அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

படத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுதல்

இணையத்தில் நீங்கள் பார்க்கும் படம் குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறியலாம்.

முக்கியம்: இந்த அம்சம் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

படம் குறித்த தகவலைக் கண்டறிதல்

  • Google Searchசில் ஒரு படம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள:
    1. Google ஆப்ஸ் அல்லது இணையதளத்தில் ஒரு படத்தைத் தேடவும்.
    2. “இமேஜ் வியூவரை” திறக்கவும்.
    3. அதன் பிறகு இந்தப் படம் பற்றி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இந்தப் பக்கம் பற்றி என்ற பிரிவின் மூலம் பக்கத்தில் உள்ள படம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள:
    • கிடைக்கும்பட்சத்தில், “இந்தப் படம் பற்றி” என்ற பிரிவைப் பயன்படுத்தி ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கக்கூடிய தகவல்களில் இவற்றை நீங்கள் கண்டறியலாம்:

  • அந்தப் படத்தைப் போல இருக்கும் படத்தை Google முதன்முதலில் எப்போது கண்டறிந்திருக்கலாம் என்ற தகவல்.
  • அந்தப் படத்தைப் போல இருக்கும் படங்களைப் பயன்படுத்தும் பிற பக்கங்கள்.
  • ‘இந்தப் படம் பற்றி’ பிரிவில் படம் காட்டப்படுவதற்கு அதிக நாட்களுக்கு முன்னதாகக் காட்டப்பட்டிருக்கக்கூடிய பக்கங்கள்.

Google முதன்முதலில் எப்போது இந்தப் படத்தைக் கண்டறிந்தது?

இந்தப் படத்தையோ இதைப் போல இருக்கும் படங்களையோ Google எப்போது முதன்முதலில் கண்டறிந்தது என்ற தகவல் ‘இந்தப் படம் பற்றி’ பிரிவு வழங்குகிறது. இந்தப் படம் தோராயமாக எப்போது பதிவேற்றப்பட்டது என்று இந்தத் தகவல் மூலம் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

உதவிக்குறிப்பு: இணையத்தில் படங்களை மதிப்பிடும்போது அந்தப் படம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட பழையதா புதியதா என்பதை சரிபார்க்கும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு படம் எப்போது முதன்முதலில் கண்டறியப்பட்டது என்ற தகவல் நீங்கள் தேடும் நோக்கத்திற்கு அந்தப் படம் ஏற்றதா என்பதை மதிப்பிட உதவும்.

இந்தப் படத்தை மற்ற தளங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன?

இந்தப் படத்தைப் பிற தளங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் விதமாக, பொது இணையத்தில் இந்தப் படம் அல்லது இதைப் போல இருக்கும் படங்கள் பற்றிய தேடல் முடிவுகளை ‘இந்தப் படம் பற்றி’ பிரிவு வழங்குகிறது.

படம் குறித்த சூழலை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க, காட்சி ரீதியாக ஒத்திருப்பது மற்றும் பக்கம் உதவிகரமானதாக இருப்பது உட்பட, பல காரணிகளை இந்தப் பிரிவு பயன்படுத்தும்.

உதவிக்குறிப்பு: இணையத்தில் படங்களை மதிப்பிடும்போது முக்கியமான கூற்றுகளுக்கான ஆதாரங்களை நீங்கள் தேட வேண்டும், அத்துடன் இதே படத்தைப் பயன்படுத்தும் மற்றவர்களின் கண்ணோட்டங்களையும் கண்டறிய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

படத்தின் தொடக்கநிலை முடிவுகள்

கிடைக்கும்போது, Google இந்தப் படங்கள் அல்லது இதைப் போல இருக்கும் படங்கள் உள்ள பக்கங்களையும் பிற முடிவுகள் காட்டப்படுவதற்கு மிகவும் தொடக்கத்தில் தோன்றிய பக்கங்களையும் "தொடக்கநிலை முடிவுகள்" பிரிவு ஹைலைட் செய்யும். ஒரு படம் ஆரம்பக்காலத்தில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

உதவிக்குறிப்பு: இணையத்தில் படங்களை நீங்கள் மதிப்பிடும்போது, அந்தப் படத்தின் அசல் சூழலைத் தெரிந்துகொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, அந்தப் படத்தை உருவாக்கியது அல்லது பதிவேற்றியது யார் என்பதையும் அவர்களின் பின்புலம் அல்லது கண்ணோட்டத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

படத்தின் தரவுத்தகவல்

படத்துடன் தொடர்புடைய விவரங்களை அதிலேயே பார்க்க முடியும். படத்தை நீங்கள் பார்த்த தளம் பற்றிய குறிப்பிட்ட விவரங்களைப் “படத்தின் தரவுத்தகவல்” பிரிவில் பார்க்க முடியும். கிடைக்கும்பட்சத்தில், படத்தின் உருவாக்கம் மற்றும் பங்களித்தவர்களைப் பற்றி இந்த விவரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும், இந்தப் பிரிவில் உள்ள தகவல்களை Google சரிபார்ப்பதில்லை. பட விவரங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: தரவுத்தகவலைச் சரிபார்க்க உதவக்கூடிய பிற ஆதாரங்களைத் தேடவும். முக்கியம்: இந்தப் பிரிவில் உள்ள தகவல்களைப் பட உருவாக்கம் மற்றும் எடிட்டிங் கருவிகள் மூலம் திருத்த முடியும் என்பதால் இவை துல்லியமற்றதாக இருக்கக்கூடும்.

“இந்தப் படம் பற்றி” பிரிவு குறித்து கருத்து வழங்குதல்

அனைவரும் பயனடையும் வகையில் இந்த அம்சத்தை நாங்கள் மேம்படுத்த உங்கள் கருத்து உதவும்.

  1. பக்கத்தின் கீழ்ப்புறத்தில் கருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் கருத்தை டைப் செய்யவும்.
  3. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
386688982473266419
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false