அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Searchசில் இலக்கணச் சரிபார்ப்பு குறித்து அறிதல்

முக்கியமானது: இலக்கணச் சரிபார்ப்பானது மொழியைப் பகுப்பாய்வு செய்ய AI சிஸ்டங்களைப் பயன்படுத்துகிறது. இது 100% துல்லியமாக இல்லாமல் போகலாம் (குறிப்பாக பகுதியளவு வாக்கியங்களில்).

சொற்றொடரோ வாக்கியமோ இலக்கணரீதியாகச் சரியாக உள்ளதா என்பதையும் சரியாக இல்லாவிட்டால் எப்படி அதைச் சரிசெய்வது என்பதையும் Googleளின் இலக்கணச் சரிபார்ப்பு அம்சத்தைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.

Searchசில் இலக்கணச் சரிபார்ப்பை எப்படிப் பயன்படுத்துவது?

"இலக்கணச் சரிபார்ப்பு" என்பதை உங்கள் தேடலில் சேர்க்கும்போதோ இலக்கணத்தைச் சரிபார்க்க விரும்புகிறீர்கள் என்பதை Search புரிந்துகொள்ளும்போதோ இலக்கணச் சரிபார்ப்பு முடிவு காட்டப்படலாம்.

உதவிக்குறிப்பு: இந்த அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இலக்கணச் சரிபார்ப்பு வழங்கும் முடிவானது இலக்கணம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இல்லை எனில் சொற்றொடர் அல்லது வாக்கியத்தை எப்படிச் சரிசெய்வது என்பதைக் குறிக்கும். எழுத்துப் பிழைகளையும் இது சரிசெய்யும்.

Searchசில் இலக்கணச் சரிபார்ப்புக்கான கொள்கைகள்

இவை அனைவருக்கும் உதவிகரமாக உள்ள இலக்கணச் சரிபார்ப்புகள் என்பதை உறுதிப்படுத்த, Google Searchசின் ஒட்டுமொத்தக் கொள்கைகள் அல்லது Search அம்சங்களுக்கான இந்தக் கொள்கைகளை மீறக்கூடிய உள்ளடக்கத்திற்கு இலக்கணச் சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் இருக்க சிஸ்டங்கள் உள்ளன:

  • ஆபத்தான உள்ளடக்கம்
  • உபத்திரவம் அளிக்கக்கூடிய உள்ளடக்கம்
  • வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கம்
  • மருத்துவ உள்ளடக்கம்
  • வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்
  • பயங்கரவாத உள்ளடக்கம்
  • வன்முறை & கொடூரமான உள்ளடக்கம்
  • கொச்சையான மற்றும் தகாத சொற்களைக் கொண்ட உள்ளடக்கம்

Google Searchசின் ஒட்டுமொத்த உள்ளடக்கக் கொள்கைகள் பற்றி மேலும் அறிக.

இலக்கணச் சரிபார்ப்பு தொடர்பாக உங்கள் கருத்தைப் பகிர்தல்

இலக்கணச் சரிபார்ப்பு முடிவு பற்றிய கருத்தைச் சமர்ப்பிக்க:

  1. இலக்கணச் சரிபார்ப்பு முடிவுகள் பெட்டிக்குக் கீழ் வலதுபுறத்திலுள்ள கருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பின்வருபவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • உதவியாக இருந்தது.
    • இது தொடர்புடையதாக இல்லை.
    • தவறான பரிந்துரை.
    • மனதைப் புண்படுத்தும் பரிந்துரை.
  3. வாக்கியப் பெட்டியில் உங்கள் கருத்துகள் அல்லது பரிந்துரைகளை வழங்கலாம்.
  4. கீழ் வலதுபுறத்தில் உள்ள அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11236681207212864989
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false