அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Searchசில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்டப்படும் முடிவுகள் ஏன் வேறுபடுகின்றன?

Google Searchசில் தேடும்போது வேறொருவருக்குக் காட்டப்படும் அதே முடிவுகளோ அதேபோன்ற முடிவுகளோ உங்களுக்கும் காட்டப்படலாம். சில நேரங்களில் நேரம், சூழல் அல்லது பிரத்தியேக முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு வேறு முடிவுகளை Google காட்டக்கூடும்.

தேடும் நேரத்தின் அடிப்படையில் முடிவுகள் வேறுபடுதல்

வெவ்வேறு தேடல் முடிவுகள் காட்டப்படுவதற்கான காரணங்களில் நேரம் முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடும். உதாரணமாக, இணையத்தில் புதிய உள்ளடக்கம் வெளியிடப்பட்டதும் விரைவில் அதைச் சேர்க்கிறோம். உள்ளடக்கம் புதிதாகச் சேர்க்கப்படுவதால் சில மணிநேரம் அல்லது சில நிமிட இடைவெளியில் தேடுபவர்களுக்கு வெவ்வேறு முடிவுகள் காட்டப்படலாம்.

Search பயன்படுத்தும் தரவு மையங்கள் உலகம் முழுவதும் உள்ளன. எங்களின் தரவரிசை சிஸ்டங்களில் மேம்படுத்தல்களைச் செய்யும்போது அனைத்துத் தரவு மையங்களிலும் இவை முழுமையாக வெளியிடப்பட சிறிது நேரம் ஆகும். உங்களின் தேடலுக்கு எந்தத் தரவு மையத்தில் இருந்து முடிவுகள் காட்டப்படுகின்றன என்பதைப் பொறுத்து முடிவுகளில் இது மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

தேடும் சூழலைப் பயன்படுத்தி Searchசில் காட்டப்படும் முடிவுகளை மேம்படுத்துதல்

உங்கள் தேடல் சூழலைக் கருத்தில்கொள்வதன் மூலம் மிகவும் தொடர்புடைய முடிவுகளை Search காட்டும். சூழலுக்கான சில உதாரணங்கள்:

  • இருப்பிடம்: ஒரு குறிப்பிட்ட நகரத்தில் பீட்சா என்று தேடினால் அந்த இடத்திற்குத் தொடர்புடைய முடிவுகள் காட்டப்படும்.
  • மொழி: நீங்கள் பேசும் மொழியில் முடிவுகள் காட்டப்படும்.
  • சாதன வகை: சரியான ஆப்ஸ்டோருக்குச் செல்லும் அல்லது மொபைல், டெஸ்க்டாப் போன்று நீங்கள் பயன்படுத்தும் திரையின் வகைக்கு ஏற்ப சிறந்த முடிவுகள் காட்டப்படும்.
  • தொடர்புடைய முடிவுகள்: ஓர் இணைய முடிவைக் கிளிக் செய்துவிட்டு தேடல் முடிவுகள் பக்கத்திற்கு நீங்கள் திரும்பும்போது, இன்னும் பல தொடர்புடைய முடிவுகள் காட்டப்படும்.

முடிவுகளை மேம்படுத்த பிரத்தியேகமாக்கலை Search பயன்படுத்துதல்

உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் Search முடிவுகள் காட்டப்படுவதே பிரத்தியேகமாக்கம் எனப்படும். மிகவும் தொடர்புடைய மற்றும் உதவிகரமான தகவல்களை வழங்க முடியும் என்றால் மட்டுமே உங்கள் முடிவுகளில் பிரத்தியேகமாக்கம் பயன்படுத்தப்படுகிறது. எல்லா Search முடிவுகளையும் இது பாதிக்காது. மாறாக, சில முடிவுகள் மட்டும் பிரத்தியேகமாக்கப்படலாம். பிரத்தியேகமாக்கம் மற்றும் Google Search முடிவுகள் பற்றி மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1066277895972663857
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false