அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Finance மூலம் போர்ட்ஃபோலியோக்களை உருவாக்குதலும் நிர்வகித்தலும்

Google Financeஸில் உள்ள போர்ட்ஃபோலியோக்கள் மூலம் உங்கள் முதலீடுகளின் செயல்திறனைக் கண்காணித்து அவற்றைப் புரிந்துகொள்ளலாம். உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டின் மதிப்பைப் பார்க்கலாம், பிற பங்குகளுடனும் இன்டெக்ஸ்களுடனும் உங்கள் முதலீட்டின் செயல்பாட்டை ஒப்பிடலாம், உங்கள் முதலீடுகள் குறித்த பகுப்பாய்வுகளையும் செய்திகளையும் பார்க்கலாம்.

போர்ட்ஃபோலியோவை உருவாக்குதல்

பிரத்தியேகப் போர்ட்ஃபோலியோக்களில் இதுவரையிலான உங்களின் தனிப்பட்ட முதலீட்டை நிர்வகிக்கலாம், அதன் மதிப்பைக் கண்காணிக்கலாம்.

போர்ட்ஃபோலியோவை உருவாக்குக
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள புதிய போர்ட்ஃபோலியோ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. போர்ட்ஃபோலியோ பெயரை டைப் செய்யவும்.
  4. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. முதலீடுகளைச் சேர்க்க, முதலீடுகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
தற்போதைய பிரத்தியேகமான ‘கண்காணிப்பவை’ பட்டியலை போர்ட்ஃபோலியோவாக மாற்றுக
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. Google Finance முகப்புப்பக்கத்தில் உள்ள பட்டியலில் இருந்து ’கண்காணிப்பவை’ பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. போர்ட்ஃபோலியோவாகக் காட்டு என்பதைத் தேர்வுசெய்யவும்.
போர்ட்ஃபோலியோவின் பெயரை மாற்றுக அல்லது அதை நீக்குக
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், பெயர் மாற்ற விரும்பும் அல்லது நீக்க விரும்பும் போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, மேலும் More என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெயர் மாற்று அல்லது நீக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.

மாதிரி போர்ட்ஃபோலியோவை உருவாக்குதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதன் கீழ் உள்ள புதிய போர்ட்ஃபோலியோ அதன்பிறகு புதிய போர்ட்ஃபோலியோ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. போர்ட்ஃபோலியோ பெயரை டைப் செய்யவும்.
  4. மாதிரி போர்ட்ஃபோலியோவை இயக்கவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இருபடிச் சரிபார்ப்பு:
    • 24 மணிநேரத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டிருந்தால்: முதலீடுகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்து நீங்கள் சேர்க்க விரும்பும் இண்டெக்ஸைத் தேர்ந்தெடுக்கலாம் தேடலாம்.
    • 24 மணிநேரத்திற்குள் நிறைவுசெய்யப்படவில்லை எனில்: மீண்டும் அங்கீகரிக்குமாறு உங்களிடம் கேட்கப்படும்.
  7. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மாதிரி போர்ட்ஃபோலியோக்கள் என்பவை உருவகப்படுத்துவதற்கானவை. இவற்றில் உங்கள் முதலீடு சேர்க்கப்படாது.

போர்ட்ஃபோலியோ அமைப்புகளை நிர்வகித்தல்

உங்கள் போர்ட்ஃபோலியோவில் பங்கு விலைகளைக் கண்காணிக்கவோ நாணயத்தை மாற்றவோ உதவும் வகையில் உங்கள் அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

இருபடிச் சரிபார்ப்பின் மூலம் போர்ட்ஃபோலியோவை அணுகுதல்

முக்கியம்: google.com/finance தளத்தில் குறிப்பிட்ட தகவலை அணுகும் எவருக்கும் Googleளின் இருபடிச் சரிபார்ப்பு (இருபடி அங்கீகாரம் என்றும் அழைக்கப்படும்) அவசியம்.

இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கலாம். உங்கள் கணக்கையும் தனிப்பட்ட தகவல்களையும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் அணுகுவதை இது தடுக்கிறது.

இருபடிச் சரிபார்ப்பு குறித்து மேலும் அறிக.

போர்ட்ஃபோலியோவை மாதிரி போர்ட்ஃபோலியோவாகக் குறித்தல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இருபடிச் சரிபார்ப்பு: 
    • 24 மணிநேரத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டிருந்தால்: மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் More அதன் பிறகு மாதிரியாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • 24 மணிநேரத்திற்குள் நிறைவுசெய்யப்படவில்லை எனில்: மாதிரி போர்ட்ஃபோலியோவாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும். இருபடிச் சரிபார்ப்பை நிறைவுசெய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும்.
  4. உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மாதிரி போர்ட்ஃபோலியோக்கள் என்பவை உருவகப்படுத்துவதற்கானவை. இவற்றில் உங்கள் முதலீடு சேர்க்கப்படாது.

போர்ட்ஃபோலியோவை மாதிரி போர்ட்ஃபோலியோ என்பதில் இருந்து அகற்றுதல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள "போர்ட்ஃபோலியோ ஹைலைட்ஸ்” என்பதற்கு மேல் இருக்கும் மேலும் More அதன் பிறகு மாதிரி என்பதில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

போர்ட்ஃபோலியோவை 'கண்காணிப்பவை' பட்டியலாகப் பார்த்தல்

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள "போர்ட்ஃபோலியோ ஹைலைட்ஸ்” என்பதற்கு மேல், மேலும் More அதன் பிறகு ‘கண்காணிப்பவை’ பட்டியலாகக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் போர்ட்ஃபோலியோவைக் ‘கண்காணிப்பவை’ பட்டியலாகப் பார்க்கும்போது அதன் மதிப்பு நீக்கப்படாது. உங்கள் முதலீட்டு மதிப்பை எப்போது வேண்டுமானாலும் சரிபார்ப்பதற்கு அதைப் போர்ட்ஃபோலியோவாகப் பார்க்க முடியும்.

போர்ட்ஃபோலியோ நாணயத்தை மாற்றுக

முக்கியமானது: உங்கள் போர்ட்ஃபோலியோ பயன்படுத்தும் நாணயத்தை நீங்கள் மாற்றலாம். உதாரணமாக, உங்கள் போர்ட்ஃபோலியோவை அமெரிக்க டாலர்களில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய யூரோக்களுக்கு மாற்றினால் உங்கள் போர்ட்ஃபோலியோவின் மதிப்பும் முதலீடுகளின் மதிப்பும் தானாகவே ஐரோப்பிய ஒன்றிய யூரோக்களுக்கு மாறிவிடும்.

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள "போர்ட்ஃபோலியோ ஹைலைட்ஸ்” என்பதற்கு மேல், மேலும் More அதன் பிறகு நாணயத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் போர்ட்ஃபோலியோ மதிப்பை எந்த நாணயத்தில் பார்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

முதலீடுகளைப் போர்ட்ஃபோலியோவில் நிர்வகித்தல்

உங்கள் போர்ட்ஃபோலியோவில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் அல்லது கிரிப்டோகரன்சியைச் சேர்த்திடுக
  1. முதலீடுகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் சேர்க்க விரும்பும் பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது கிரிப்டோகரன்சியை டைப் செய்யவும். நீங்கள் டைப் செய்யும்போது காட்டப்படும் சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பின்வருபவற்றை டைப் செய்யவும்:
    • பங்குகளின் எண்ணிக்கை
    • பங்குகளை நீங்கள் வாங்கிய தேதி
    • பங்குகளை நீங்கள் வாங்கியபோது இருந்த அதன் விலை
  4. பங்குகளை வெவ்வேறு தேதிகளில் வாங்கியிருந்தால் [X] இல் மேலும் வாங்கியவை என்பதைக் கிளிக் செய்யவும். தகவல்களை டைப் செய்யவும்.
  5. அனைத்துப் பங்குகளையும் டைப் செய்ததும் சேமி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது போர்ட்ஃபோலியோவில் கூடுதல் முதலீடுகளைச் சேர்க்க, சேமித்து மற்றொன்றைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இன்டெக்ஸைச் சேர்த்திடுக
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. முதலீடு என்பதைக் கிளிக் செய்யவும். முதலீடுகள் எதுவும் இல்லையெனில் முதலீட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சேர்க்க விரும்பும் இன்டெக்ஸைத் தேடி, அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் போர்ட்ஃபோலியோ லாபத்தில் இன்டெக்ஸின் பங்களிப்பு இருக்காது.
முதலீட்டை அகற்றுக
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீக்க விரும்பும் முதலீட்டின் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  4. மேலும் More அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீக்குவதை உறுதிசெய்யவும்.

போர்ட்ஃபோலியோ செயல்திறன் குறித்துப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் போர்ட்ஃபோலியோவின் இதுவரையிலான பேலன்ஸைக் காண்க

உங்கள் போர்ட்ஃபோலியோவின் மதிப்பு நிகழ்நேரத்தில் கணக்கிடப்படுகிறது. உங்கள் போர்ட்ஃபோலியோ மதிப்பிற்குக் கீழே உள்ள விளக்கப்படத்தில் இதுவரை உங்கள் போர்ட்ஃபோலியோ பேலன்ஸில் ஏற்பட்ட மாற்றங்கள் காட்டப்படும்.

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் போர்ட்ஃபோலியோ பெயரின் கீழ் போர்ட்ஃபோலியோவின் மதிப்பு காட்டப்படும். உங்கள் போர்ட்ஃபோலியோவின் இதுவரையிலான பேலன்ஸ் கீழுள்ள விளக்கப்படத்தில் காட்டப்படும்.
  4. வெவ்வேறு காலகட்டங்களில் உங்கள் போர்ட்ஃபோலியோவின் பேலன்ஸைப் பார்க்க 1M, 6M, YTD, அல்லது பிற விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
போர்ட்ஃபோலியோவுடன் தொடர்புடைய செய்திகளைக் காண்க
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. “எனது போர்ட்ஃபோலியோ தொடர்பான செய்திகள்” என்பதற்குச் செல்லவும்.
போர்ட்ஃபோலியோ லாபத்தைக் காண்க
துவக்கத்தில் இருந்து ("மொத்தம்") முந்தைய வர்த்தக நாள் ("1 நாள்") வரை உங்கள் லாபம் கணக்கிடப்படுகிறது. தற்போதைய மதிப்பிற்கும் வாங்கும்போது உள்ள மதிப்பிற்கும் (முதலீடுகளைச் சேர்க்கும்போது "வாங்கும் விலை" என்பதில் நீங்கள் டைப் செய்த தொகை) இடையிலான வித்தியாசமே மொத்த லாபமாகக் கணக்கிடப்படுகிறது.
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள "போர்ட்ஃபோலியோ ஹைலைட்ஸ்” என்பதில் உங்களின் “1 நாள்” மற்றும் “மொத்த” லாபத்தைப் பார்க்கலாம்.
போர்ட்ஃபோலியோ ஹைலைட்ஸைக் காண்க
  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள "போர்ட்ஃபோலியோ ஹைலைட்ஸ்” என்பதில் வெவ்வேறு அளவீடுகளில் உங்கள் போர்ட்ஃபோலியோ ஒதுக்கீட்டைப் பார்க்கலாம்.
போர்ட்ஃபோலியோவைப் பிற சந்தை/நிறுவனங்களுடன் ஒப்பிடுக

போர்ட்ஃபோலியோ ஒப்பீடுகள் நேர அளவீட்டு லாப விகிதத்தைப் பயன்படுத்துகின்றன. இது ரொக்க வரவு மற்றும் போக்குக்கு ஏற்ப சரிசெய்யும் என்பதால் தரநிலை அளவுகளுடனான சிறந்த ஒப்பீடுகளை வழங்கும்.

  1. google.com/finance தளத்திற்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள "எனது போர்ட்ஃபோலியோக்கள்" என்பதற்குக் கீழ், போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விளக்கப்படத்தின் கீழ், பரிந்துரைக்கப்படும் ஒப்பீட்டைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது குறிப்பிட்ட சந்தை/நிறுவனங்களைக் கண்டறிய, இதனுடன் ஒப்பிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10262149487268120195
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false