அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Searchசில் வீடியோக்களைக் கண்டறிதல்

Google Searchசில் பெரும்பாலான தேடல்களுக்கு வீடியோ முடிவுகளைக் கண்டறியலாம். குறிப்பிட்ட தகவலை நீங்கள் கண்டறிய உதவிடும் வகையில் சில வீடியோக்கள் முக்கியத் தருணங்களுடன் குறியிடப்பட்டிருக்கும். புத்தகங்களில் இருக்கும் அத்தியாயங்களைப் போல வீடியோக்களில் உங்களுக்குத் தேவையான தகவலைக் கண்டறிய முக்கியத் தருணங்கள் உதவும்.

முக்கியம்: முக்கியத் தருணங்களை வீடியோ கிரியேட்டர்கள் சேர்ப்பார்கள். அப்படி இல்லையெனில், சில சமயங்களில் Google தானாகவே உள்ளடக்கத்தைக் கண்டறிந்து, முக்கியத் தருணங்களைச் சேர்க்கும்.

வீடியோக்களைத் தேடுதல்

  1. google.com தளத்தில் தேடுவதற்காக ஏதாவது டைப் செய்யவும்.
  2. "வீடியோக்கள்" பிரிவிற்குச் செல்லவும்.
  3. பார்ப்பதற்கு ஒரு வீடியோவைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: "வீடியோக்கள்" பிரிவில் கூடுதல் வீடியோக்கள் இருக்கும். தேடல் பட்டிக்குக் கீழே உள்ள, வீடியோக்கள்  என்பதைத் தட்டவும்.

வீடியோவில் முக்கியத் தருணங்களைக் கண்டறிதல் & பயன்படுத்துதல்

முக்கியம்: சில வீடியோக்களில் முக்கியத் தருணங்கள் காட்டப்படாது. முக்கியத் தருணங்கள் காட்டப்படவில்லை எனில் அந்த வீடியோவிற்கு முக்கியத் தருணங்கள் அம்சம் இயக்கப்படாமல் இருக்கக்கூடும்.

முக்கியத் தருணங்களைக் கண்டறிய (இருந்தால்):

  1. google.com தளத்தில் தேடவும்.
  2. "எல்லா முடிவுகளும்" Search எனும் பிரிவின் கீழ் வீடியோக்களைப் பார்க்கலாம்.
    • முக்கியத் தருணங்களுடன் கூடிய வீடியோக்களை "வீடியோக்கள்" பிரிவிலும் பார்க்கலாம்.
  1. முதன்மை வீடியோவிற்குக் கீழே, நீங்கள் விரும்பும் முக்கியத் தருணங்களைத் தேர்வுசெய்யவும்.
  2. முக்கியத் தருணங்கள் இல்லையெனில், விரிவாக்கு கூடுதல் தகவல் என்பதைத் தட்டவும்.

வீடியோவில் முக்கியத் தருணங்களைச் சேர்த்தல்

நீங்கள் வீடியோ கிரியேட்டராக இருந்தால் டெவெலப்பர் கருவிகளைப் பயன்படுத்தியோ வீடியோ விளக்கங்கள் மூலமாகவோ உங்கள் வீடியோக்களில் முக்கியத் தருணங்களைக் குறிக்கலாம். வீடியோக்களில் முக்கியத் தருணங்களை நீங்கள் சேர்க்கவில்லை எனில் Google தானாகவே உள்ளடக்கத்தைக் கண்டறிந்து, முக்கியத் தருணங்களைச் சேர்க்கக்கூடும். டெவெலப்பர் கருவிகளைப் பயன்படுத்தி வீடியோவில் முக்கியத் தருணங்களை முடக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7020946763276864532
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false