அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் உள்ள காட்சித் தேடல் பதிவுகளை நிர்வகித்தல்

நீங்கள் உள்நுழைந்து இருக்கும்போது Google ஆப்ஸில் உள்ள Google Lens போன்ற இணக்கமான Google சேவைகளில் படங்களைத் தேடினால், இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் காட்சித் தேடல் பதிவுகளை Google சேமிக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம். காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பை இயக்கினால் உங்களுடைய முந்தைய காட்சித் தேடல் பதிவுகளை நீங்கள் கண்டறியலாம் நீக்கலாம். உங்கள் படங்கள் எங்கிருந்து சேமிக்கப்படக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Google சேவைகளில் உங்களின் அனுபவத்தை மேம்படுத்த (உதாரணமாக உங்களின் முந்தைய காட்சித் தேடல்களை மீண்டும் பார்ப்பது) உங்களின் காட்சித் தேடல் பதிவுகள் பயன்படுத்தப்படலாம். Googleளின் 'காட்சி முறையில் கண்டறிதல்', தேடல் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் Google சேவைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.

உதவிக்குறிப்பு: காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு இயல்பாக முடக்கப்பட்டிருக்கும்.

காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதைத் தட்டவும்.
  5. "காட்சித் தேடல் பதிவுகளையும் சேர்" என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் தேடுவதற்குப் பயன்படுத்தும் படங்கள் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில்’ சேமிக்கப்படாது. முன்பு இயக்கப்பட்டிருந்த காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பை முடக்கினால், இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டின் பகுதியாகச் சேமிக்கப்பட்ட படங்களை நீங்கள் நீக்காத வரை அவை 'காட்சி முறையில் கண்டறிதல்' தொழில்நுட்பங்களையும் தேடல் தொழில்நுட்பங்களையும் மேம்படுத்தத் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம். எனது Google செயல்பாடுகளில் உங்கள் காட்சித் தேடல் பதிவுகளை நீங்கள் கண்டறியலாம் நீக்கலாம்.

உங்கள் படங்களைக் கண்டறிதல் அல்லது நீக்குதல்

உங்கள் படங்களைக் கண்டறிதல்
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அதன் பிறகு இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அனைத்தையும் நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
    • இந்தப் பக்கத்தில் நீங்கள்:
      • உங்களுடைய முந்தைய செயல்பாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்: உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள படங்கள் காட்டப்படும்.
      • படத்தைப் பதிவிறக்கலாம்: படத்தைப் பதிவிறக்க அதைத் தட்டவும்.

உங்கள் Google கணக்கில் உள்ள சேமிக்கப்பட்ட படங்களை Google Takeout மூலம் பதிவிறக்கலாம். உங்கள் Google தரவைப் பதிவிறக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க, உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்ப்பதற்குக் கூடுதல் சரிபார்ப்புப் படி தேவைப்படுமாறு நீங்கள் அமைக்கலாம்.

உங்கள் செயல்பாடுகளை எப்படி நீக்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

காட்சித் தேடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சேவைகளின் உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் உங்கள் படங்கள் இனி தேவைப்படாது என்ற நிலையில், நீங்கள் தேர்வுசெய்யும் கால வரம்பிற்கு முன்னதாகவே இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் இருந்து படங்களை Google நீக்கக்கூடும். உங்கள் Google கணக்கில் உள்ள சேமிக்கப்பட்ட படங்களை Google Takeout மூலம் பதிவிறக்கலாம். உங்கள் Google தரவைப் பதிவிறக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு குறித்த அறிமுகம்

நீங்கள் படத்தைப் பயன்படுத்தித் தேடும்போது (உதாரணமாக Google Lens மூலம் தேடும்போது) அந்தப் படத்தைச் செயலாக்க, 'காட்சி முறையில் கண்டறிதல்' தொழில்நுட்பங்களை Google பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் Google Lens மூலம் பூவின் படத்தைத் தேடினால் Googleளின் 'காட்சி முறையில் கண்டறிதல்' தொழில்நுட்பங்கள் அந்தப் படத்தைச் செயலாக்கித் தொடர்புடைய முடிவுகளைக் காட்டும்.

Google தளங்கள், ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றில் நீங்கள் செய்பவற்றை இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு உங்கள் Google கணக்கில் சேமிக்கும்.

இந்தக் காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பை (விருப்பத்திற்குரியது) பயன்படுத்துவதன் மூலம் இணக்கமான Google சேவைகளைப் பயன்படுத்தும்போது படங்களை உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் சேமித்தும் கொள்ளலாம். காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு இயல்பாக முடக்கப்பட்டிருக்கும்.

உங்கள் படங்கள் எங்கிருந்து சேமிக்கப்படக்கூடும்

காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்து இருக்கும்போது தேடுவதற்குப் பயன்படுத்தும் படங்கள் பின்வரும் இணக்கமான Google சேவைகளில் இருந்து உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் சேமிக்கப்படக்கூடும்:

  • Android, iPhone, iPad ஆகியவற்றில் Google ஆப்ஸில் உள்ள Google Lens
  • Androidல் உள்ள விரைவுத் தேடல் பெட்டி மற்றும் அனைத்து ஆப்ஸுக்கான டிரே
  • Lens ஆப்ஸ்

சில ஆப்ஸ் மற்றும் சாதனப் பதிப்புகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள Google சேவைகளில் இருந்து தேடுவதற்குப் பயன்படுத்தும் படங்கள் சேமிக்கப்படாமல் போகலாம்.

உதவிக்குறிப்பு: Gemini ஆப்ஸ் செயல்பாடுகள் போன்ற பிற அமைப்புகள் மூலம் சேமிக்கக்கூடிய படங்களைக் காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு பாதிக்காது.

படங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

Google சேவைகளில் உங்களின் அனுபவத்தை மேம்படுத்த (உதாரணமாக உங்களின் முந்தைய காட்சித் தேடல்களை மீண்டும் பார்ப்பது) உங்களின் காட்சித் தேடல் பதிவுகள் பயன்படுத்தப்படலாம். காட்சித் தேடல் மற்றும் கண்டறிதல் தொழில்நுட்பங்களையும் அவற்றைப் பயன்படுத்துகின்ற Google Lens போன்ற Google சேவைகளையும் உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது சேமிக்கப்பட்ட படங்களை Google பயன்படுத்தும்.

காட்சித் தேடல் தொழில்நுட்பங்கள்

Googleளின் சில காட்சித் தேடல் தொழில்நுட்பங்களால் நீங்கள் தேடுவதற்குப் பயன்படுத்தும் படங்களில் உள்ளவற்றை அடையாளம் கண்டு, காட்சி தொடர்பான உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும். உங்கள் காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், இணக்கமான Google சேவைகளில் நீங்கள் தேடுவதற்குப் பயன்படுத்தும் படங்களை Googleளின் காட்சித் தேடல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க Google பயன்படுத்தக்கூடும்.

உதவிக்குறிப்பு: காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு சில மொழிகளில் சில கணக்கு வகைகளுக்குக் கிடைக்காமல் போகக்கூடும்.

காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால்
காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், Google ஆப்ஸில் உள்ள Google Lens, Androidல் உள்ள விரைவுத் தேடல் பெட்டி போன்ற இணக்கமான Google சேவைகள் மூலம் நீங்கள் தேடுகின்ற படங்களை உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் Google சேமிக்கும். உங்கள் படங்கள் எங்கிருந்து சேமிக்கப்படக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இணைய இணைப்பு இல்லாமல் உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தினால் நீங்கள் மீண்டும் ஆன்லைனுக்கு வரும்போது காட்சித் தேடல் பதிவுகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படலாம்

காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பு முடக்கப்பட்டிருந்தால்
காட்சித் தேடல் பதிவுகள் முடக்கப்பட்டிருந்தால், இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, படங்களை Google சேமிக்காது. காட்சித் தேடல் பதிவுகள் முடக்கப்பட்டிருந்தாலும் காட்சித் தேடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் Google Lens போன்ற Google சேவைகள் மூலம் நீங்கள் படங்களைத் தொடர்ந்து தேடலாம். நீங்கள் காட்சித் தேடல் பதிவுகள் அமைப்பை முடக்கினால்:
  • Google Lens பட அமைப்புகளை அது முடக்காது.
  • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை அது முடக்காது என்பதால் Google சேவைகளில் உங்கள் தேடல் செயல்பாடுகளைத் தொடர்ந்து சேமிக்க முடியும்.
  • காட்சித் தேடல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஏற்கெனவே சேமிக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம்.
activity.google.com என்ற தளத்தில் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதற்குச் சென்று ஏற்கெனவே சேமிக்கப்பட்ட படங்களை நீங்கள் நீக்கலாம்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12542733997468641830
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false