அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

ஜெனரேட்டிவ் AI குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) என்பது நீங்கள் உள்ளடக்கத்தை உருவாக்க உதவும் ஒரு வகை AI. நீங்கள் மேலும் ஆக்கப்பூர்வமாகவும் பணிச் செயல்திறனுடனும் விஷயங்கள் தெரிந்தவராகவும் இருக்க இது உங்களுக்கு உதவலாம்.

இந்தக் கட்டுரையில் ஜெனரேட்டிவ் AI குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இதில் இவையும் அடங்கும்:

  • ஜெனரேட்டிவ் AI என்றால் என்ன? இது எப்படிச் செயல்படுகிறது?
  • ஜெனரேட்டிவ் AIயை எப்படிப் பயன்படுத்துவது? அதன் பதில்களின் துல்லியத்தன்மையை எப்படி மதிப்பிடுவது?
  • AIயை Google எப்படி மேம்படுத்துகிறது?

ஜெனரேட்டிவ் AI என்றால் என்ன?

ஜெனரேட்டிவ் AI என்பது ஒருவகை மெஷின் லேர்னிங் மாடல். ஜெனரேட்டிவ் AI ஒரு மனிதப் பிறவி கிடையாது. இதற்குச் சுயசிந்தனையோ உணர்ச்சிகளோ கிடையாது. இது பேட்டர்ன்களைத் திறமையாகக் கண்டறியும்.

முன்பு தகவல்களைப் புரிந்துகொள்ளவும் பரிந்துரைக்கவும் AI பயன்படுத்தப்பட்டது. இப்போது படங்கள், இசை, குறியீடு போன்ற புதிய உள்ளடக்கத்தை உருவாக்கவும் AIயால் உதவ முடியும்.

மெஷின் லேர்னிங் மாடல்களுக்கு எப்படிப் பயிற்சி அளிக்கப்படுகிறது?

பயிற்சி என்று அறியப்படும் பேட்டர்ன் பொருத்தம் மற்றும் கவனித்தல் செயலாக்கத்தின் மூலம் ஜெனரேட்டிவ் AI போன்ற மெஷின் லேர்னிங் மாடல்கள் கற்றுக்கொள்கின்றன. ஸ்னீக்கர் என்றால் என்னவென்று ஒரு மாடல் புரிந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான ஸ்னீக்கர்களின் படங்களைக்கொண்டு அதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலப்போக்கில், ஸ்னீக்கர்கள் என்றால் மனிதர்கள் கால்களில் அணிவது, அதில் லேஸ்கள், சோல்கள், லோகோ ஆகியவை இருக்கும் என்று அது அடையாளங்காணும்.

பயிற்சியை இந்தக் காரணங்களுக்காக மாடல் பயன்படுத்தலாம்:

  1. “சேவல் சின்னத்துடன் கூடிய ஸ்னீக்கர்களின் படத்தை உருவாக்கு” போன்ற உள்ளீட்டைப் பெறுவதற்கு. 
  2. ஸ்னீக்கர்கள், சேவல்கள், சின்னங்கள் ஆகியவை குறித்து அது கற்றுக்கொண்டதை ஒருங்கிணைப்பதற்கு.
  3. ஒரு படத்தை உருவாக்குவதற்கு (அதுபோல ஒரு படத்தை முன்பு அது பார்த்திருக்கவில்லை என்றாலும்கூட).
விரிவான மொழித்திறன் மாடல்கள் எப்படி ஜெனரேட்டிவ் AIயை மேம்படுத்துகின்றன?

ஜெனரேட்டிவ் AIயும் விரிவான மொழித்திறன் மாடல்களும் (LLMs - Large Language Models) ஒரே தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவை. எந்த வகை தரவைக் கொண்டும் ஜெனரேட்டிவ் AIக்குப் பயிற்சி அளிக்கலாம், ஆனால் LLMகள் தங்களது பயிற்சித் தரவின் முக்கிய ஆதாரமாக வார்த்தைகளைப் பயன்படுத்தும்.

Gemini, Search ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் போன்று LLMகள் மூலம் இயங்கும் எக்ஸ்பீரியன்ஸ்களால் உங்கள் ப்ராம்ப்ட் மற்றும் அவை இதுவரை உருவாக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் அடுத்து வரக்கூடிய வார்த்தைகளைக் கணிக்க முடியும். பயிற்சியின்போது அவற்றுக்கு வழங்கப்படும் பேட்டர்ன்களுடன் பொருந்தக்கூடிய அடுத்த வார்த்தைகளைத் தேர்வுசெய்யும் சுதந்திரம் அவற்றுக்கு உண்டு. ஆக்கப்பூர்வமான பதில்களை உருவாக்க இந்தச் சுதந்திரம் அவற்றுக்கு உதவுகிறது.

“ரவி [வெற்றிடம்]” என்ற வாக்கியத்தை நிரப்பும்படி நீங்கள் அவற்றைக் கேட்டால், அடுத்த வார்த்தையாக “சாஸ்திரி” அல்லது “வர்மா” என்பதை அவை கணிக்கக்கூடும்.

 

ஜெனரேட்டிவ் AIயை எப்படிப் பயன்படுத்துவது?

முக்கியம்: ஜெனரேட்டிவ் AI மூலம் இயங்கும் Googleளின் எக்ஸ்பீரியன்ஸ்கள், நீங்கள் ஆக்கப்பூர்வச் செயல்முறையைத் தொடங்க உங்களுக்கு உதவலாம். உங்களுக்காக அனைத்தையும் செய்யவோ கிரியேட்டராக இருக்கவோ அவற்றால் முடியாது.

3 விதங்களில் ஜெனரேட்டிவ் AIயை நீங்கள் பயன்படுத்தலாம்:

  • உங்கள் ஆக்கப்பூர்வ ஐடியாக்களுக்கு ஆலோசனை பெறுதல். உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த ஒரு திரைப்படத்தின் முந்தைய பாகத்திற்கான கதையை எழுத உதவிபெறலாம்.
  • பதிலளிக்க முடியாது என்று நீங்கள் நினைக்கும் கேள்விகளைக் கேட்டல். எ.கா. “முதலில் வந்தது எது? முட்டையா? கோழியா?”
  • கூடுதல் உதவி பெறுதல். நீங்கள் எழுதிய கதைக்குத் தலைப்பைப் பரிந்துரைக்கும்படி கேட்கலாம் அல்லது ஒரு படத்தில் உள்ள விலங்கு அல்லது பூச்சியின் இனத்தை அடையாளங்காண உதவி பெறலாம்.

புதிய விஷயங்களைக் கண்டறிவது, உருவாக்குவது, கற்றுக்கொள்வது போன்றவற்றைச் செய்வதற்கு ஜெனரேட்டிவ் AIயைப் பயன்படுத்தும்போது அதைப் பொறுப்புடன் கையாளுவது முக்கியம். தகவல்களுக்கு, எங்கள் ஜெனரேட்டிவ் AIக்கான தடைசெய்யப்பட்ட பயன்பாடு தொடர்பான கொள்கையைப் பாருங்கள்.

AI தவறுகள் செய்யலாம் & செய்யும்

ஜெனரேட்டிவ் AI பரிசோதனைக் கட்டத்தில் இருப்பதாலும் இன்னும் வளர்ந்து வருவதாலும் இது தவறுகள் செய்யலாம், செய்யும்:

  • இல்லாத விஷயங்களை இது சொல்லலாம். ஜெனரேட்டிவ் AI ஒரு பதிலை உருவாக்குவது ஹலூசினேஷன் எனப்படுகிறது. இணையத்தில் இருந்து Google Search தகவல்களைப் பெறுவது போல LLMகள் தகவல்களைச் சேகரிக்கவே சேகரிக்காது என்பதால் ஹலூசினேஷன்கள் ஏற்படுகின்றன. அடுத்து வரும் வார்த்தைகள் என்னென்ன என்பதைப் பயனரின் உள்ளீட்டின் அடிப்படையில் LLMகள் கணிக்கின்றன. 
    • உதாரணமாக, “2032 பிரிஸ்பேன் கோடைகால ஒலிம்பிக்ஸின் பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸில் வெல்லப்போவது யார்?" என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அந்த நிகழ்வு இன்னும் நடக்காமல் இருந்தாலும்கூட உங்களுக்குப் பதில் கிடைக்கக்கூடும்.
  • விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். சிலநேரங்களில் ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகள், மொழியைத் தவறாகப் புரிந்துகொள்ளும். இது அர்த்தத்தை மாற்றிவிடும்.
    • உதாரணமாக, ஆறு என்ற எண்ணைக் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பலாம். அதைப் பற்றிக் கேட்கும்போது, ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகள் உங்களுக்கு கங்கை, யமுனை போன்ற ஆறுகள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடும்.
பதில்களை எப்போதும் மதிப்பிடுங்கள்

ஜெனரேட்டிவ் AI கருவிகள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள் குறித்துத் தீவிரமாக ஆராயுங்கள். உண்மை போன்று உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க Google மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள்.

தவறாக எதையேனும் கண்டறிந்தால் அது குறித்துப் புகாரளியுங்கள். எங்கள் ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகள் பலவற்றில் புகார்க் கருவிகள் உள்ளன. அனைவருக்கும் ஜெனரேட்டிவ் AI எக்ஸ்பீரியன்ஸ்களை மேம்படுத்துவதற்காக மாடல்களை இன்னும் சிறப்பாக்க உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவுகின்றன.

குறியீட்டைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை

எங்களுடைய ஜெனரேட்டிவ் கோடிங் அம்சங்கள் தற்போது பரிசோதனை நிலையில் உள்ளன. பரிந்துரைக்கப்படும் கோடிங் அல்லது கோடிங் விளக்கங்களைப் பயன்படுத்துவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். உங்கள் விருப்புரிமையின்படியே அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் கோடிங்கை நம்பி பயன்படுத்துவதற்கு முன் அனைத்து கோடிங்குகளையும் கவனமாகப் பரிசோதித்து பிழைகள், ஆபத்துகள் ஆகியவை உள்ளனவா எனப் பார்த்துகொள்ள வேண்டும். ஓப்பன் சோர்ஸ் குறியீடு சேமிப்பகங்களுக்கான மேற்கோள்களை நாங்கள் வழங்கும் இடங்களில் உரிமம் சார்ந்த தேவைகளுக்கு இணங்குவது உங்கள் பொறுப்பாகும். மேலும் அறிக.

AIயை Google எப்படி மேம்படுத்துகிறது?

உலகை அனைவருக்கும் ஏற்றதாக மாற்ற உதவும் கருவிகளை உருவாக்குவதை உறுதிசெய்வதற்காக, 2018ல் நாங்கள் AI கொள்கைகள் தொகுப்பை உருவாக்கினோம். சமூகத்தின் மிகப் பெரிய சவால்களில் சிலவற்றைப் பொறுப்பான முறையில் சமாளிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான எங்கள் இலக்குகளை இந்தக் கொள்கைகள் விளக்குகின்றன.

உதாரணமாக, AIயை இவற்றுக்காகப் பயன்படுத்துகிறோம்:

  • வாகன உமிழ்வுகளைக் குறைப்பதற்காக மெதுவாக நகரும் வாகன நெரிசலைக் குறைப்பது போன்ற, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்
  • 20க்கும் மேற்பட்ட நாடுகளில் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் காட்டுத்தீ பரவும் இடங்களை நிகழ்நேரத்தில் கண்காணிப்பது போன்ற, இயற்கைப் பேரழிவுகளைக் கணித்தல் மற்றும் கண்காணித்தல்
  • காசநோய்ப் பரிசோதனையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவது மற்றும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவுவது போன்ற, மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளித்தல்

AIயைப் பயன்படுத்தி நாங்கள் எவற்றையெல்லாம் செய்யமாட்டோம் என்பதையும் எங்கள் கொள்கை பட்டியலிடுகிறது (எ.கா. சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு மொத்தமாகத் தீங்கிழைக்கும் அல்லது அவற்றை மீறும் தொழில்நுட்பங்கள்).

எங்கள் AI கொள்கைகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

Searchசில் ஜெனரேட்டிவ் AIயை மேம்படுத்த Googleளுக்குத் தரவு எப்படி உதவுகிறது?

Searchசில் ஜெனரேட்டிவ் AI பயன்பாடுகள், அதற்கு உதவும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உருவாக்கவும் மேம்படுத்தவும், பயனர்கள் Searchசைப் பயன்படுத்தும்போது மேற்கொள்ளும் செயல்பாடுகளையும் அந்தப் பயன்பாடுகளையும் Google பயன்படுத்தும். பயனர்களின் தேடல்கள், அவர்கள் வழங்கும் கருத்துகள் (தம்ஸ்-அப் அல்லது தம்ஸ் டவுன்) போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கலாம். எங்கள் முடிவுகள் மற்றும் தயாரிப்புகளின் தரத்தைப் பொறுப்புடன் மதிப்பிடவும் மேம்படுத்தவும் நாங்கள் பயன்படுத்தும் பல வழிகளில் நிபுணர் மதிப்பாய்வும் ஒன்று.

Searchசின் மெஷின் லேர்னிங் மாடல்களின் தரத்தை மேம்படுத்த மதிப்பாய்வாளர்கள் பணியாற்றும்போது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம்:

  • மதிப்பாய்வாளர்கள் பார்க்கும் மற்றும் சிறு குறிப்புகளை எழுதும் தரவு பயனர்களின் கணக்குகளுக்குத் தொடர்பற்றதாக மாற்றப்படும்.
  • தானியங்குக் கருவிகள் பல்வேறு வகையான அடையாளம் காட்டும் தகவல்களையும், முக்கியமான தனிப்பட்ட தகவல்களையும் அடையாளம் கண்டு அகற்றுகின்றன.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
Enroll in Google AI Essentials

Looking to get hands-on experience with generative AI tools like Gemini? Learn from experts at Google and get essential AI skills to boost your productivity with Google AI Essentials, zero experience required.

Get started

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4613028906939488314
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false