அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

இதுவரை தேடியவற்றை நிர்வகித்தலும் நீக்குதலும்

‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போது Googleளில் தேடினால், இதுவரை தேடியவை போன்ற செயல்பாட்டை உங்கள் Google கணக்கில் Google சேமிக்கும். உங்கள் அனுபவத்தை மிகவும் பிரத்தியேகமாக்க, Google சேவைகள் முழுவதிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த தரவை (இருப்பிடங்கள் போன்ற தொடர்புடையை தகவல் உட்பட) இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அம்சம் உங்கள் கணக்கில் சேமிக்கும். மேலும் பிரத்தியேக அனுபவங்களை வழங்க (எ.கா. ஆப்ஸ் மற்றும் உள்ளடக்கப் பரிந்துரைகள்) நீங்கள் சேமித்த செயல்பாடுகளை நாங்கள் பயன்படுத்துவோம்.

எனது செயல்பாடு பக்கத்தில் இவற்றைச் செய்யலாம்:

  • Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நீக்கலாம்.
  • எந்தெந்தச் செயல்பாடுகளை Google சேமிக்கிறது, ‘இதுவரை தேடியவை’ விவரங்களை Google எப்போது தானாக நீக்குகிறது ஆகியவற்றுக்கான Search அமைப்புகளை நிர்வகிக்கலாம்.

Google கணக்கிலிருந்து வெளியேறியிருக்கும்போது Google ஆப்ஸைப் பயன்படுத்துவது போன்ற சமயங்களில் தேடல் விவரங்கள் உங்கள் சாதனத்திலும் சேமிக்கப்படலாம். சாதனத்திலுள்ள தேடல் விவரங்களை எப்படி நிர்வகிப்பது என அறிக.

Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நிர்வகித்தல்

தேடல் விவரங்களை நீக்குதல்

முக்கியம்: Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நீக்கினால் அவற்றை மீட்டெடுக்க முடியாது.

குறிப்பிட்ட செயல்பாட்டை நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட நாள், குறிப்பிடும் தேதி வரம்பு, எல்லா நேரமும் போன்றவற்றைத் தேர்வுசெய்து உங்கள் தேடல் விவரங்களை நீக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் 'எனது செயல்பாடு' பக்கத்தில் தேடல் விவரங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. நீக்க விரும்பும் தேடல் விவரங்களைத் தேர்வுசெய்யவும். இவற்றைத் தேர்வுசெய்யலாம்:
    • தேடல் விவரங்கள் அனைத்தும்: தேடல் விவரங்களுக்கு மேலே உள்ள நீக்கு Down arrow அதன் பிறகு எல்லாம் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட காலக்கட்டம்: தேடல் விவரங்களுக்கு மேலே உள்ள நீக்கு Down arrow அதன் பிறகு குறிப்பிடும் தேதி வரம்பின்படி நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட நாள்: தேடல் விவரங்களை நீக்க வேண்டிய நாளுக்கு அடுத்துள்ள '[நாள்]ன் அனைத்துச் செயல்பாடுகளையும் நீக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட செயல்பாடு: நீக்க வேண்டிய செயல்பாட்டுக்கு அடுத்துள்ள ‘செயல்பாட்டை நீக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

தேடல் விவரங்களைக் கட்டுப்படுத்துதல்

தேடல் விவரங்களைத் தானாக நீக்குதல்
முக்கியம்: தானாக நீக்கப்படும் வகையில் தேடல் விவரங்களை அமைத்திருந்தாலும் கூட அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்களே நீக்கிக்கொள்ளலாம்.
  1. கம்ப்யூட்டரில் 'எனது செயல்பாடு' பக்கத்தில் தேடல் விவரங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. இடதுபுறம் அல்லது மேலே உள்ள கட்டுப்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு" கார்டில் உள்ள தானாக நீக்குதல் (முடக்கப்பட்டுள்ளது) என்பதைக் கிளிக் செய்யவும்.
    • “தானாக நீக்குதல் (இயக்கப்பட்டுள்ளது)எனக் காட்டப்பட்டால் தேடல் விவரங்கள் அடங்கிய உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் Google தானாக நீக்கும். கால அளவை மாற்றவோ அம்சத்தை முடக்கவோ தானாக நீக்குதல் (இயக்கப்பட்டுள்ளது) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
தேடல் விவரங்கள் சேமிக்கப்படுவதை இடைநிறுத்துதல்
உதவிக்குறிப்பு: மறைநிலையில் இருந்து இணையத்தில் தேடினாலோ உலாவினாலோ தேடல் விவரங்கள் Google கணக்கில் சேமிக்கப்படாது.

தேடல் விவரங்கள் சேமிக்கப்படுவதை இடைநிறுத்த:

  1. கம்ப்யூட்டரில் 'எனது செயல்பாடு' பக்கத்தில் தேடல் விவரங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. இடதுபுறம் அல்லது மேலே உள்ள கட்டுப்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு" என்பதற்குக் கீழ் உள்ள முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. முடக்கு அல்லது முடக்கு & செயல்பாட்டை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. “முடக்கு & செயல்பாட்டை நீக்கு” என்பதை நீங்கள் தேர்வுசெய்தால் நீங்கள் நீக்க விரும்பும் செயல்பாடு எது என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய, கூடுதல் படிகளைப் பின்பற்றவும்.

சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தேடல் விவரங்களை நிர்வகித்தல்

உலாவியில் இருந்து தேடல் விவரங்களை நீக்குதல்

தேடல் விவரங்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படவில்லை என்றாலும் அவற்றை ‘எனது செயல்பாடு’ பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தாலும் கூட உங்கள் உலாவி இன்னமும் அவற்றைச் சேமித்து வைத்திருக்கக்கூடும்.

உலாவியில் இருந்து தேடல் விவரங்களை நீக்கலாம்:

Google கணக்கில் இருந்து வெளியேறிய நிலையில் இருக்கும்போது ‘Searchசைப் பிரத்தியேகமாக்குதல்’ அமைப்பை முடக்குதல்

Googleளில் தேடும்போது உங்கள் Google கணக்கிலிருந்து நீங்கள் வெளியேறி இருந்தால், உங்கள் சமீபத்திய தேடல் தொடர்புடைய பரிந்துரைகளைப் பெறுவீர்கள். அவ்வாறு பெற விருப்பமில்லை என்றால் 'தேடல் பிரத்தியேகமாக்குதல்' அம்சத்தை முடக்கவும்.

  1. கம்ப்யூட்டரில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கீழே உள்ள அமைப்புகள் அதன் பிறகு Search அமைப்புகள் அதன் பிறகு Searchசைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைத் தட்டவும்.
  3. Searchசைப் பிரத்தியேகமாக்குதல் அமைப்பை முடக்கவும்.

உங்கள் Google கணக்கில் உள்ள தேடல் விவரங்களை Google எவ்வாறு நீக்குகிறது?

செயல்பாட்டை நேரடியாக நீங்கள் நீக்கினாலோ தானாக நீக்குதல் அமைப்பின் அடிப்படையில் செயல்பாடு தானாகவே நீக்கப்பட்டாலோ தயாரிப்பிலும் எங்கள் சிஸ்டத்திலும் இருந்து அதை அகற்றும் செயல்முறையை உடனடியாக நாங்கள் தொடங்குவோம்.

முதலில், அதைப் பார்வையிலிருந்து உடனடியாக அகற்ற முயலுவோம். மேலும் அந்தத் தரவை உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவதற்கு இனி பயன்படுத்த முடியாது.

பிறகு, எங்கள் சேமிப்பு சிஸ்டங்களில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கான செயல்பாட்டைத் தொடங்குவோம். 

பிசினஸ் அல்லது சட்டத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக Google சில வகையான தரவை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3159359274065125956
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false