அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

வடிப்பான்கள் மூலம் தேடல் முடிவுகளை வடிகட்டுதல்

நீங்கள் விரும்புவதைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் தேடல் முடிவுகளை வடிகட்டலாம் பிரத்தியேகமாக்கலாம். உதாரணமாக, கடந்த 24 மணிநேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்ட தளங்களையோ உரிமம் தொடர்பான தகவல்கள் அடங்கிய படங்களையோ கண்டறியலாம்.

உதவிக்குறிப்பு: வடிப்பான்களைப் பயன்படுத்தும்போது தேடல் அமைப்புகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. முந்தைய தேடல்களை நீக்கவோ பாதுகாப்பான தேடல், ஒரு பக்கத்திற்கான முடிவுகள், மொழிகள் போன்ற அமைப்புகளை மாற்றவோ தேடல் அமைப்புகளுக்குச் செல்லவும்.

வடிப்பான்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

உதவிக்குறிப்பு: உங்கள் தேடல், முடிவுகளின் வகை, உலாவி ஆகியவற்றின் அடிப்படையில் தேடல் கருவிகள் உங்களுக்குக் காட்டப்படும். எப்போதும் அனைத்து விருப்பங்களும் காட்டப்படாது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Chrome Chrome போன்ற உலாவியையோ Google ஆப்ஸையோ திறக்கவும்.
  2. google.com தளத்தில் எதையேனும் தேடவும்.
  3. தேடல் பெட்டிக்குக் கீழே உள்ள அனைத்தும், படங்கள், செய்திகள் போன்ற நீங்கள் பெற விரும்பும் முடிவுகளின் வகையைத் தேர்வுசெய்யவும்.
  4. உங்கள் உலாவியைப் பொறுத்து இந்த வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றவும்:
Chrome ஆப்ஸ்

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள முடிவுகளின் வகையைப் பொறுத்து பின்வரும் வடிப்பான்களைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்:

  •  அனைத்தும், வீடியோக்கள், செய்திகள் அல்லது புத்தகங்கள்:
    • சேர்த்தல்: தேடல் பெட்டிக்குக் கீழே உள்ள தேடல் கருவிகள் என்பதைத் தட்டி அதன் பிறகு தேவையான வடிப்பானைத் தட்டவும்.
      • “தேடல் கருவிகளைக்” கண்டறிய வலதுபுறம் நகர்த்த வேண்டியிருக்கலாம்.
    • அகற்றுதல்: தேடல் கருவிகள் பட்டியில் வலதுபுறம் நகர்த்தி அழி என்பதைத் தட்டவும்.
  • படங்கள்
    • சேர்த்தல்: வடிப்பான் Filter என்பதைத் தட்டி அதன் பிறகு தேவையான வடிப்பானைத் தட்டவும்.
    • அகற்றுதல்: வடிப்பான் Filter அதன் பிறகு அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
  • ஷாப்பிங்
    • சேர்த்தல்: வடிப்பான் என்பதையோ மேலும் வடிப்பான்கள் என்பதையோ தட்டி அதன் பிறகு தேவையான வடிப்பானைத் தட்டவும்.
    • அகற்றுதல்:
      • வடிப்பானை மீண்டும் தட்டவும்.
      • அல்லது மேலும் வடிப்பான்கள் அதன் பிறகு அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: ஒரே தட்டலில் வடிப்பான்களைச் சேர்க்கலாம். அகற்றுவதற்கு அவற்றை மீண்டும் தட்டினால் போதும்.
Google ஆப்ஸ்

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள முடிவுகளின் வகையைப் பொறுத்து வடிப்பான்களைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்:

  • படங்கள்
    • சேர்த்தல்: வடிப்பான் Filter ஐகானைத் தட்டி அதன் பிறகு தேவையான வடிப்பானைத் தட்டவும்.
    • அகற்றுதல்: வடிப்பான் Filter ஐகானைத் தட்டி அதன் பிறகு அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
  • வீடியோக்கள்
    • சேர்த்தல்: வடிப்பானைத் தட்டவும்.
    • அகற்றுதல்: வடிப்பானை மீண்டும் தட்டவும்.
  • ஷாப்பிங்
    • சேர்த்தல்: வடிப்பான் என்பதையோ மேலும் வடிப்பான்கள் என்பதையோ தட்டி அதன் பிறகு தேவையான வடிப்பானைத் தட்டவும்.
    • அகற்றுதல்: வடிப்பானை மீண்டும் தட்டவும் அல்லது மேலும் வடிப்பான்கள் அதன் பிறகு அனைத்தையும் அழி என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: ஒரே தட்டலில் வடிப்பான்களைச் சேர்க்கலாம். அகற்றுவதற்கு அவற்றை மீண்டும் தட்டினால் போதும்.

உங்கள் தேடல் முடிவுகளை வடிகட்டுவதற்கான வழிகள்

முடிவின் வகை

படங்கள், வீடியோக்கள், செய்திகள் போன்று ஓர் உள்ளடக்கத்தைப் பெறும் வகையில் முடிவுகளை வடிகட்டலாம். தேடல் பெட்டிக்கு அடுத்துள்ள முடிவுகளின் வகையைத் தேர்வுசெய்யுங்கள்.

உதாரணமாக:

  • படங்களைப் பெற: படங்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  • பர்ச்சேஸ் செய்ய உதவும் தேடல் முடிவுகளைப் பெற: ஷாப்பிங் என்பதைத் தேர்வுசெய்யவும்.

தேடல் கருவிகள்

நீங்கள் பெற விரும்பும் முடிவுகளின் வகையைத் தேர்வுசெய்த பிறகு, தேடல் கருவிகளைப் பயன்படுத்தி முடிவுகளை மேலும் வடிகட்டலாம். இடம், வண்ணம், அளவு, பக்கம் வெளியிடப்பட்ட தேதி போன்றவை இந்தக் கருவிகளில் இருக்கலாம்.

தேடல் ஆப்பரேட்டர்கள்

தேடும் ஆப்பரேட்டர்களான சொற்களையோ சின்னங்களையோ உங்கள் வினவலில் சேர்ப்பதன் மூலமும் தேடலை வடிகட்டலாம். இணையத் தேடல்களை வடிகட்டுவது எப்படி என அறிக.

தேடல் கருவிகளின் வகைகள்

முக்கியம்: சில தேடல் கருவிகள் சில மொழிகளில் அல்லது Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது மட்டுமே கிடைக்கும்.

இணைய முடிவுகள்
உதவிக்குறிப்பு: உங்கள் தேடல், முடிவுகளின் வகை, உலாவி ஆகியவற்றின் அடிப்படையில் தேடல் கருவிகள் உங்களுக்குக் காட்டப்படும். எப்போதும் அனைத்து விருப்பங்களும் காட்டப்படாது.

சில கருவிகளில் இவற்றைப் பார்க்கலாம்:

  • வெளியீட்டுத் தேதி: வெளியிடப்பட்ட தேதியின் அடிப்படையில் முடிவுகளைக் கண்டறியலாம்.
  • வார்த்தைக்கு வார்த்தை: சரியாக அதே சொற்கள் அல்லது சொற்றொடர்களைத் தேடலாம்.
  • அகராதி: வரையறைகள், இணைச்சொற்கள், படங்கள் போன்றவற்றைக் கண்டறியலாம்.
  • தனிப்பட்டது: Gmail போன்ற Google தயாரிப்புகளில் உங்களுடன் பகிரப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறியலாம்.
    • தனிப்பட்ட முடிவுகளைப் பெற, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  • அருகிலுள்ளவை: உங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவற்றை மட்டும் முடிவுகளில் பெறலாம்.
  • ரெசிபிகள்: தேவையான பொருட்கள், சமைப்பதற்கான நேரம், கலோரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டலாம்.
  • ஆப்ஸ்: ஓர் ஆப்ஸை அதன் விலை, ஆப்ரேட்டிங் சிஸ்டம் (OS) போன்றவற்றின் அடிப்படையில் கண்டறியலாம்.
  • காப்புரிமைகள்: நிலை, வகை, காப்புரிமை அலுவலகம், பதிவுத் தேதி, வெளியீட்டுத் தேதி ஆகியவற்றின் அடிப்படையில் காப்புரிமையைக் கண்டறியலாம்.
பட முடிவுகள்
  • அளவு: பெரியது, நடுத்தரமானது, ஐகான் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • வண்ணம்: குறிப்பிட்ட வண்ணம், கருப்பு வெள்ளை அல்லது தெளிவுத்திறனின்படி படங்களைக் கண்டறியலாம்.
  • வகை: கிளிப் ஆர்ட், கோட்டோவியங்கள், அனிமேஷன் GIFகள் போன்றவைகளாக முடிவுகளை வடிகட்டலாம்.
  • நேரம்: சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்லது குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட்ட படத்தைக் கண்டறியலாம்.
  • பயன்பாட்டிற்கான உரிமை: உரிமம் தொடர்பான தகவலைக் கொண்ட படங்களைக் கண்டறியலாம்.
வீடியோ முடிவுகள்
  • கால அளவு: வீடியோவின் நீளத்தின்படி முடிவுகளை வடிகட்டலாம்.
  • நேரம்: சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்லது குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட்ட வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • தரம்: உயர்தர வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • வசனங்கள்: வசனங்கள் உள்ள வீடியோக்களை மட்டும் முடிவுகளில் பெறலாம்.
  • மூலம்: YouTube போன்ற குறிப்பிட்ட மூலத்தில் உள்ள வீடியோக்களை மட்டும் முடிவுகளில் பெறலாம்.
இட முடிவுகள்

சில இடங்களைத் தேடும்போது பின்வருபவை போன்ற வடிப்பான்கள் காட்டப்படக்கூடும்:

  • நீங்கள் சென்றுவந்தது தொடர்பான பதிவுகள்: நீங்கள் சென்ற அல்லது சென்றிராத இடங்களை மட்டும் முடிவுகளில் பெறலாம்.
  • ரேட்டிங்: குறிப்பட்ட ரேட்டிங் அல்லது அதிகமான ரேட்டிங் பெற்ற இடங்களை மட்டும் முடிவுகளில் பெறலாம்.
    • இந்த இடங்களுக்கு மக்கள் Googleளில் ரேட்டிங் வழங்குகின்றனர்.
  • உணவு: குறிப்பிட்ட உணவு வகை கிடைக்கும் இடங்களை மட்டும் முடிவுகளில் பெறலாம்.
  • கட்டணம்: கட்டணத்தின் அடிப்படையில் இடங்களைக் கண்டறியலாம்.
  • இயங்கும் நேரம்: இயங்கும் நேரத்தின் அடிப்படையில் இடங்களைக் கண்டறியலாம்.

நீங்கள் சென்ற இடங்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

இன்னும் சிறப்பான தேடல் முடிவுகளைப் பெற, ஓர் இடத்திற்குச் சென்றுள்ளீர்களா இல்லையா என்பதை Googleளுக்குத் தெரிவிக்கலாம்:

  • மொபைலில்: "அறிமுகம்" என்பதற்குக் கீழுள்ள நீங்கள் இங்கே சென்றது __ நாட்கள்/வாரங்கள்/ஆண்டுகளுக்கு முன்பு என்பதைத் தட்டவும்.
  • கம்ப்யூட்டரில்: "நீங்கள் சென்றுவந்தது தொடர்பான பதிவுகள்" என்பதற்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு ஆம் அல்லது இல்லை என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் சென்ற இடங்களின் அடிப்படையில் வடிகட்டுவதற்கான வழிமுறைகள்:

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6543777584927726161
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false