அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

தேடல் முடிவுகளை எந்த மொழியில் காட்ட வேண்டும் என்பதை Google எப்படித் தீர்மானிக்கிறது?

Googleளில் தேடும்போது, நீங்கள் தேடும் மொழியோடு பிற மொழிகளிலும் முடிவுகள் காட்டப்படலாம். பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் உள்ள இடங்களில் இப்படிக் காட்டப்படலாம். முடிவுகளுக்கான மொழி எப்படித் தானாகத் தீர்மானிக்கப்படுகிறது என்பதும், குறிப்பிட்ட மொழியில் மட்டும் முடிவுகள் காட்டப்படும்படி நாமாகவே எப்படி வடிகட்டலாம் என்பதும் இந்தப் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.

முடிவுகளுக்கான மொழியை நாங்கள் தீர்மானிக்கும் விதம்

பல நாடுகளிலும் பிராந்தியங்களிலும், Googleளில் தேட மக்கள் பல மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். பல மொழிகளைப் பேசும் மக்களுக்குச் சிறப்பாக உதவ, எந்த மொழி அல்லது மொழிகளில் முடிவுகள் காட்டப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும் என்பதைத் தானாகத் தீர்மானிக்க Google பல காரணிகளைப் பயன்படுத்துகிறது:

தேடுவதற்குப் பயனர் பயன்படுத்திய மொழி

முடிவுகளைத் தேட ஒருவர் பயன்படுத்தும் மொழி மிகவும் முக்கியக் காரணியாகும். இது ஒருவர் தனது மொழி அமைப்புகளில் இருந்து வேறுபட்ட மொழியில் முடிவுகள் காட்டப்பட வேண்டும் என விரும்புவதை எங்கள் சிஸ்டங்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. உதாரணமாக, ஃபிரான்ஸைச் சேர்ந்த ஃபிரெஞ்சு மொழி அமைப்புகளை வைத்திருக்கும் ஒருவர் ஆங்கிலம், அரபி போன்ற பிற மொழிகளில் உள்ளடக்கத்தைத் தேடி அந்தந்த மொழிகளில் முடிவுகளைப் பெறலாம்.

உள்ளடக்கம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது

பல மொழிகளில் தேடும் பயனர்களுக்குக் குறிப்பிட்ட மொழியில் காட்டப்படும் உள்ளடக்கம் உதவிகரமாக இருக்குமா என்பதை எங்கள் சிஸ்டங்கள் புரிந்துகொள்ளும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் புரிந்துகொள்ளும் மக்கள் உள்ள இடங்களில் இது மிகவும் பொதுவானது. குறிப்பாக, தேடப்பட்ட மொழியில் போதுமான தகவல்கள் இல்லாதபோது.

காட்சி மொழி அமைப்பு

காட்சி மொழி அமைப்பின் மூலம் Google Searchசில் பட்டன்களும் பிற வார்த்தைகளும் எந்த மொழியில் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். மேலும், தேடல் முடிவுகள் எந்த மொழியில் காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் Googleளுக்கு இந்த அமைப்பு உதவும். ஆனால் காட்டப்படும் அனைத்து முடிவுகளையும் அந்த மொழியில் வடிகட்டாது.

உலாவி மற்றும் சாதன அமைப்புகள்

சில உலாவிகளிலும் சாதனங்களிலும் நீங்கள் விரும்பும் மொழிகளை அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கும். இந்த விருப்பத்தேர்வுகளை அத்தகைய உலாவிகளாலோ சாதனங்களாலோ Googleளுக்குத் தெரிவிக்க முடிந்தால், அவை தேடல் முடிவுகள் காட்டப்பட வேண்டிய மொழியைத் தீர்மானிக்க உதவலாம். ஆனால், அவை அனைத்து முடிவுகளையும் அந்த மொழியில் வடிகட்டாது.  

இருப்பிடம் மற்றும் பிராந்திய அமைப்புகள்

முடிவுகளுக்கான மொழியைத் தீர்மானிக்க, பயனர் எந்த இடத்திலிருந்து தேடுகிறார் என்ற விவரங்களையும் Google பயன்படுத்துகிறது. ஒரு வார்த்தை வெவ்வேறு மொழிகளில் ஒரே எழுத்துவரிசையைக் கொண்டிருக்கும் போது (எ.கா. “taxi”) பயனரின் இருப்பிடம் உதவியாக இருக்கும். Google தானாக உங்கள் இருப்பிடத்தைத் தீர்மானிக்கும், இருப்பினும் உங்கள் பிராந்திய அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்

உள்ளடக்க உருவாக்குநர்களால் வழங்கப்படும் தகவல்

நீங்கள் பல மொழி உள்ளடக்கத்தை உருவாக்கும்போது, குறிப்பிட்ட மொழிகளில் எந்தப் பதிப்பு காட்டப்பட வேண்டுமென்பதை Googleளுக்குத் தெரிவிக்கலாம். 

குறிப்பிட்ட மொழியில் முடிவுகளை வடிகட்டுவது எப்படி?

தேடல் முடிவுகளைக் குறிப்பிட்ட மொழியில் நாமாகவே வடிகட்ட இரண்டு வழிகள் உள்ளன, அவை:

  • முடிவுகளுக்கான மொழி வடிப்பான்: தேடல் முடிவுகளுக்கு மேலே காட்டப்படும் இந்த வடிப்பான் நீங்கள் விரும்பும் மொழி அல்லது மொழிகளில் மட்டும் முடிவுகளைப் பார்க்க உதவும். மேலும் அறிக.
  • மேம்பட்ட தேடல் மொழி வடிப்பான்: மேம்பட்ட தேடல் பக்கத்தில் முடிவுகளை வடிகட்டலாம்.

மொழி வடிப்பான்கள் முதன்மையாக இணையத்தில் காட்டப்படும் முடிவுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்பதை நினைவில்கொள்ளவும். அவற்றைப் பயன்படுத்தும்போது அதிவிவர கிராஃப் காட்சிகள் மற்றும் முக்கியச் செய்திகள் போன்ற சில தேடல் அம்சங்களின் மொழி மாறாமல் இருக்கக்கூடும். பக்கத்தின் மொழியை Googleளால் கண்டறிய முடியவில்லை எனில், மொழி வடிப்பான்களால் இணைய முடிவுகளைக் காட்ட முடியாமல் போகக்கூடும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ஒரு பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருப்பது அல்லது பல மொழித் தளங்களைப் புரிந்துகொள்ள Googleளுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த எங்கள் வழிகாட்டுதலை உள்ளடக்கம் பின்பற்றாமல் இருப்பது ஆகியவையும் அடங்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14000571783802574907
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false