அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

பக்க புள்ளிவிவரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

நீங்கள் பார்க்கும் இணையப் பக்கம் அல்லது ஆராய்ச்சி செய்யும் தயாரிப்பு குறித்த பயனுள்ள தகவல்களைப் பக்க புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியலாம்.

உதவிக்குறிப்பு: சில அம்சங்கள் சில மொழிகளில் கிடைக்காமல் இருக்கக்கூடும்.

முக்கியம்: பக்கப் புள்ளிவிவரங்கள் ஐகான் காட்டப்படவில்லை என்றால் இவற்றைச் சரிபார்க்கவும்:

  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்.
  • உங்கள் உலாவி மறைநிலைப் பயன்முறையில் இல்லை.
  • Searchக்கான இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அம்சம் இயக்கப்பட்டுள்ளது.
    • “Chrome செயல்பாடுகளையும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும் சேர்” என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
  • உங்கள் கணக்கிற்கான Chrome ஒத்திசைவு அம்சம் இயக்கப்பட்டுள்ளது.
    1. Chrome ஆப்ஸைத் திறக்கவும்.
    2. மேல் வலதுபுறத்தில் உள்ள, செயல் மெனு More menu optionsஅதன் பிறகு அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
    3. ஒத்திசை என்பதைத் தட்டி, "பதிவு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.

பக்கப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துதல்

  1. Search அல்லது Discoverரில் இணையப் பக்கத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, செயல் மெனு ஐகானை More menu options தட்டவும்.
  3. பக்க புள்ளிவிவரங்களைக் காட்டு என்பதைத் தட்டவும்.

வசதியாகப் பயன்படுத்துவதற்கான கருவிகள்

டிரேயில் உள்ள உள்ளடக்கம் பற்றிய குறிப்பிட்ட தகவலைப் பார்க்கலாம்.

  • தொடர்புடைய புள்ளிவிவரங்கள்: இந்தப் பக்கத்தைப் படித்தபிறகு பயனர்கள் பார்க்க விரும்பும் தொடர்புடைய உள்ளடக்கம் இதில் அடங்கும். இதில் இவையும் அடங்கலாம்:
    • தொடர்புடைய கேள்விகள்: நீங்கள் பார்க்கும் உள்ளடக்கம் தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு பார்க்கலாம்.
    • வீடியோக்கள்: பயனர் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்துடன் தொடர்புடைய வீடியோக்களின் தொகுப்பு.
    • ஆவணங்கள்: நீங்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் தற்போதைய பக்கத்துடன் தொடர்புடைய ஆவணங்களுக்கான பரிந்துரைகள்.
    • தொடர்புடைய வினவல்கள்: நீங்கள் ஆராய்ச்சியைத் தொடர உதவும் தொடர்புடையத் தேடல்களை இங்கு பார்க்கலாம்.
    • குறிப்பிடப்பட்ட நிறுவனம்: இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் குறித்த உள்ளூர் முடிவுகள் இங்கு பட்டியலிடப்படும். அந்த நிறுவனம் தொடர்பான Google தேடல்களுக்கான இணைப்புகளும் இதில் அடங்கும்.
  • இந்தப் பக்கத்திலுள்ள இடங்கள்: நகர்த்தக்கூடிய படங்களின் தொகுப்பு, கருத்து மதிப்பீடு, மதிப்பீட்டின் சுருக்கமான கண்ணோட்டம், முகவரி குறித்த தகவல்கள், முக்கியச் செயல்கள் ஆகியவற்றை ஒவ்வொரு இடத்துக்கும் இது காட்டும்.
  • இந்தப் பக்கம் பற்றி: பக்கத்தின் ஆதாரம் குறித்த உட்புற மற்றும் வெளிப்புறத் தகவல்களின் பட்டியல்கள் இதில் அடங்கும். எ.கா. பக்கத்தின் ஆதாரம் தொடர்பான இணைய முடிவுகள், இந்தத் தளம் Googleளால் எப்போது முதலில் அட்டவணைப்படுத்தப்பட்டது போன்ற விவரங்கள். இணையப் பக்கம் குறித்து மேலும் அறிக.

உதவிக்குறிப்பு: சில பக்கங்கள் "இந்தப் பக்கம் பற்றி" என்பதை மட்டுமே காட்டும். "இந்தப் பக்கத்திலுள்ள இடங்கள்", "தொடர்புடைய புள்ளிவிவரங்கள்" போன்ற பிற பிரிவுகள் இவற்றில் கிடைக்காமல் போகலாம்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3417882803726747075
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false