அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

இணையப் பக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுதல்

“இந்த முடிவைப் பற்றி” என்ற பேனலின் “ஆதாரம்” பிரிவில் இணையப் பக்கத்தின் ஆதாரம், தலைப்பு, இணையப் பக்கத்தில் உள்ள குறிப்பிடத்தக்க படங்கள் ஆகியவை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

முக்கியம்: இந்த அம்சம் சில பிராந்தியங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ஆதாரம் மற்றும் தலைப்பு குறித்த தகவல்களைக் கண்டறிதல்

  1. Googleளில் எதையேனும் தேடவும்.
  2. காட்டப்படும் தேடல் முடிவின் URLலுக்கு அடுத்துள்ள மேலும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. “ஆதாரம்” பிரிவில் இந்தப் பக்கம் குறித்து மேலும் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கிடைக்கக்கூடிய தகவல்களைப் பொறுத்து இந்தப் பக்கத்தில் 3 பிரிவுகள் காட்டப்படலாம்:
    • ஆதாரம் குறித்த தகவல்
    • தலைப்பு குறித்த தகவல்
    • படம் குறித்த தகவல்

ஆதாரம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுதல்

குறிப்பிட்ட இணையப் பக்கத்தின் ஆதாரம் குறித்த தகவல்கள் “ஆதாரம் குறித்து” என்னும் பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும். பிற தளங்கள் மூலம் நீங்கள் ஆதாரம் குறித்து மேலும் அறிந்துகொள்ள உதவியாக, பின்வருபவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகவல்களை இந்தப் பிரிவு வழங்கக்கூடும்.

உதவிக்குறிப்பு: இணையத்தில் உள்ள தகவல்களை மதிப்பிடும்போது அந்தத் தகவல்கள் இருக்கும் பக்கத்தின் ஆதாரம் குறித்துத் தெரிந்துகொள்வதுடன், அதன் பின்னணி அல்லது கண்ணோட்டம் குறித்த தகவல்களையும் தேடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விளக்கம்

“ஆதாரம் குறித்து” என்ற பிரிவின் முதல் பத்தியில், ஆதாரத்தைப் பற்றி ரெஃபரன்ஸ் தளம் வழங்கும் விளக்கம் காட்டப்படலாம். இந்த விளக்கங்கள் Googleளின் அதிவிவர கிராஃபில் இருந்து பெறப்படுகின்றன.

தளத்தின் சொந்த விளக்கம்

இது ஆதாரம் குறித்து அந்தத் தளமே வழங்கும் விளக்கமாகும்.

நீங்கள் இணையதளத்தை நிர்வகிக்கும்பட்சத்தில் அதன் விளக்கம் திருப்திகரமாக இல்லை எனில் இரண்டு வழிகளில் அதை மாற்றலாம்:

  • உங்கள் Business Profileலுக்கான விளக்கத்தைச் சமர்ப்பிக்கலாம் அல்லது திருத்தலாம். சுயவிவரத்தை உரிமைகோருவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  • ‘எங்களைப் பற்றி’ என்ற பக்கத்தில் உங்கள் தளத்தின் விளக்கத்தை Google கண்டறிய முயலும். விளக்கத்தை Google கண்டறிவதற்கு உதவ:
    • உங்கள் இணையதள URLலில் about-us என்பதைச் சேர்த்து இணையதளத்தில் ‘எங்களைப் பற்றி’ என்னும் பக்கத்தை உருவாக்கவும்.
    • அந்தப் பக்கத்தில் உங்கள் தளத்தின் விளக்கத்தைச் சேர்க்கவும். அது ஆங்கிலத்தில் இருப்பதுடன் கிரால் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
    • அந்தப் பக்கத்திற்கான இணைப்பில் “எங்களைப் பற்றி” என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.
    • உங்கள் தளத்தின் விளக்கத்திற்கு மேலே “எங்களைப் பற்றி” என்ற தலைப்பைப் போன்ற குறிப்புகளைச் சேர்க்கவும்.
தளத் தகவல்கள்

சில சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை இந்தப் பிரிவு அவற்றைப் பற்றிய தகவல்களைக் காட்டாமல், பக்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகக் கணக்கு அல்லது சேனல் குறித்த தகவல்களை மட்டுமே காட்டும். இந்தத் தகவல்கள் சில சமூக வலைதளங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

உதவிக்குறிப்பு: தளம் குறித்த தகவல்களைத் தேடுவதுடன் சமூகக் கணக்கு அல்லது சேனலின் உரிமையாளர் குறித்த தகவல்களையும் தேடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முதன்முதலில் தளத்தை Google அட்டவணைப்படுத்தியது

இந்தத் தளத்தை Google முதன்முதலில் கிரால் செய்த தேதி இதில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தத் தேதி இவற்றைதான் குறிக்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டாம்:

  • தளத்துடன் தொடர்புடைய பிசினஸ் அல்லது நிறுவனம் நிறுவப்பட்ட தேதி
  • குறிப்பிட்ட பக்கம் தளத்தில் வெளியிடப்பட்ட தேதி
ஆதாரம் குறித்த இணைய முடிவுகள்

ஆதாரம் குறித்து இணையத்தில் பொதுவாகக் கிடைக்கக்கூடிய தேடல் முடிவுகள் இந்தப் பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றின் உதவியுடன் இந்த ஆதாரம் குறித்து பிற தளங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இந்தப் பிரிவில் உள்ள தகவல்கள் Googleளின் அதிவிவர கிராஃபில் இருந்தும், தளத்திடம் நேரடியாகவும் (கிடைக்கும்பட்சத்தில்) பெறப்படுகின்றன.

இந்தப் பிரிவில் காட்டப்படுகின்ற தேடல் முடிவுகள்:

  • இணையதளம் குறித்த புரிதலை வழங்கக்கூடிய பக்கங்களைக் கண்டறிவதற்காக, ஆதாரத்தின் பெயர் பற்றிய தேடல்கள் உட்பட பல தகவல்களின் அடிப்படையில் காட்டப்படுகின்றன
  • சார்பற்ற கண்ணோட்டங்களை வழங்கும் வகையில், ஆதார இணையதளத்தினால் உருவாக்கப்படாத அல்லது கட்டுப்படுத்தப்படாத, பயனுள்ள முடிவுகளுக்கு முன்னுரிமையளிக்க முயல்கின்றன

அனைத்துத் தளங்களுக்கும் இதே அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இந்த அம்சம் சோதனையில் உள்ளது, மேலும் பயனுள்ள முடிவுகளை வழங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். தேடல் முடிவுகள் பயனற்றதாகவோ ஆதாரத்திற்குத் தொடர்பற்றதாகவோ இருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பான முடிவுகளை வழங்க உங்கள் கருத்தை அனுப்பவும்.

தலைப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ளுதல்

கிடைக்கும்பட்சத்தில், “தலைப்பு குறித்து” என்ற பிரிவில் முக்கியச் செய்தி அறிக்கை போன்ற தகவல்களோ அதே தலைப்பு குறித்து பிற தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களோ கொடுக்கப்பட்டிருக்கும். இணையப் பக்கத்தில் உள்ள தலைப்பைப் பற்றிய பிற ஆதாரங்களின் கண்ணோட்டங்கள் இந்தப் பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும்.

உதவிக்குறிப்பு: இணையத்தில் உள்ள தகவல்களை மதிப்பிடும்போது முக்கியமான கூற்றுகளுக்கான ஆதாரத்தைத் தேடுவதுடன் அதே தலைப்பு குறித்த பிற கண்ணோட்டங்களையும் கண்டறியுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கியச் செய்திகள்

இவை, நீங்கள் மேலும் அறிந்துகொள்ளும் பக்கத்தில் உள்ள செய்தி குறித்து வெவ்வேறு ஆதாரங்கள் வழங்கும் உயர்தரத் தலைப்புச் செய்திகளாகும். தொடர்புடைய கூடுதல் உள்ளடக்கத்தைக் கண்டறிய முழுக் கவரேஜைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

முழுமையான கவரேஜில் இவை காட்டப்படலாம்:

  • கூடுதல் ஆதாரங்கள்
  • வீடியோக்கள்
  • உள்ளூர்ச் செய்தி அறிக்கைகள்
  • பொதுவான கேள்விகள்
  • சமூகக் கருத்து
  • செய்தி எப்படிச் செயல்பட்டது என்பதன் காலப்பதிவு
தொடர்புடைய முடிவுகள்

இவை நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்பும் பக்கத்தில் உள்ள தலைப்பு குறித்து பிற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் இணைய முடிவுகளாகும். தலைப்பைப் பொறுத்து செய்திக் கட்டுரைகள், அறிவியல் ஆய்வுகள், நீண்ட உள்ளடக்கம், ஷாப்பிங் இணையதளங்கள் ஆகியவை இந்த முடிவுகளில் காட்டப்படக்கூடும்.

படம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுதல்

இணையப் பக்கத்தில் உள்ள படங்களைப் பற்றிய தகவல் கிடைக்கும்போது, "படம் பற்றிய தகவல்" பிரிவில் அவை காட்டப்படும். படத்தை முதன் முதலில் Google எப்போது கண்டறிந்தது, படம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள அதைப் பற்றிய தகவலைக் கொண்ட பக்கத்திற்கான இணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

“இந்தப் பக்கம் குறித்த கூடுதல் தகவல்கள்” பற்றி கருத்து வழங்குதல்

அனைவரும் பயனடையும் வகையில் இந்த அம்சத்தை நாங்கள் மேம்படுத்த உங்கள் கருத்து உதவும்.

டெஸ்க்டாப்பில்:

  1. கீழே உள்ள கருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் கருத்தை டைப் செய்யவும்.
  3. அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மொபைல் உலாவியில்:

  1. கீழே உள்ள கருத்து என்பதைத் தட்டவும்.
  2. உங்கள் கருத்தை டைப் செய்யவும்.
  3. அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13739959755622687479
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false