தேடல் முடிவுகளில் படங்கள் குறித்து மேலும் தகவல் அறிய படம் ஒன்றினைச் சொடுக்கவும் எடுத்துக்காட்டாக, படம் எந்த வகையானத் தளத்திலிருந்துப் பெறப்பட்டது என்பதை நீங்கள் கூறலாம். மேலும், அதனுடன் தொடர்புடைய படங்களையும் கண்டறியலாம்.
- உங்கள் கம்ப்யூட்டரில் images.google.com இணையதளத்திற்குச் செல்லவும்.
- படத்தைத் தேடவும்.
- படத்தைப் பெரிதாகக் காண்பதற்கும் அதன் விவரங்களைக் காண்பதற்கும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உதவிக்குறிப்பு:படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உலாவி நேரடியாக இணையதளத்திற்குச் சென்றால், நீங்கள் பழைய உலாவியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடும். இந்தச் சிக்கலைத் தீர்க்க, உங்கள் உலாவியைப் புதுப்பிக்கவும் அல்லது Google Chromeமில் தேடவும்.
இங்கு பின்வரும் விருப்பங்களை நீங்கள் காணலாம்:
- பக்கத்திற்குச் செல்லுதல்: Google கண்டறிந்த படத்தின் இணையப் பக்கத்திற்குச் செல்ல,
என்ற தலைப்பு கொண்ட இணையப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- கருத்தை அனுப்புதல்: தகாத படம் குறித்து புகாரளிக்க, மேலும்
கருத்தை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- படத்தை மூடுதல்: பட முடிவுகள் பக்கத்திற்குத் திரும்பச் செல்ல, மூடு
என்பதைக் கிளிக் செய்யவும்.
- பரிமாணங்களைப் பார்த்தல்: படத்தின் பரிமாணங்களைப் பார்க்க, அதன் மீது சுட்டியை நகர்த்தவும்.
- சேகரிப்பில் சேர்த்தல்:சேகரிப்புகள் குறித்து மேலும் அறிக.
- படத்தைப் பகிர்தல்: பகிர்
என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: மொபைலிலோ முந்தைய பதிப்புகளைக் கொண்ட கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் உலாவிகளிலோ படத் தேடல் முடிவுகளுக்கான பக்கம் வேறு விதமாகக் காட்டப்படுவது இயல்பானது.