அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google தேடலில் உள்ள அணுகலம்சம்

ஸ்க்ரீன் ரீடர்கள், கீபோர்டுகள் போன்ற உதவிகரமான தொழில்நுட்பத்தின் மூலம் எளிமையாக அணுகும் வகையில் தேடல் முடிவுகள் ஒழுங்கமைப்பட்டுக் காட்டப்படும்.

தேடல் முடிவுகளின் பக்கங்களில் அணுகலம்ச இணைப்புகளைப் பயன்படுத்துதல்

கம்ப்யூட்டரில் தேடல் முடிவுகளின் பக்கத்தின் மேற்புறத்தில் மூன்று அணுகலம்ச இணைப்புகள் இருக்கும்:

  • முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்: பக்கத்தில் முதலில் உள்ள தேடல் முடிவு, விளம்பரம் போன்ற முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லும்.
  • அணுகலம்சம் தொடர்பான உதவி: இந்த உதவிக் கட்டுரையைத் திறக்கும்.
  • அணுகலம்சம் தொடர்பான கருத்து: Google Searchசில் அணுகலம்சம் குறித்த உங்கள் கருத்தை வழங்குவதற்கான படிவத்தைத் திறக்கும். உங்கள் கருத்தை டைப் செய்து அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அணுகலம்சம் தொடர்பான இணைப்பைத் தேர்ந்தெடுக்க:

  • கீபோர்டு மூலம்:
    1. நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் இணைப்பு ஹைலைட் செய்யப்படும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
    2. ஹைலைட் செய்யப்பட்டதும் Enter பட்டனை அழுத்தவும்.
  • ஸ்க்ரீன் ரீடர் மூலம்: விரைவு வழிகாட்டுதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்.

பிரிவுத் தலைப்புகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்திற்குச் செல்லுதல்

ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்த உதவும் வகையில் தேடல் முடிவுகளின் பக்கத்தில் பிரிவுத் தலைப்புகள் படிநிலை வாரியாக இருக்கும்.

கம்ப்யூட்டர்களில்

  • தலைப்பு நிலை 1 (H1 - Heading level 1): தேடல் முடிவுகள், விளம்பரங்கள், பக்கத்தில் எப்படி உலாவுவது போன்ற பக்கத்தின் முக்கியமான பகுதிகளைக் கொண்டிருக்கும்.
  • தலைப்பு நிலை 2 (H2 - Heading level 2): "விளையாட்டு முடிவுகள்", "வீடியோக்கள்" போன்ற குழுவாக்கப்பட்ட முடிவுகளின் பெயர்களைக் கொண்டிருக்கும்.
  • தலைப்பு நிலை 3 (H3 - Heading level 3): தனிப்பட்ட தேடல் முடிவுகளின் தலைப்புகள், விளம்பரத் தலைப்புகள், துல்லியமான குழுவாக்கப்பட்ட முடிவுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

மொபைல்களிலும் டேப்லெட்டுகளிலும்

  • தலைப்பு நிலை 1 (H1 - Heading level 1): Google லோகோவையும் Googleளின் முகப்புப்பக்கத்திற்குச் செல்லும் "Google" எனப் பெயரிடப்பட்ட இணைப்பையும் கொண்டிருக்கும்.
  • தலைப்பு நிலை 2 (H2 - Heading level 2): முதல் H2 தலைப்பு, தேடல் முடிவுகளைக் கொண்டிருக்கும். இரண்டாவது, விளம்பரங்களைக் கொண்டிருக்கும்.
  • தலைப்பு நிலை 3 (H3 - Heading level 3): தனிப்பட்ட தேடல் முடிவின் தலைப்புகளையும் விளம்பரத் தலைப்புகளையும் கொண்டிருக்கும்.

கூடுதல் அணுகலம்ச விருப்பங்களைக் கண்டறிதல்

புதிய தீர்வுகளைக் கண்டறிவதற்கும் Google சேவைகள் குறித்த உதவிக்குறிப்புகளைப் பகிர்வதற்கும் பிற Google பயனர்களுடன் அணுகலம்சச் சிக்கல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் இவற்றைச் செய்யவும்:

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10377396251864712883
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false