உங்கள் பணிக்காகவோ சிறுவர்களுக்காகவோ உங்களுக்காகவோ Google Searchசைப் பயன்படுத்தும்போது, அதன் முடிவுகளில் காட்டப்படும் வெளிப்படையான உள்ளடக்கத்தை நிர்வகிக்க ‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் உதவும். வெளிப்படையான முடிவுகளில் இவை அடங்கும்:
- நிர்வாணம், தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும் பாலியல் செயல்கள், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்
- வன்முறை மற்றும் கொடூரமான உள்ளடக்கம்
Google Searchசின் உள்ளடக்கக் கொள்கைகள் குறித்து மேலும் அறிக.
முக்கியம்: Google Search முடிவுகளில் மட்டுமே ‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் செயல்படும். பிற தேடல் இன்ஜின்களிலோ நீங்கள் நேரடியாகப் பார்க்கும் இணையதளங்களிலோ வெளிப்படையான உள்ளடக்கம் காட்டப்படுவதை இது தடுக்காது.
‘பாதுகாப்பான தேடல்’ அமைப்புகளை மாற்றுதல்
பாதுகாப்பான தேடல் அமைப்புகளுக்குச் செல்உங்களிடம் Google கணக்கு இருந்தால், உங்கள் தனிப்பட்ட கணக்கு, உலாவி ஆகியவற்றின் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை நீங்களே நிர்வகிக்கலாம்.
- கம்ப்யூட்டரில் ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பிற்குச் செல்லவும்.
- வடிகட்டு, மங்கலாக்கு, முடக்கு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் பூட்டு ஐகான்
காட்டப்பட்டால், ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பு லாக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
- உதவிக்குறிப்பு: உங்களுக்கான ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பை நிர்வகிப்பது யார் என்பது குறித்த தகவல்களை அமைப்புகள் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கான ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பு ஏன் லாக் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
- மேல் வலதுபுறத்தில் பூட்டு ஐகான்
உதவிக்குறிப்பு: உங்கள் 'பாதுகாப்பான தேடல்' அமைப்பை நிர்வகிக்க, Google Search முடிவுகள் பக்கத்தில் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைக் கிளிக் செய்யவும்.
‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் செயல்படும் விதம்
Google Searchசில், வயதுவந்தோர் உள்ளடக்கம், கொடூரமான வன்முறைக் காட்சிகள் போன்ற வெளிப்படையான உள்ளடக்கத்தைப் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தால் கண்டறிய முடியும்.
- கண்டறியப்பட்ட வெளிப்படையான உள்ளடக்கத்தைத் தடுக்க, வடிகட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் 18 வயது நிரம்பாதவராக இருக்கலாம் என Googleளின் சிஸ்டங்கள் குறிப்பிடும்போது இதுவே இயல்பான அமைப்பாக இருக்கும்.
- வெளிப்படையான படங்களை மங்கலாக்க, மங்கலாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலே உள்ள அமைப்பு பயன்படுத்தப்படவில்லை எனில் இதுவே இயல்பான அமைப்பாக இருக்கும்.
- வெளிப்படையான படங்களை மங்கலாக்க இந்த அமைப்பு உதவும், ஆனால் உங்கள் தேடலுக்குப் பொருத்தமானதாக இருக்கும் வெளிப்படையான வார்த்தைகளும் இணைப்புகளும் காட்டப்படலாம்.
- ‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் முடக்கப்பட்டிருக்கும்போது உங்கள் தேடலுக்குப் பொருத்தமான முடிவுகள் அவை வெளிப்படையான உள்ளடக்கமாக இருந்தாலும் காட்டப்படும்.
உங்கள் கணக்கு, சாதனம் அல்லது நெட்வொர்க் நிர்வாகி உங்கள் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை நிர்வகிக்கும்போது நீங்கள் அந்த அமைப்பை மாற்ற முடியாது. உதாரணத்திற்கு:
- பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் கணக்குகளுக்கு, பெற்றோரும் பள்ளிகளும் 'பாதுகாப்பான தேடல்' அம்சத்தை “வடிகட்டு” என அமைத்து லாக் செய்யலாம்.
- விமான நிலையம், நூலகம் போன்ற பொது வைஃபை நெட்வொர்க்குகளும் 'பாதுகாப்பான தேடல்' அம்சத்தின் அமைப்பை “வடிகட்டு” என அமைத்து லாக் செய்யலாம்.
- உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளிலும் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகள், உங்கள் தனிப்பட்ட 'பாதுகாப்பான தேடல்' அமைப்பை மீறிச் செயல்படலாம்.
உங்கள் 'பாதுகாப்பான தேடல்' அமைப்பை யாரெல்லாம் மாற்றலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
- உங்கள் Google கணக்கை நீங்களே நிர்வகிக்கிறீர்கள் எனில் பாதுகாப்பான தேடல் அமைப்பை நீங்கள் நிர்வகிக்கலாம்.
- Family Link ஆப்ஸில் உங்கள் கணக்கை நிர்வகிக்க பெற்றோர் உதவுகிறார் என்றால், உங்களுக்கான ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பை அவரால் நிர்வகிக்க முடியும்.
- Google Workspace for Education கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருப்பதுடன் 18 வயதிற்குட்பட்டவர் அல்லது K-12 கல்வி நிறுவனத்தில் பயில்பவர் என்றால் உங்களுக்கான ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பை உங்கள் நிர்வாகிதான் நிர்வகிக்க முடியும்.
- உங்கள் சாதனம் அல்லது நெட்வொர்க்கின் நிர்வாகிகளால் ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பை "வடிகட்டு" என அமைத்து லாக் செய்ய முடியும்.
‘பாதுகாப்பான தேடல்’ அமைப்புகளைப் பிறருக்காக நிர்வகித்தல்
Family Link ஆப்ஸில் பிள்ளையின் ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பை மாற்றுதல்Family Link மூலம் நிர்வகிக்கப்படும் கணக்கில் உள்நுழையும் 13 வயதிற்குட்பட்ட அல்லது உங்கள் நாட்டில்/பிராந்தியத்தில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு, 'பாதுகாப்பான தேடல்' அமைப்பு இயல்பாகவே "வடிகட்டு" என்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கணக்குகளில், பெற்றோர் மட்டுமே ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்பை மாற்ற முடியும். உங்கள் பிள்ளையின் Google கணக்கில் Search அமைப்புகளை நிர்வகிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
PC, MacBook போன்ற நீங்கள் நிர்வகிக்கும் வேறொரு சாதனத்தில் ‘பாதுகாப்பான தேடல்’ முடிவுகளை உறுதிசெய்ய விரும்பினால் Google டொமைன்களை forcesafesearch.google.com தளத்துடன் மேப் செய்யலாம். நீங்கள் நிர்வகிக்கும் கணக்குகள், சாதனங்கள், நெட்வொர்க்குகள் ஆகியவற்றில் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை லாக் செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்
பாதுகாப்பான தேடல் அம்சம் செயல்படவில்லை என்றால் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
வெளிப்படையான உள்ளடக்கத்தைப் புகாரளித்தல்
‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் இயக்கப்பட்டிருந்தும் வெளிப்படையான உள்ளடக்கம் காட்டப்பட்டால் அது குறித்துப் புகாரளிக்கலாம்.