அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

கையெழுத்து அம்சத்தைப் பயன்படுத்தித் தேடுதல்

கீபோர்டில் சொற்களை உள்ளிடுவதற்குப் பதிலாக விரல்களால் தேடல் வார்த்தைகளை எழுதலாம். நீங்கள் எழுதுபவை சொற்களாக மாற்றப்பட்டு தேடல் பெட்டியில் உள்ளிடப்படும். 

இருப்பு

இந்தச் சாதனங்களில் கையெழுத்து அம்சத்தைப் பயன்படுத்தலாம்:

  • Android 2.3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட மொபைல்கள்
  • Android 4.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட டேப்லெட்டுகள்

கையெழுத்து அம்சத்தை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. மொபைல் அல்லது டேப்லெட்டில் Search அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. "கையெழுத்து" பிரிவிற்குச் செல்லவும்.
    • கையெழுத்து அம்சத்தை இயக்க, இயக்கு என்பதைத் தட்டவும்.
    • கையெழுத்து அம்சத்தை முடக்க, முடக்கு என்பதைத் தட்டவும்.
  3. பக்கத்தின் கீழே உள்ள சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் செய்த மாற்றங்களைப் பார்க்க, உலாவியை ரெஃப்ரெஷ் செய்யவும்.

கையெழுத்து அம்சத்தைப் பயன்படுத்தி எப்படித் தேடுவது?

  1. கையெழுத்து அம்சம் இயக்கத்தில் இருக்கும்போது மொபைலில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் உள்ள கையெழுத்து என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் விரலால் திரையில் எங்காவது தேடல் வார்த்தைகளை எழுதவும். 
    • நீங்கள் எழுதுபவை உரையாக மாற்றப்பட்டு தேடல் பெட்டியில் உள்ளிடப்படும்.
  4. தேடு தேடல் என்பதைத் தட்டவும்.
 

உதவிக்குறிப்புகளும் நுட்பங்களும்

  • எழுத்துகளை நீக்குதல்: பக்கத்தின் கீழே, நீக்கு Clear என்பதைத் தட்டவும்.
  • புதிதாக எழுதுதல்: தேடல் பெட்டியில், அழி Clear என்பதைத் தட்டவும்.
  • எழுத்துகளைத் தெளிவுபடுத்துதல்: நீங்கள் எழுதும் எழுத்தின் வடிவம் வேறொரு எழுத்தைப் போன்றும் இருந்தால் (உதாரணமாக, 0 (பூஜ்ஜியம்) என்பது எண் & 'O' என்பது ஆங்கில எழுத்து) திரையின் கீழே விருப்பங்கள் பட்டியல் தோன்றக்கூடும்.
  • பரிந்துரைகளைப் பயன்படுத்துதல்: நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நீங்கள் எழுதும்போதே தேடல் வார்த்தைகளுக்கான பரிந்துரைகள் தேடல் பெட்டியில் தோன்றக்கூடும். அந்தப் பரிந்துரைகளில் நீங்கள் தேட விரும்புவதைத் தட்டவும். தொடர்புடைய தேடலைக் கண்டறிய அம்புக்குறியைத் தட்டவும்.
  • குறியீடுகளைச் சேர்த்தல்: +, @, &, $ போன்ற குறியீடுகளையும் சிறப்பு எழுத்துக்குறிகளையும் எழுதிப்பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11994708511406601863
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false