அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

வட்டமிட்டுத் தேடல் அம்சம் மூலம் திரையில் இருப்பவற்றைத் தேடுதல்

முக்கியம்: Android மொபைல்களில் உள்ள குறிப்பிட்ட மாடல்களில் இந்த அம்சம் கிடைக்கும்.

நீங்கள் தேட விரும்பும் வார்த்தைகளையோ படங்களையோ தேர்ந்தெடுத்து Googleளில் தேட, திரையில் எங்கு வேண்டுமானாலும் தட்டலாம் வட்டமிடலாம் ஹைலைட் செய்யலாம் வரைந்து தேர்ந்தெடுக்கலாம்.

வட்டமிட்டுத் தேடல் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

திரையில் இருக்கும் வார்த்தைகள், படங்கள் அல்லது வீடியோக்கள் குறித்துத் தேட:

  1. வட்டமிட்டுத் தேடல் அம்சத்தைத் தொடங்கவும்:
    • 3-பட்டன் வழிசெலுத்தல் பயன்முறையில் முகப்பு பட்டனை நீண்ட நேரம் அழுத்தவும்.
    • சைகை வழிசெலுத்தல் பயன்முறையில் வழிசெலுத்தல் ஹேண்டிலை நீண்ட நேரம் அழுத்தவும்.
  2. நீங்கள் தேட விரும்பும் வார்த்தைகள், படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்க திரையில் எங்கு வேண்டுமானாலும் தட்டவும் வட்டமிடவும் அல்லது ஹைலைட் செய்யவும்.
  3. விரும்பினால், தேடல் பட்டியில் வார்த்தைகளைச் சேர்த்து உங்கள் தேடலை இன்னும் துல்லியமாக்கலாம்.
  4. உங்கள் தேடல் முடிவுகள் திரையின் கீழ்ப்பகுதியில் காட்டப்படும்.
    • அதிக முடிவுகளைப் பார்க்க மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதியைச் சரிசெய்ய, அதன் பார்டர்களையோ ஒட்டுமொத்தத் தேர்வுப் பகுதியையோ இழுக்கவும்.
  • தேடல் பட்டி மறைத்துள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க, இரு விரலால் சாளரத்தை நகர்த்தவும் அல்லது தேடல் பட்டியைத் திரையின் மேற்பகுதிக்கோ கீழ்ப்பகுதிக்கோ இழுக்கவும்.

வட்டமிட்டுத் தேடல் அம்சத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட தகவல் சுருக்கத்தைப் பெறுதல்

வார்த்தைகள் குறித்த தேடல் அல்லது பன்முகத் தேடல் வினவல்களுக்கு, வட்டமிட்டுத் தேடல் அம்சத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட தகவல் சுருக்கங்களைப் பெறலாம். பன்முகத் தேடல் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

வட்டமிட்டுத் தேடல் அம்சத்தை முடக்குதல்

3-பட்டன் வழிசெலுத்தல் பயன்முறையில்:

  1. Android மொபைலில், அமைப்புகள் Settings என்பதற்குச் செல்லவும்.
  2. வட்டமிட்டுத் தேடல் அம்சத்தைத் தேடவும்.
  3. வட்டமிட்டுத் தேடல் என்பதைத் தட்டவும்.
  4. வட்டமிட்டுத் தேடல் அம்சத்தை முடக்கவும்.

சைகை வழிசெலுத்தல் பயன்முறையில்:

  1. Android மொபைலில், அமைப்புகள் Settings என்பதற்குச் செல்லவும்.
  2. வட்டமிட்டுத் தேடல் அம்சத்தைத் தேடவும்.
  3. வட்டமிட்டுத் தேடல் என்பதைத் தட்டவும்.
  4. வட்டமிட்டுத் தேடல் அம்சத்தை முடக்கவும்.

"திரைத் தேடல் அம்சம் கிடைக்கவில்லை" தொடர்பான சிக்கலைப் பிழையறிந்து திருத்துதல்

ஆதரிக்கப்படும் Android சாதனத்தில் வட்டமிட்டுத் தேடல் அம்சத்தைப் பயன்படுத்த, உங்களின் அனுமதி அமைப்புகள் சரியாக உள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்:

  1. Android மொபைலில், அமைப்புகள் Settings என்பதற்குச் செல்லவும்.
  2. டிஜிட்டல் அசிஸ்டண்ட் ஆப்ஸ் என்பதைத் தேடவும்.
  3. டிஜிட்டல் அசிஸ்டண்ட் ஆப்ஸ் என்பதைத் தட்டவும்.
  4. இவற்றை உறுதிசெய்துகொள்ளவும்:
    • 'இயல்பு டிஜிட்டல் அசிஸ்டண்ட்டாக' Google அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • “ஸ்கிரீன்ஷாட்டைப் பயன்படுத்து” இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16456959470781696374
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false