அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Podcasts அமைப்புகளை நிர்வகித்தல்

மொபைல் சாதனத்தில் பின்வருபவை போன்ற Google Podcasts அமைப்புகளை நிர்வகிக்கலாம்:

  • நீங்கள் சந்தா பெற்றுள்ள பாட்காஸ்ட்டுகளின் புதிய எபிசோடுகளைத் தானாகப் பதிவிறக்குதல் அல்லது பழைய எபிசோடுகளை அகற்றுதல்.
  • சந்தா அறிவிப்புகளைப் பெறுதல்/நிறுத்துதல்.
  • பிரத்தியேகப்படுத்தப்பட்ட பாட்காஸ்ட் பரிந்துரைகளைப் பெறுதல்/நிறுத்துதல்.
  • தற்போதைய எபிசோடு முடிந்தவுடன் வேறொன்றைத் தானாகப் பிளே செய்தல்.
  • லைட்/டார்க் தீமினைத் தேர்வுசெய்தல்.

நீங்கள் சந்தா பெற்றுள்ள பாட்காஸ்ட்டுகளின் எபிசோடுகளைத் தானாகப் பதிவிறக்குதல்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. “பதிவிறக்கங்கள்” என்பதற்குக் கீழ் உள்ள தானாகப் பதிவிறக்குதல் என்பதைத் தட்டவும்.
  5. புதிய எபிசோடுகளைத் தானாகப் பதிவிறக்கு என்பதை இயக்கவும்.
  6. "எனது சந்தாக்கள்" என்பதற்குக் கீழ் நீங்கள் தானாகப் பதிவிறக்க விரும்பும் பாட்காஸ்ட்டுகளை இயக்கவும்.

பதிவிறக்கங்கள் அகற்றப்படும் நேரத்தை மாற்றுதல்

இயல்பாக, பதிவிறக்கிய எபிசோடுகளை Google Podcasts பின்வரும் சூழல்களில் அகற்றும்:

  • எபிசோடுகளைக் கேட்டு முடித்து 24 மணிநேரம் ஆனதும்.
  • எபிசோடுகளைப் பதிவிறக்கி 30 நாட்கள் ஆனதும்.

இந்த அமைப்புகளை மாற்ற:

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google Podcasts ஆப்ஸைத் Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பு முகப்பு என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பெயரின் முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
    • கேட்டு முடித்த எபிசோடுகளுக்கு, கேட்டு முடித்த எபிசோடுகளை அகற்று என்பதைத் தட்டி கால அளவைத் தேர்வுசெய்யவும்.
    • கேட்டு முடிக்காத எபிசோடுகளுக்கு, கேட்டு முடிக்காத எபிசோடுகளை அகற்று என்பதைத் தட்டி கால அளவைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் சந்தா பெற்றுள்ள பாட்காஸ்ட்டுகளுக்கான அறிவிப்புகளை நிர்வகித்தல்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. “அறிவிப்புகள்” என்பதற்குக் கீழ் உள்ள நான் சந்தா பெற்றுள்ள பாட்காஸ்ட்டுகளின் புதிய எபிசோடுகள் என்பதைத் தட்டவும்.
  5. ஒவ்வொரு சந்தாவிற்கும் அடுத்து அறிவிப்புகளை இயக்கவும் அல்லது முடக்கவும்.
பிரத்தியேகப் பரிந்துரைகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது பின்வருபவற்றின் அடிப்படையில் பாட்காஸ்ட்டுகளை Google பரிந்துரைக்கலாம்:

  • Google Podcastsஸில் இதுவரை நீங்கள் கேட்டவை
  • Google தயாரிப்புகள் அனைத்திலும் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு (இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்கியிருந்தால்).
உங்கள் கணக்கில் செயல்பாட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அறிக.

பிரத்தியேகமான பரிந்துரைகளை இயக்க அல்லது முடக்க:

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. "கண்டறிதல்" என்பதன் கீழ் உள்ள பிரத்தியேகமான பரிந்துரைகளைக் காட்டு என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

லைட்/டார்க் பயன்முறையைப் பயன்படுத்துதல்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. “தோற்றம்” என்பதற்குக் கீழ் உள்ள தீம் என்பதைத் தட்டி, காட்டப்படும் தீம்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

விருப்ப மொழிகளைத் தேர்வுசெய்தல் 

முக்கியம்: சில மொழிகளை மட்டுமே விருப்ப மொழியாகத் தேர்ந்தெடுக்க முடியும்.

அதிகபட்சமாக இரண்டு மொழிகளில் மட்டுமே பாட்காஸ்ட்டுகளைத் தேடவும் கேட்கவும் முடியும். மொழிகளைத் தேர்வுசெய்வதற்கான வழிமுறைகள்:

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. "பிரத்தியேகமாக்கல்" என்பதற்குக் கீழ் உள்ள விருப்ப மொழி & பிராந்தியம் என்பதைத் தட்டவும்.
  5. விருப்ப மொழிகளுக்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  6. கீழே உள்ள மொழிகளைச் சேமி என்பதைத் தட்டவும்.
பூட்டுத் திரையில் பிளேபேக் கட்டுப்பாடுகள் தெரியுமாறு அமைத்தல் 

சாதனத்தின் பூட்டுத் திரையில் பிளேபேக் கட்டுப்பாடுகள் தெரியும் வகையில் அமைக்க, Google ஆப்ஸில் அறிவிப்புகளையும் ஆடியோ பிளேபேக்கையும் இயக்க வேண்டும்.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. Google அறிவிப்புகள் அனைத்தும் என்பதை இயக்கவும்.
  4. ஆடியோ பிளேபேக் என்பதை இயக்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10143895002176050700
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false