெய்யவும். இவற்றைத் தேர்வுசெய்யலாம்:
- தேடல் விவரங்கள் அனைத்தும்: தேடல் விவரங்களுக்கு மேலே உள்ள நீக்கு எல்லாம் நீக்கு என்பதைத் தட்டவும்.
- குறிப்பிட்ட காலக்கட்டம்: தேடல் விவரங்களுக்கு மேலே உள்ள நீக்கு குறிப்பிடும் தேதி வரம்பின்படி நீக்கு என்பதைத் தட்டவும்.
- குறிப்பிட்ட நாள்: தேடல் விவரங்களை நீக்க வேண்டிய நாளுக்கு அடுத்துள்ள ‘[நாள்]ன் அனைத்துச் செயல்பாடுகளையும் நீக்கு’ என்பதைத் தட்டவும்.
- குறிப்பிட்ட செயல்பாடு: நீக்க வேண்டிய செயல்பாட்டுக்கு அடுத்துள்ள ‘செயல்பாட்டை நீக்கு’ என்பதைத் தட்டவும்.
தேடல் விவரங்களைக் கட்டுப்படுத்துதல்
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து தேடல் விவரங்கள் கட்டுப்பாடுகள் என்பதைத் தட்டவும்.
- "இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு" கார்டில் உள்ள தானாக நீக்குதல் (முடக்கப்பட்டுள்ளது) என்பதைத் தட்டவும்.
- “தானாக நீக்குதல் (இயக்கப்பட்டுள்ளது)” எனக் காட்டப்பட்டால் தேடல் விவரங்கள் அடங்கிய உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் Google தானாக நீக்கும். கால அளவை மாற்றவோ அம்சத்தை முடக்கவோ தானாக நீக்குதல் (இயக்கப்பட்டுள்ளது) என்பதைத் தட்டவும்.
- திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
தேடல் விவரங்கள் சேமிக்கப்படுவதை இடைநிறுத்த:
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்து இதுவரை தேடியவை கட்டுப்பாடுகள் என்பதைத் தட்டவும்.
- "இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு" என்பதற்குக் கீழ் உள்ள முடக்கு என்பதைத் தட்டவும்.
- முடக்கு அல்லது முடக்கு & செயல்பாட்டை நீக்கு என்பதைத் தட்டவும்.
- “முடக்கு & செயல்பாட்டை நீக்கு” என்பதை நீங்கள் தேர்வுசெய்தால் நீங்கள் நீக்க விரும்பும் செயல்பாடு எது என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய, கூடுதல் படிகளைப் பின்பற்றவும்.
சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நிர்வகித்தல்
தேடல் பட்டியில் இருந்து சமீபத்திய செயல்பாட்டு விவரங்களை நீக்குதல்- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- தேடல் பட்டியைத் தட்டி, நீக்க விரும்பும் செயல்பாட்டைக் கண்டறியவும்.
- அதை இடதுபுறம் ஸ்வைப் செய்துவிட்டு 'நீக்கு' என்பதைத் தட்டவும்.
தேடல் விவரங்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படவில்லை என்றாலும் அவற்றை ‘எனது செயல்பாடு’ பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தாலும் கூட உங்கள் உலாவி இன்னமும் அவற்றைச் சேமித்து வைத்திருக்கக்கூடும்.
உலாவியில் இருந்து தேடல் விவரங்களை நீக்கலாம்:
- Chromeமில்: உலாவல் விவரங்களையும் பிற உலாவல் தரவையும் நீக்குவது எப்படி என அறிக.
- பிற உலாவிகளில்: அவற்றில் காட்டப்படும் வழிமுறைகளைப் பார்க்கவும்.
Google கணக்கிலிருந்து வெளியேறியிருக்கும்போது Google ஆப்ஸைப் பயன்படுத்தினால் அது தேடல் விவரங்களை உங்கள் சாதனத்தில் சேமிக்கும்.
உதவிக்குறிப்பு: Google ஆப்ஸில் தேடல் விவரங்களை நீக்கினாலும் அவை இன்னமும் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும். Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களைக் கண்டறிந்து நீக்க, ‘எனது செயல்பாடு’ பக்கத்திற்குச் செல்லவும்.
சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நீக்க:
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பெயரின் முதலெழுத்து அமைப்புகள் தனியுரிமை & பாதுகாப்பு தேடல் விவரங்கள் ஆப்ஸில் பார்த்தவை என்பதைத் தட்டவும்.
- தேடல் விவரங்கள் காட்டப்பட்டால் அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
தேடல் பட்டியில் இருந்து தேடல்களை நீக்க:
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- தேடல் பட்டியைத் தட்டி அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
- “சமீபத்திய தேடல்கள்” என்பதற்கு மேற்பகுதியில் “தேடல் விவரங்களை நிர்வகியுங்கள்” என்பது இருந்தால் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பது பொருள்.
- சமீபத்திய தேடலை நீக்க, அதை இடதுபுறம் ஸ்வைப் செய்துவிட்டு 'நீக்கு' என்பதைத் தட்டவும்.
- அனைத்துத் தேடல்களையும் நீக்க, அனைத்தையும் அழி சாதனத்திலுள்ள விவரங்கள் அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
- iPhone/iPadல் Google ஆப்ஸை திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்து அமைப்புகள் தனியுரிமை & பாதுகாப்பு தேடல் விவரங்கள் Searchசைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைத் தட்டவும்.
- Searchசைப் பிரத்தியேகமாக்குதல் அமைப்பை முடக்கவும்.
தேடல் விவரங்கள் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்
நீக்கப்பட்ட விவரங்கள் ‘எனது செயல்பாடு’ பக்கத்தில் காட்டப்படுகிறது- சாதனத்தை இணையத்துடன் இணைத்தல்: ஒரு சாதனத்தில் ‘எனது செயல்பாடு’ பக்கத்தில் இருந்து தேடல் விவரங்களை நீக்கினாலும் ஆஃப்லைனில் உள்ள சாதனத்தில் அவை தொடர்ந்து காட்டப்படக்கூடும். சாதனத்தை இணையத்துடன் இணைக்கும்போது, நீங்கள் நீக்கிய தேடல் விவரங்கள் அகற்றப்படும்.
- தற்காலிமாகச் சேமித்த தகவல்களையும் குக்கீகளையும் அழித்தல்: தற்காலிமாகச் சேமித்த தகவல்களையும் குக்கீகளையும் அழிப்பது எப்படி என அறிக.
‘தேடலைப் பிரத்தியேகமாக்குதல்’ அமைப்பை முடக்க:
- iPhone/iPadல் Google ஆப்ஸை திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அமைப்புகள் தனியுரிமை & பாதுகாப்பு தேடல் விவரங்கள் தேடலைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைத் தட்டவும்.
- தேடலைப் பிரத்தியேகமாக்குதல் அமைப்பை முடக்கவும்.
சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நீக்க:
- iPhone/iPadல் Google ஆப்ஸை திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அமைப்புகள் தனியுரிமை & பாதுகாப்பு தேடல் விவரங்கள் ஆப்ஸில் பார்த்தவை என்பதைத் தட்டவும்.
- தேடல் விவரங்கள் காட்டப்பட்டால் அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
உங்கள் Google கணக்கில் உள்ள தேடல் விவரங்களை Google எவ்வாறு நீக்குகிறது?
செயல்பாட்டை நேரடியாக நீங்கள் நீக்கினாலோ தானாக நீக்குதல் அமைப்பின் அடிப்படையில் செயல்பாடு தானாகவே நீக்கப்பட்டாலோ தயாரிப்பிலும் எங்கள் சிஸ்டத்திலும் இருந்து அதை அகற்றும் செயல்முறையை உடனடியாக நாங்கள் தொடங்குவோம்.
முதலில், அதைப் பார்வையிலிருந்து உடனடியாக அகற்ற முயலுவோம். மேலும் அந்தத் தரவை உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவதற்கு இனி பயன்படுத்த முடியாது.
பிறகு, எங்கள் சேமிப்பு சிஸ்டங்களில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கான செயல்பாட்டைத் தொடங்குவோம்.
தொடர்புடைய கட்டுரைகள்
- உங்கள் செயல்பாட்டை நீக்குதல்
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைப் பார்த்தல் & கட்டுப்படுத்துதல்
- ஆடியோ ரெக்கார்டிங்குகளை இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் நிர்வகித்தல்
- Google ஆப்ஸின் அமைப்புகளை மாற்றுதல்
- மறைநிலையில் தேடுதல் & உலாவுதல்
-
உங்கள் செயல்பாட்டுத் தரவைப் பயன்படுத்தி Search எவ்வாறு செயல்படுகிறது?