அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

பிரத்தியேகமாக்கம் மற்றும் Google Search முடிவுகள்

பிரத்தியேகமாக்கம் மூலம் உங்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற Google Search முடிவுகளைப் பெறலாம். மிகவும் தொடர்புடைய, உதவிகரமான தகவலை வழங்குவற்கு மட்டுமே உங்கள் முடிவுகளில் பிரத்தியேகமாக்கம் பயன்படுத்தப்படுகிறது. பிரத்தியேகமாக்கப்பட்ட முடிவுகளை Google எப்படிக் காட்டுகிறது என்பதையும் அவற்றை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதையும் இந்தப் பக்கம் விவரிக்கிறது.

உதவிக்குறிப்பு: பிரத்தியேகமாக்கம் தவிர மொழி அமைப்புகள், உள்ளூர் முடிவுகள் போன்ற காரணங்களால் Search முடிவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.

பிரத்தியேகமாக்கப்பட்ட முடிவுகளைக் கண்டறிதல்

பிரத்தியேகமாக்கம் எல்லா தேடல் முடிவுகளையும் பாதிக்காது. மாறாக, சில முடிவுகள் மட்டும் பிரத்தியேகமாக்கப்படலாம்.

ஒரு தனிப்பட்ட முடிவு பிரத்தியேகமாக்கப்பட்டிருந்தால் “இந்த முடிவு குறித்து” பேனலில் ”உங்களுக்கெனப் பிரத்தியேகமாக்கப்பட்டது” என்ற மெசேஜ் காட்டப்படும். இந்த மெசேஜ் காட்டப்படாவிட்டால் முடிவு பிரத்தியேகமாக்கப்பட்டதல்ல.

சில நேரங்களில் Search அம்சம் மூலம் பல்வேறு பிரத்தியேகமாக்கப்பட்ட முடிவுகளைப் பெறுவீர்கள். உதாரணமாக, பார்ப்பதற்கு உள்ளவை என நீங்கள் தேடும்போது காட்டப்படும் பரிந்துரைகள் பிரத்தியேகமாக்கப்பட்டிருக்கலாம். தேடல் அம்சங்களில் காடடப்படும் முடிவுகள் பிரத்தியேகமாக்கப்பட்டிருந்தால் அந்த அம்சத்திற்கு அருகில் "உங்களுக்கான பரிந்துரைகள்" என்று காட்டப்படும்.

பிரத்தியேகமாக்கத்தை முடக்குதல்

பிரத்தியேகமாக்கத்தை முடக்கினால் பயனுள்ள தனிப்பட்ட முடிவுகளைக் காட்டவும் பிரத்தி்யேகமாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அம்சங்களுக்கும் அது பயன்படுத்தப்படாது. மேலும் இந்த அமைப்பு:

  • தன்னிரப்பியில் முந்தைய தேடல்கள் காட்டப்படுவதை முடக்கும்.
  • உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட செயல்பாட்டை இடைநிறுத்தாது அல்லது நீக்காது. தரவு மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிக்கப்பட்ட செயல்பாட்டை இடைநிறுத்தலாம் அல்லது நீக்கலாம்.
  • ஆப்ஸ் மற்றும் இணையதள விருப்பங்களை முடக்காது அல்லது நீக்காது. உதாரணம்: மொழி அமைப்புகள், தேடல் அமைப்புகள் (எ.கா. ஒரு பக்கத்தில் காட்டப்பட வேண்டிய முடிவுகளின் எண்ணிக்கை) போன்றவை விருப்பங்களாகும், இவை பாதிக்கப்படாது.
  • நீங்கள் சேமிக்கும் உள்ளடக்கத்தை முடக்காது அல்லது நீக்காது. உதாரணம்: உங்கள் சேகரிப்பில் சேமிக்கப்பட்டவை, நீங்கள் பின்தொடரும் பங்கு விலைகள், உங்கள் வீடு, அலுவலகம் ஆகியவற்றின் முகவரிகள் போன்றவை பாதிக்கப்படாது.

நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது பிரத்தியேகமாக்கத்தை முடக்க தனிப்பட்ட முடிவுகளைக் காட்டு என்பதை முடக்கவும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நீங்கள் முடக்கும்போது பிரத்தியேகமாக்கமும் முடக்கப்படும். Google கணக்கில் இருந்து வெளியேறிய நிலையில் இருக்கும்போது பிரத்தியேகமாக்கத்தை முடக்க Search பிரத்தியேகமாக்கல் என்பதை முடக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16689963276758110554
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false