அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

விழிப்பூட்டலை உருவாக்குதல்

ஒரு தலைப்பு குறித்த புதிய முடிவுகள் Google தேடலில் காட்டப்படும்போது அது குறித்த மின்னஞ்சல்களைப் பெறலாம். உதாரணமாக செய்திகள், தயாரிப்புகள், உங்கள் பெயர் தொடர்பான குறிப்பிடல்கள் ஆகியவை குறித்த தகவலைப் பெறலாம்.

விழிப்பூட்டலை உருவாக்குதல்

  1. Google Alertsஸுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள பெட்டியில் நீங்கள் பின்தொடர விரும்பும் தலைப்பை உள்ளிடவும்.
  3. உங்கள் அமைப்புகளை மாற்ற விருப்பங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். இவற்றை நீங்கள் மாற்றலாம்:
    • எப்போதெல்லாம் அறிவிப்பைப் பெறுவீர்கள்?
    • நீங்கள் பார்க்கக்கூடிய தளங்களின் வகைகள்
    • உங்கள் மொழி
    • உலகின் எந்தப் பகுதியைக் குறித்த தகவலைப் பெற விரும்புகிறீர்கள்?
    • எத்தனை முடிவுகளைப் பார்க்க விரும்புகிறீர்கள்?
    • எந்தக் கணக்குகளெல்லாம் விழிப்பூட்டலைப் பெறும்?
  4. விழிப்பூட்டலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். பொருந்தக்கூடிய தேடல் முடிவுகளை நாங்கள் கண்டறியும் போதெல்லாம் அது குறித்த மின்னஞ்சல்களை நீங்கள் பெறுவீர்கள்.

விழிப்பூட்டலை மாற்றுதல்

  1. Google Alertsஸுக்குச் செல்லவும்.
  2. விழிப்பூட்டலுக்கு அடுத்துள்ள மாற்று திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பங்கள் எதுவும் தெரியவில்லை எனில் விருப்பங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
  5. விழிப்பூட்டலைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விழிப்பூட்டல்களைப் பெறும் விதத்தை மாற்ற அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்குத் தேவையான விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

விழிப்பூட்டலை நீக்குதல்

  1. Google Alertsஸுக்குச் செல்லவும்.
  2. நீங்கள் அகற்ற விரும்பும் விழிப்பூட்டலுக்கு அடுத்துள்ள நீக்கு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்திற்குட்பட்டது: விழிப்பூட்டும் மின்னஞ்சலுக்கு கீழே உள்ள குழுவிலகு என்பதைக் கிளிக் செய்வதன்மூலமும் விழிப்பூட்டலை அகற்றலாம்.

விழிப்பூட்டல்களைப் பெறுவது அல்லது பார்ப்பது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

படி 1: நீங்கள் உள்நுழைந்துள்ள கணக்கு சரியானதுதானா எனப் பார்க்கவும்
  1. Google Alertsஸுக்குச் செல்லவும்.
  2. உங்களின் தற்போதைய கணக்கை அறிய Google Bar பட்டியைப் பார்க்கவும்.
  3. சரியான கணக்கில் நீங்கள் இல்லை எனில் உங்களின் சுயவிவரப் படம் அதன் பிறகு வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சரியான கணக்கில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் விழிப்பூட்டலின் அமைப்புகளைச் சரிபார்க்கவும்
  1. Google Alertsஸுக்குச் செல்லவும்.
  2. உங்கள் விழிப்பூட்டல்கள் முடக்கப்பட்டுள்ளன எனும் மெசேஜைப் பார்த்தல் இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "எனது விழிப்பூட்டல்கள்" பிரிவில் நீங்கள் முடிவுகளைப் பார்க்க விரும்பும் விழிப்பூட்டலைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் அமைப்புகளையும் பார்க்க விருப்பங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் மின்னஞ்சல் அமைப்புகளைச் சரிபார்க்கவும்

மேலுள்ள படிகளைச் செய்தபிறகும் புதிய விழிப்பூட்டல்கள் கிடைக்கவில்லை எனில், உங்கள் மின்னஞ்சல் கணக்கில் இவற்றைச் சரிபார்க்கவும்:

  • உங்கள் இன்பாக்ஸ் நிரம்பவில்லை என்பதை உறுதிசெய்யவும்.
  • Google Alerts மின்னஞ்சல்கள் ஸ்பேம் கோப்புறைக்குச் செல்லவில்லை என்பதை உறுதிசெய்யவும். Gmailளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் தொடர்புகளில் googlealerts-noreply@google.comமைச் சேர்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16471138321624071014
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false