அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

வெளிப்படையான அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட படங்களை அகற்றுவதற்கான உதவித் தகவல்கள்

வெளிப்படையான அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட படங்கள் உங்கள் அனுமதியின்றிப் பகிரப்பட்டு ஆன்லைனில் காட்டப்படுவது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இந்த வகையான உள்ளடக்கத்தைக் கையாளும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்களையும் கூடுதல் உதவிக்கான தகவல்களையும் இந்தப் பக்கம் வழங்குகிறது.

உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுதல்

உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் இருந்தால் உரிய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும். அவசர காலத்தில், உங்கள் பகுதியின் அவசரகால ஃபோன் எண்ணை அழைக்கவும். (எ.கா. அமெரிக்காவில் 911).

உள்ளடக்கம் கண்டறியப்பட்ட தளத்தைப் பதிவுசெய்தல்

புகாருக்குரிய உள்ளடக்கம் ஆன்லைனில் எந்தத் தளத்தில் உள்ளது என்று தொடர்ந்து கண்காணிப்பது இணையதளங்கள் மற்றும் தேடல் முடிவுகளில் இருந்து அதை அகற்றுவதற்குக் கோரும்போது உதவியாக இருக்கும்.

Google Searchசில் உள்ளடக்கத்தை அகற்றுமாறு கோருதல்

Google Searchசில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கையை நீங்களோ நீங்கள் அங்கீகரித்த பிரதிநிதியோ சமர்ப்பிக்கலாம்.

உள்ளடக்கத்தை Google அகற்ற வேண்டும் என்றால் அது பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்திசெய்திருக்க வேண்டும்:

  • அந்தப் படம் நீங்கள் (அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்) நிர்வாணமாக இருப்பதையோ பாலியல் ரீதியான செயலில் ஈடுபடுவதையோ அந்தரங்கமாக இருப்பதையோ காட்டுவது.
  • நீங்கள் (அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்) படத்திற்கோ செயலுக்கோ ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும் அது பொதுவில் பகிரப்பட்டிருப்பது அல்லது உங்கள் ஒப்புதல் இல்லாமல் ஆன்லைனில் பகிரப்பட்டிருப்பது.
  • இந்த உள்ளடக்கத்தை ஆன்லைனிலோ வேறு எந்த வழியிலோ வணிகமாக்க உங்களுக்குத் தற்போது பணம் வழங்கப்படாமல் இருப்பது.

பிற தளங்களில் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து அகற்றுமாறு கோருதல்

உள்ளடக்கம் எங்கே காட்டப்படலாம் என்பதைக் கண்டறிய Googleளில் உங்கள் பெயரையோ நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் நபரின் பெயரையோ தேடலாம். தேடல் முடிவுகளில் உங்களின் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான படங்கள் காட்டப்பட்டால் அந்த இணையதளத்தின் உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு முயலவும். இல்லையென்றால் அகற்றுமாறு கோருவதற்கு அந்தச் சேவையில் உள்ளடக்கத்தைப் புகாரளிப்பதற்கான அம்சங்கள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தவும். சமூக வலைதளங்கள் உட்பட பெரும்பாலான சேவைகள் அவற்றுக்கென புகாரளிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளன. அத்தகைய அம்சங்களைப் பயன்படுத்தி நீங்கள் அகற்றுவதற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, அடுத்த பிரிவில் உள்ள “இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்பதைப் பார்க்கவும்.

வேறு தளங்கள் உங்கள் உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்கின்றனவா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் புகாருக்குரிய உள்ளடக்கத்திற்கான அணுகல் உங்களுக்கு உள்ளது என்றால் Googleளில் படத்தின் மூலம் தேடலாம்.

கூடுதல் தகவல்களுக்கு, “Google Searchசிற்கு வெளியே கிடைக்கும் உள்ளடக்க அகற்றுதல் விருப்பங்கள்” என்பதைப் பார்க்கவும்.

இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்ளுதல்

தேடல் முடிவுகளில் இருந்து உள்ளடக்கத்தை Google அகற்றினாலும் அந்த உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்யும் அசல் தளத்தில் அது தொடர்ந்து காட்டப்படும். அதாவது அந்தத் தளத்தின் URL, சமூக வலைதளப் பகிர்வு அல்லது பிற தேடல் இன்ஜின்கள் மூலம் அதைக் கண்டறியலாம்.

உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்வதுதான் உங்களுக்கான சிறந்த வழியாகும். ஏனெனில் உள்ளடக்கத்தை அவர் முழுமையாக அகற்றக்கூடும்.

இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் மாநிலத்திலோ பிராந்தியத்திலோ ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்படும் பாலியல் ரீதியான உள்ளடக்கத்திற்கு எதிரான சட்டங்கள் இருக்கலாம். நீங்கள் Google போன்ற தேடல் இன்ஜின்களைப் பயன்படுத்தி உள்ளூர் சட்டங்களைத் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும் உங்களுக்கான உரிமைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வழக்கறிஞர் அல்லது பிற நிபுணரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

நீங்கள் உள்ளடக்கத்தை அகற்றுவதற்குக் கோர விரும்புகிறீர்கள், ஆனால் அது மேலே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றால், DMCA (பதிப்புரிமை அகற்றுதல்கள்) என்பதன் கீழ் உங்களுக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடும். DMCAவின் கீழ் அகற்றுவதற்குக் கோர இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.

உதவி பெறுதல்

Google தேடல் முடிவுகளில் இருந்து வெளிப்படையான அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றக் கோருவதுடன் வேறு வகையான உதவிகளை நீங்கள் பெற விரும்பக்கூடும். உள்ளடக்கத்தை அகற்ற உதவவும் ஆலோசனை வழங்குதல், பாதுகாப்பு, சிறந்த ஆன்லைன் அனுபவம் ஆகியவற்றுக்கு உதவுபவர்களுடன் இணைக்கவும் உலகளவில் பல நிறுவனங்கள் உள்ளன.

உங்கள் அனுமதியில்லாமல் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட படங்கள் பகிரப்பட்டால் எங்கு உதவி பெற வேண்டும்?

கீழே பட்டியலிடப்பட்டுள்ள நாடு சார்ந்த அமைப்புகளுடன் சேர்த்து, StopNCII.org என்ற உலகளாவிய அமைப்பும் உதவக்கூடும். இது ஒப்புதல் இல்லாமல் பரப்பப்படும் வெளிப்படையான உள்ளடக்கத்தைத் தடுக்க உதவும் ஒரு அமைப்பு.

வட அமெரிக்கா

அமெரிக்கா

தொடர்புகொள்ள வேண்டிய அமைப்பு: சைபர் சிவில் ரைட்ஸ் இனிஷியேட்டிவ்

இணையதளம்: https://cybercivilrights.org/ccri-safety-center

ஆசியா

பாகிஸ்தான்

தொடர்புகொள்ள வேண்டிய அமைப்பு: டிஜிட்டல் ரைட்ஸ் பவுண்டேஷன்

இணையதளம்: https://digitalrightsfoundation.pk/cyber-harassment-helpline/

ஃபோன் எண்: 0800-39393

செயல்படும் நேரம்: திங்கள் – ஞாயிறு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து)

சிங்கப்பூர்

தொடர்புகொள்ள வேண்டிய அமைப்பு: SG ஹெர் எம்பவர்மெண்ட் (SHE)

இணையதளம்: she.org.sg

ஃபோன் எண்: 8001-01-4616

செயல்படும் நேரம்: திங்கள் – வெள்ளி, காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை SGT, (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து)

தென் கொரியா

தொடர்புகொள்ள வேண்டிய அமைப்பு: கொரியாவின் பெண்கள் மனித உரிமைகள் நிறுவனம்

இணையதளம்: https://d4u.stop.or.kr/

ஃபோன் எண்: 02-735-8994

செயல்படும் நேரம்: 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம்

மின்னஞ்சல் முகவரி: helpdesk@digitalrightsfoundation.pk

ஐரோப்பா

யுனைடெட் கிங்டம்

தொடர்புகொள்ள வேண்டிய அமைப்பு: ரிவென்ஜ் பார்ன் ஹெல்ப்லைன்

இணையதளம்: https://revengepornhelpline.org.uk/

மின்னஞ்சல் முகவரி: help@revengepornhelpline.org.uk

செயல்படும் நேரம்: திங்கள் – வெள்ளி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை (வங்கி விடுமுறை நாட்கள் தவிர்த்து)

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5741277526283053784
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false