பவுன்ஸ் ஆகிய அல்லது நிராகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களைச் சரிசெய்தல்

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைப் பெறுநரின் மின்னஞ்சல் சேவையகங்கள் நிராகரிக்கப் பல காரணங்கள் உள்ளன. பெறுநரின் சேவையகம் வழங்கிய பதிலைப் பிரதிபலிக்கும் ஒரு மெசேஜை Gmail வழங்கும்.

நீங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய பொதுவான பிழைச் செய்திகளைக் கீழே கண்டறியவும். உங்கள் மெசேஜ் ஏன் சென்றடையவில்லை என்பதையும் அந்தச் சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். 

மெசேஜ் சென்றடையாத காரணத்தால் தோன்றும் பதில்களைப் புரிந்துகொள்ளுதல்

"நீங்கள் தொடர்புகொள்ள முயலும் மின்னஞ்சல் கணக்கு" இல்லை

மெசேஜ் ஏன் சென்றடையவில்லை?

உங்கள் பெறுநரின் முகவரி இனி இயங்காம்ல் அல்லது இருக்காமல் போகக்கூடும். அல்லது நீங்கள் அதை எழுத்துப்பிழையுடன் உள்ளிட்டிருக்கக்கூடும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  1. மின்னஞ்சல் அனுப்பும்போது முகவரியில் பின்வரும் பொதுவான தவறுகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும்:
    • மேற்கோள் குறிகள்
    • முகவரியின் முடிவில் புள்ளிகள்
    • முகவரிக்கு முன்னோ பின்னோ இடைவெளிகள்
    • எழுத்துப்பிழைகள்
  2. அதே நபர் பயன்படுத்தும் வேறு முகவரி உள்ளதா என உங்கள் தொடர்புகளில் தேடவும்.

பணியிடத்திலோ பள்ளியிலோ வேறு நிறுவனத்திலோ ஒருவருக்கு மின்னஞ்சலை அனுப்பியபின் இந்தப் பிழைச் செய்தி தோன்றினால் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

"ஸ்பேம் என மெசேஜ் கொடியிடப்பட்டது" அல்லது "மெசேஜ் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டது"

மெசேஜ் ஏன் சென்றடையவில்லை?

  • உங்கள் மெசேஜிலுள்ள உரை அல்லது இணைப்புகள் சந்தேகத்திற்குரியவையாகத் தெரிகின்றன.
  • Cc அல்லது Bccக்கு பல பெறுநர்கள் அடங்கிய பெரிய குழுவைச் சேர்த்துள்ளீர்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  1. தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் இணையதளங்களுக்கான இணைப்புகளை அகற்றவும்.
  2. பெரிய குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பும்போது Google Groups மூலம் ஒரு குழுவை உருவாக்கியபின் அதற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
    குழுவை உருவாக்குவது எப்படி என அறிக.

"பெறுநரின் சேவையகம் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை"

மெசேஜ் ஏன் சென்றடையவில்லை?

உங்கள் பெறுநரின் மின்னஞ்சல் சேவையகத்துடன் Gmailலால் இணைக்க முடியாவிட்டால் இந்தப் பிழைச் செய்தியைப் பார்ப்பீர்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

நீங்கள் எதையும் செய்யாமலே இச்சிக்கல் பொதுவாக விரைவாக நீங்கும். பிறகு மின்னஞ்சலை மீண்டும் அனுப்ப முயலவும்.

இந்தப் பிழையை தொடர்ந்து பெற்றால்:

  1. பெறுநரின் மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்று சரிபார்க்கவும்.
  2. உங்கள் பெறுநரின் மின்னஞ்சல் வழங்குநரின் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.

பணியிடத்திலோ பள்ளியிலோ வேறு நிறுவனத்திலோ ஒருவருக்கு மின்னஞ்சலை அனுப்பியபின் இந்தப் பிழைச் செய்தி தோன்றினால் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15174262227463609563
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false