அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

சேகரிப்புகளையும் சேமித்தவற்றையும் நிர்வகித்தல்

நீங்கள் சேமித்த இணைப்புகள், படங்கள், இடங்கள் ஆகியவற்றைச் ஆர்வங்கள் பக்கத்தில் நிர்வகிக்கலாம்.

முக்கியம்: இந்த அம்சம் சில நாடுகள் அல்லது பிராந்தியங்களிலும் சில மொழிகளிலும் கிடைக்காமல் இருக்கக்கூடும். உங்கள் சேகரிப்புகளைப் பார்க்க Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்.

சேமித்தவற்றை நிர்வகித்தல்

நீங்கள் சேமித்தவை (சேகரிப்பில் இல்லை என்றாலும் கூட) அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டறியலாம் நிர்வகிக்கலாம்.

சேமித்தவை அனைத்தையும் கண்டறிதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை  என்பதைத் தட்டவும்.
  3. தொகுப்பின் இறுதிவரை ஸ்க்ரோல் செய்யவும். 
  4. சேமித்த அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.

சேமித்ததைச் சேகரிப்பிற்கு நகர்த்துதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை  அதன் பிறகு சேமித்த அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
    • சேகரிப்பிற்கு நீங்கள் நகர்த்த விரும்புபவற்றைத் தேர்வுசெய்யவும்.
  4. நகலெடு Copy icon என்பதைத் தட்டவும்.
  5. பட்டியலில் உள்ள ஒரு தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிதாக ஒன்றைச் சேர்க்கவும்.

சேமித்ததைத் திருத்துதல்

முக்கியம்: சேமித்தவற்றைத் திருத்த அவை ஒரு சேகரிப்பில் இருக்க வேண்டும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை என்பதைத் தட்டவும். 
  3. நீங்கள் திருத்த விரும்புவது இருக்கும் சேகரிப்பைத் தட்டவும். 
  4. திருத்த வேண்டியதில், மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு திருத்து Edit என்பதைத் தட்டவும்.
    • தலைப்பை மாற்ற: “தலைப்பு” என்ற புலத்தில் உள்ளதை மாற்றவும்.
    • விளக்கத்தைச் சேர்க்க: “குறிப்பைச் சேர்” என்ற புலத்தில் டைப் செய்யவும்.
    • சிறுபடத்தை மாற்ற: சிறுபடத்தை மாற்று என்பதைத் தட்டவும்.
      • வேறொரு சிறுபடத்தை (இருந்தால்) தேர்வுசெய்யவும்.
  5. முடிந்தது என்பதைத் தட்டவும்.

சேமித்தவற்றை அகற்றுதல்

முக்கியம்: சேமித்தவற்றை அகற்றினால் அவை அனைத்து சேகரிப்புகளில் இருந்தும் உங்கள் கணக்கில் இருந்தும் முழுமையாக நீக்கப்படும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை அதன் பிறகு சேமித்த அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
  3. அகற்ற விரும்புவதில், மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு அகற்று என்பதைத் தட்டவும்.

சேகரிப்பில் உள்ளவற்றை அகற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை என்பதைத் தட்டவும்.
  3. ஒரு சேகரிப்பைத் தட்டவும்.
  4. சேமித்தவற்றை அகற்ற தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
    • அகற்ற விரும்புபவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேல் வலதுபுறத்தில் உள்ள நீக்கு என்பதைத் தட்டவும்.

ஒட்டுமொத்தச் சேகரிப்பையும் அகற்றுதல்

முக்கியம்: நீங்கள் உருவாக்கிய மற்றும் உங்களுடன் பகிரப்பட்ட சேகரிப்புகளை மட்டுமே உங்களால் நீக்க முடியும். சமையல் குறிப்புகள், கண்காணிப்பவை போன்ற நாங்கள் உருவாக்கிய சேகரிப்புகளை நீங்கள் நீக்க முடியாது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை  என்பதைத் தட்டவும்.
  3. ஒரு சேகரிப்பைத் தட்டவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள, மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு நீக்கு Delete என்பதைத் தட்டவும்.

சேகரிப்பில் உள்ளவற்றை நகர்த்துதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை என்பதைத் தட்டவும்.
  3. ஒரு சேகரிப்பைத் தட்டவும்.
  4. மேலே உள்ள தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
  5. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    • சேகரிப்பிற்கு நகர்த்த:
      • சேகரிப்பிற்கு நகர்த்து என்பதைத் தட்டவும்.
      • ஏற்கெனவே இருக்கும் சேகரிப்பையோ புதிய சேகரிப்பையோ தேர்ந்தெடுக்கவும்.
        • நீங்கள் சேமித்தவை அங்கு நகர்த்தப்படும், இப்போது உள்ள சேகரிப்பில் இருந்து அவை அகற்றப்படும்.
    • சேகரிப்பில் சேர்க்க:
      • சேகரிப்பில் சேர் என்பதைத் தட்டவும்.
      • ஏற்கெனவே இருக்கும் சேகரிப்பையோ புதிய சேகரிப்பையோ தேர்ந்தெடுக்கவும்.
        • நீங்கள் சேமித்தவை அந்தச் சேகரிப்பில் சேர்க்கப்படுவதுடன் தற்போதைய சேகரிப்பிலும் இருக்கும்.

சேகரிப்பின் பெயரை மாற்றுதல்

முக்கியம்: சமையல் குறிப்புகள், கண்காணிப்புப் பட்டியல் போன்ற நாங்கள் உருவாக்கிய சேகரிப்பின் பெயரை நீங்கள் மாற்ற முடியாது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை என்பதைத் தட்டவும்.
  3. பெயரை மாற்ற விரும்பும் சேகரிப்பைத் தட்டவும்.
  4. தலைப்பைத் திருத்த, மேலே உள்ள மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு திருத்து Edit என்பதைத் தட்டவும்.
  5. முடிந்தது என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: தலைப்பை மாற்ற, மேலே உள்ள சேகரிப்பின் தலைப்பையும் தட்டலாம்.

சேகரிப்பைப் பகிர்தல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழே உள்ள, சேமித்தவை என்பதைத் தட்டவும்.
  3. சேகரிப்பைத் தட்டி அதன் பிறகு பகிர் பகிர்வதற்கான ஐகான் என்பதைத் தட்டவும்.
  4. பகிர்தல் என்பதை இயக்கவும்.
  5. நீங்கள் பகிர விரும்பும் இணைப்பைத் தேர்வுசெய்யவும்.
    • உங்கள் சேகரிப்பில் மாற்றம் செய்வதற்குப் பிறரை அனுமதிக்க: பங்களிப்பாளருக்கான இணைப்பு என்பதைத் தட்டவும்.
    • உங்கள் சேகரிப்பைப் பார்ப்பதற்கு மட்டும் பிறரை அனுமதிக்க: பார்க்க மட்டுமேயான இணைப்பு என்பதைத் தட்டவும்.
  6. நீங்கள் சேகரிப்பைப் பகிர விரும்பும் தொடர்பையோ ஆப்ஸையோ தட்டவும்.
    • மேலும், வேறு இடங்களில் இணைப்பைப் பகிர அதை நகலெடுக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5288145117450403736
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false