மற்றவர்கள் உங்கள் சாதனத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதைத் தடுக்க உதவுதல்

உங்கள் அனுமதியின்றி ஆரம்பநிலை அமைப்புகளுக்குச் சாதனம் மீட்டமைக்கப்பட்டால் பிறர் அதைப் பயன்படுத்துவதைத் தடுக்க உதவும் வகையில் சாதனத்தை அமைக்கலாம். உதாரணமாக, உங்கள் பாதுகாக்கப்பட்ட சாதனம் திருடப்பட்டு அதிலுள்ள தரவு அழிக்கப்பட்டால், உங்கள் Google கணக்கையோ திரைப் பூட்டையோ வைத்திருப்பவர் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பு: இதில் சில படிகள் Android 8.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிக.

சாதனப் பாதுகாப்பை அமைத்தல்

  1. உங்கள் சாதனத்தில் Google கணக்கைச் சேர்த்தல்: உங்கள் சாதனத்திலுள்ள தரவு அழிக்கப்பட்டிருக்கும்போது மற்றவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உதவ, Google கணக்கை உங்கள் சாதனத்தில் சேர்க்கவும். Androidல் உங்கள் Google கணக்கை எப்படிச் சேர்ப்பது என்பதை அறிக.
  2. திரைப் பூட்டை அமைத்தல்: பிறர் உங்கள் சாதனத்தைப் பயன்படுத்துவதையோ அதிலுள்ள தரவை அழிப்பதையோ தடுக்க, திரைப் பூட்டை அமைக்கவும். திரைப்பூட்டை அமைப்பது எப்படி என அறிக.

குறிப்பு: நீங்கள் திரைப் பூட்டை அமைக்கவில்லையெனில் Find My Device மூலம் உங்கள் சாதனத்தைத் தொலைவிலிருந்தே பூட்டலாம். Learn how to use Find My Device.

சாதனப் பாதுகாப்பை முடக்குதல்

சாதனப் பாதுகாப்பை முடக்க, உங்கள் சாதனத்தில் இருந்து Google கணக்கை அகற்றவும். Learn how to remove accounts.

டெவெலப்பர் விருப்பங்கள் இயக்கத்தில் இருந்தால், சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸிலிருந்தும் சாதனப் பாதுகாப்பை முடக்கலாம். சிஸ்டம் அதன் பிறகு டெவெலப்பர் விருப்பங்கள் அதன் பிறகு OEM அன்லாக் செய்தல் என்பதைத் தட்டவும். அதன் பிறகு உங்கள் பின்னை உள்ளிட்டு, இயக்கு என்பதைத் தட்டவும்.

ஆரம்பநிலைக்கு மீட்டமைத்ததற்குப் பிறகு உங்கள் உரிமை சரிபார்க்கப்படுவதை எதிர்பாருங்கள்

பாதுகாக்கப்பட்ட சாதனத்தை ஆரம்பநிலைக்கு மீட்டமைக்க, உங்கள் திரையை அன்லாக் செய்ய வேண்டும் அல்லது Google கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். நீங்களோ உங்களுக்கு நம்பிக்கையானவரோ சாதனத்தை மீட்டமைக்கிறார் என்பதை இது உறுதிசெய்யும்.

பின்வருபவற்றைச் செய்தால் உங்கள் திரை அன்லாக் செய்யப்படலாம் அல்லது Google கணக்கு விவரங்களை உள்ளிட வேண்டியிருக்கலாம்:

  • அமைப்புகள் ஆப்ஸைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தின் தரவை அழித்தல்: மீட்டமைப்பதற்கு முன்பு உங்கள் திரைப் பூட்டை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
  • உங்கள் சாதனத்தை அதன் பட்டன்களைப் பயன்படுத்தி மீட்டமைத்தல்: உங்கள் சாதனத்தை அதன் பட்டன்களைப் பயன்படுத்தி மீட்டமைத்தால் (Recovery mode), பின் (PIN), கடவுச்சொல் அல்லது பேட்டர்னை உள்ளிட வேண்டும். உங்கள் சாதனத்தை மீட்டமைப்பதற்கு முன் அதிலுள்ள Google கணக்கைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.
  • Find My Device மூலம் உங்கள் சாதனத்தைத் தொலைவிலிருந்தே மீட்டமைத்தல்: Find My Device மூலம் உங்கள் சாதனத்தைத் தொலைவிலிருந்தே மீட்டமைத்தால் சாதனத்துடன் தொடர்புடைய Google பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் உள்ளிட வேண்டும்.

முக்கியமானது: சாதனத்தில் முன்னதாகவே சேர்க்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்ட எந்த Google கணக்கிலும் ஒரு கணக்காகவோ பயனராகவோ நீங்கள் உள்நுழையலாம். ஆனால் விருந்தினராக உள்நுழைய முடியாது. அமைவின்போது இந்தத் தகவல்களை வழங்க முடியவில்லையெனில் ஆரம்பநிலைக்கு மீட்டமைத்த பிறகு உங்களால் சாதனத்தைப் பயன்படுத்தவே முடியாது. உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியவில்லையெனில் உள்நுழைவுக்கான உதவியைப் பெறுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5861465035165483186
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false