அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் டார்க் தீமில் தேடுதல்

Chrome, Firefox போன்ற உலாவியில் உங்களுக்கு விருப்பமான தீமினை Google Searchசிற்குத் தேர்வுசெய்யலாம். Search பக்கங்களுக்குக் குறிப்பிட்ட வண்ணத் திட்டத்தைச் சேர்க்க விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் லைட் தீம் அல்லது டார்க் தீமினைத் தேர்வுசெய்யலாம். Google முகப்புப்பக்கம், தேடல் முடிவுகளின் பக்கம், Search அமைப்புகள் ஆகியவை Search பக்கங்களில் அடங்கும்.

Search பக்கங்களுக்கான தீமினைத் தேர்வுசெய்தல்

முக்கியம்: இயல்பாகவே, Search பக்கங்களுக்கான வண்ணத் திட்டம் உங்கள் சாதனத்தின் வண்ணத் திட்டத்திற்கு ஏற்ப இருக்கும்.

Searchசிற்குத் தேர்வுசெய்த தீமினை மாற்ற விரும்பினால் Search அமைப்புகளுக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம். Google கணக்கில் உள்நுழைந்திருக்கும் ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும் நீங்கள் தேர்வுசெய்த தீம் சேமிக்கப்படும்.

  1. கம்ப்யூட்டரில் google.com தளத்திற்குச் சென்று எதையேனும் தேடவும்.
  2. அனைத்து டெஸ்க்டாப் உலாவிகளிலும் ஒரே Search அமைப்புகளைப் பயன்படுத்த விரும்பினால் Google கணக்கில் உள்நுழையவும். மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்து காட்டப்பட்டால் ஏற்கெனவே உள்நுழைந்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
  3. மேல் இடதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுறத்தில் உள்ள தோற்றம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சாதனத்தின் இயல்பான தீம், டார்க் தீம், லைட் தீம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.
    • சாதனத்தின் இயல்பான தீம்: நீங்கள் தற்போது பயன்படுத்தும் சாதனத்தின் வண்ணத் திட்டத்திற்கு ஏற்ப தானாகவே தீமினை அமைக்கும்
    • டார்க் தீம்: அடர்நிறப் பின்புலத்தில், வெளிர்நிற எழுத்துகள்
    • லைட் தீம்: வெளிர்நிறப் பின்புலத்தில், அடர்நிற எழுத்துகள்
  6. கீழே உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: தீம்களை விரைவாக மாற்ற, அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு சாதனத்தின் இயல்பான தீம், டார்க் தீம், லைட் தீம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.

மொபைல் சாதனங்களில் தீமினைத் தேர்வுசெய்தல்

முக்கியம்: இயல்பாகவே, Search பக்கங்களுக்கான வண்ணத் திட்டம் உங்கள் சாதனத்தின் வண்ணத் திட்டத்திற்கு ஏற்ப இருக்கும்.

மொபைல் அல்லது டேப்லெட்டில் Searchசிற்குத் தேர்வுசெய்த தீமினை மாற்ற விரும்பினால் Search அமைப்புகளுக்குச் சென்று மாற்றலாம். Google கணக்கில் உள்நுழைந்திருக்கும் அனைத்து மொபைல்களிலும் டேப்லெட்களிலும் உங்கள் தீம் அமைப்புகள் சேமிக்கப்படும்.
  1. உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் google.com தளத்திற்குச் சென்று எதையேனும் தேடவும்.
  2. அனைத்து மொபைல் சாதன உலாவிகளிலும் ஒரே Search அமைப்புகளைப் பயன்படுத்த விரும்பினால் Google கணக்கில் உள்நுழையவும். மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழைக என்பதைத் தட்டவும்.
    • உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்து காட்டப்பட்டால் ஏற்கெனவே உள்நுழைந்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
  3. மேல் இடதுபுறத்தில் உள்ள மேலும் More அதன் பிறகு அமைப்புகள் Settings என்பதைத் தட்டவும்.
  4. “தோற்றம்” என்பதற்குக் கீழே உள்ள, சாதனத்தின் இயல்பு தீம், டார்க் தீம், லைட் தீம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.
    • சாதனத்தின் இயல்பு தீம்: நீங்கள் தற்போது பயன்படுத்தும் சாதனத்தின் வண்ணத் திட்டத்திற்கு ஏற்ப தானாகவே தீமினை அமைக்கும்
    • டார்க் தீம்: அடர்நிறப் பின்புலத்தில், வெளிர்நிற எழுத்துகள்
    • லைட் தீம்: வெளிர்நிறப் பின்புலத்தில், அடர்நிற எழுத்துகள்
உதவிக்குறிப்பு: தீம்களை விரைவாக மாற்ற, மேலும் More அதன் பிறகு டார்க் தீம்: இயக்கு அல்லது டார்க் தீம்: முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

பிற தயாரிப்புகளுக்கான டார்க் தீம் குறித்து அறிக

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3649612947662129805
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false