அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google குரல் தேடலைப் பயன்படுத்துதல்

பயனுள்ள தகவல்களைத் தேட உங்கள் குரலை நீங்கள் பயன்படுத்தலாம்.

குரல் தேடலைத் தொடங்குதல்

முக்கியம்: "Ok Google" என்று சொல்வது Google Assistantடை இயக்க மட்டுமே பயன்படும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. மைக்ரோஃபோன் ஐகானை Mic தட்டவும்.
  3. Google Searchசில் Search எதையாவது தேட உங்கள் குரலைப் பயன்படுத்தவும்.

உதவிக்குறிப்பு: Google ஆப்ஸில் ஒரு பாடலைப் பிளே செய்வது, ஹம் செய்வது அல்லது பாடுவதன் மூலம் அந்தப் பாடலை எப்படித் தேடுவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவான குரல் தேடல்கள்

உங்கள் மொழி, நாடு, பிராந்தியம் ஆகியவற்றில் குரல் தேடல் அம்சம் கிடைத்தால் பின்வரும் உதாரணங்களைப் பயன்படுத்தலாம்.

உதவிக்குறிப்பு: இவற்றில் சில உதாரணங்கள் குறிப்பிட்ட மொழிகள், நாடுகள் அல்லது பிராந்தியங்களில் மட்டுமே பயன்படும்.

பொழுதுபோக்கு (இசை, திரைப்படங்கள், டிவி, புத்தகங்கள் மற்றும் படங்கள்)

புதிய இசையைக் கண்டறிதல்: “இளையராஜாவும் அவரோட பையனும் பாடின பாடல்கள் என்னென்ன?” என்று கேட்கவும்

திரைப்படத்தைக் கண்டறிதல் “இன்னைக்கு ராத்திரி என்னென்ன படமெல்லாம் ஓடுது?” அல்லது “பொன்னியின் செல்வன் படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?” என்று கேட்கவும்

படங்களைத் தேடுதல்: “தஞ்சை பெரிய கோவில் படங்களைக் காட்டு” என்று சொல்லவும்.

வழிகள் மற்றும் பயணம்

வழிகளைப் பெறுதல்: "சரவணா ஸ்டோர்ஸுக்கு வழிகாட்டு" அல்லது "விவேக்ஸ், 1299, மேடவாக்கம் மெயின் ரோடுக்கு வழிகாட்டு" என்று கூறவும்.

அருகிலுள்ள இடங்களைக் கண்டறிதல்: "எனக்கு பக்கத்துல இருக்கிற காஃபி ஷாப் எது?" எனக் கேட்கவும்

உங்கள் பயணத்தைத் திட்டமிடல்: "நியூயார்க் சிட்டில பாக்க வேண்டிய இடம் என்னென்ன?" எனக் கேட்கவும்

டேபிளை முன்பதிவு செய்தல்: "Cascalல 2 டேபிள வெள்ளிக்கிழமைக்கு புக் பண்ணு" என்று சொல்லவும்.

உண்மைகளும் விரைவான பதில்களும்

நேரத்தை அறிதல்: "லண்டன்ல இப்ப டைம் என்ன?" எனக் கேட்கவும்

வானிலையைப் பார்த்தல்: "இன்னைக்கு குடை கொண்டு போகனுமா?" அல்லது "நாளைக்கு காலையில வானிலை எப்படி இருக்கும்?" எனக் கேட்கவும்

பொது அறிவு கேள்விகளுக்கு விடை காணுதல்: "ஆல்பர்ட் ஐன்ஸ்டின் எங்கு பிறந்தார்?" அல்லது "பியான்சே வயசு என்ன?" எனக் கேட்கவும்

வார்த்தைகளையோ சொற்றொடர்களையோ மொழிபெயர்த்தல்: "மலையாளத்துல வெள்ளரிக்காயை என்னனு சொல்லுவாங்க?" என்று கேட்கவும்

வார்த்தைக்கான விளக்கத்தை அறிதல்: "Gluttony அப்படினா என்ன அர்த்தம்?" எனக் கேட்கவும்

யூனிட் அளவுகளை மாற்றுதல்: "16 அவுன்ஸ் பவுண்ட்ஸ்ல எவ்ளோ?" எனக் கேட்கவும்

கணக்கிற்கு விடை காணுதல்: "2209ன் வர்க்க மூலம் என்ன?" என்று கேட்கவும்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7690718128235508877
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false