அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

சேகரிப்புகளையும் சேமித்தவற்றையும் நிர்வகித்தல்

நீங்கள் சேமித்த இணைப்புகள், படங்கள், இடங்கள் ஆகியவற்றைச் ஆர்வங்கள் பக்கத்தில் நிர்வகிக்கலாம்.

முக்கியம்: இந்த அம்சம் சில நாடுகள் அல்லது பிராந்தியங்களிலும் சில மொழிகளிலும் கிடைக்காமல் இருக்கக்கூடும். உங்கள் சேகரிப்புகளைப் பார்க்க Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்.

சேமித்தவற்றை நிர்வகித்தல்

நீங்கள் சேமித்தவை (சேகரிப்பில் இல்லை என்றாலும் கூட) அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டறியலாம் நிர்வகிக்கலாம்.

சேமித்தவை அனைத்தையும் கண்டறிதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேமித்தவை எல்லாம் என்பதைக் கிளிக் செய்யவும்.

சேமித்ததைச் சேகரிப்பிற்கு நகர்த்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேமித்தவை எல்லாம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சேகரிப்பிற்கு நீங்கள் நகர்த்த விரும்புபவற்றைத் தேர்வுசெய்யவும்.
  4. நகலெடு Copy icon என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பட்டியலில் உள்ள ஒரு தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிதாக ஒன்றைச் சேர்க்கவும்.

சேமித்ததைத் திருத்துதல்

முக்கியம்: சேமித்தவற்றைத் திருத்த அவை ஒரு சேகரிப்பில் இருக்க வேண்டும்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. நீங்கள் திருத்த விரும்புவது இருக்கும் சேகரிப்பைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் திருத்தம் செய்ய விரும்புவதில் உள்ள மூன்று புள்ளி மெனுவை More கிளிக் செய்யவும்.
  4. திருத்து Edit என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தலைப்பை மாற்ற: “தலைப்பு” என்ற புலத்தில் உள்ளதை மாற்றவும்.
    • விளக்கத்தைச் சேர்க்க: “குறிப்பைச் சேர்” என்ற புலத்தில் டைப் செய்யவும்.
    • சிறுபடத்தை மாற்ற: சிறுபடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
      • வேறொரு சிறுபடத்தை (இருந்தால்) தேர்வுசெய்யவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

சேமித்தவற்றை அகற்றுதல்

முக்கியம்: இதைச் செய்தால் அனைத்து சேகரிப்புகளில் இருந்தும் உங்கள் கணக்கில் இருந்தும் 'சேமித்தவை 'முழுமையாக நீக்கப்படும்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேமித்தவை எல்லாம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அகற்ற விரும்புபவற்றைத் தேர்வுசெய்யவும்.
  5. அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

சேமித்தவற்றைச் சேகரிப்பில் இருந்து அகற்றுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேகரிப்பைக் கிளிக் செய்யவும்.
  3. அகற்ற தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அகற்ற விரும்புபவற்றைத் தேர்வுசெய்யவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒட்டுமொத்தச் சேகரிப்பையும் அகற்றுதல்

முக்கியம்: நீங்கள் உருவாக்கிய சேகரிப்புகளையும் உங்களுடன் பகிர்ந்த சேகரிப்புகளையும் நீங்கள் நீக்க முடியும். சமையல் குறிப்புகள், கண்காணிப்பவை போன்ற நாங்கள் உருவாக்கிய சேகரிப்புகளை நீங்கள் நீக்க முடியாது.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேகரிப்பைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு நீக்கு Delete என்பதைக் கிளிக் செய்யவும்.

சேகரிப்பில் உள்ளவற்றை நகர்த்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேகரிப்பைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    • சேகரிப்பிற்கு நகர்த்த:
      1. சேகரிப்பிற்கு நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. ஏற்கெனவே இருக்கும் சேகரிப்பையோ புதிய சேகரிப்பையோ தேர்ந்தெடுக்கவும்.
        • நீங்கள் சேமித்தவை அங்கு நகர்த்தப்படும், இப்போது உள்ள சேகரிப்பில் இருந்து அவை அகற்றப்படும்.
    • சேகரிப்பில் சேர்க்க:
      1. சேகரிப்பில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. ஏற்கெனவே இருக்கும் சேகரிப்பையோ புதிய சேகரிப்பையோ தேர்ந்தெடுக்கவும்.
        • நீங்கள் சேமித்தவை அந்தச் சேகரிப்பில் சேர்க்கப்படுவதுடன் தற்போதைய சேகரிப்பிலும் இருக்கும்.

சேகரிப்பின் பெயரை மாற்றுதல்

முக்கியம்: சமையல் குறிப்புகள், கண்காணிப்புப் பட்டியல் போன்ற நாங்கள் உருவாக்கிய சேகரிப்பின் பெயரை மாற்ற முடியாது.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. சேகரிப்பைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள, மூன்று புள்ளி மெனுவை More கிளிக் செய்துஅதன் பிறகு மாற்று Edit என்பதைக் கிளிக் செய்யவும்.
    • புதிய தலைப்பை டைப் செய்யவும்.
  4. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: தலைப்பை மாற்ற, மேலே உள்ள சேகரிப்பின் தலைப்பையும் கிளிக் செய்யலாம்.

சேகரிப்பைப் பகிர்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் விருப்பங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. நீங்கள் பகிர விரும்பும் சேகரிப்பைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, ‘பகிர்’ பகிர்வதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பகிர்தல் என்பதை இயக்கவும்.
  5. நீங்கள் பகிர விரும்பும் இணைப்பைத் தேர்வுசெய்யவும்.
    • உங்கள் சேகரிப்பில் மாற்றம் செய்வதற்குப் பிறரை அனுமதிக்க: பங்களிப்பாளருக்கான இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் சேகரிப்பைப் பார்ப்பதற்கு மட்டும் பிறரை அனுமதிக்க: பார்க்க மட்டுமேயான இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களின் பெயர்களையோ மின்னஞ்சல் முகவரிகளையோ சேர்க்கவும்.
    • மேலும், வேறு இடங்களில் இணைப்பைப் பகிர அதை நகலெடுக்கலாம்.
  7. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9465317975131398226
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false